Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

அந்த நாற்காலியில் அப்பாவின் நினைவு மட்டுமே படிந்திருக்க வேண்டுமென அவள் விரும்பியிருக்கலாம்

சொல்வனம்

அந்த நாற்காலியில் அப்பாவின் நினைவு மட்டுமே படிந்திருக்க வேண்டுமென அவள் விரும்பியிருக்கலாம்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

இல்லாதிருத்தல்

ஆண்டு பலவாயினும்

அப்பாவை நினைவூட்டும் பொருள்கள்

வீடெங்கும் கிடந்தன

அப்பாவைப் போல

ஒவ்வொன்றையும்

இழந்துகொண்டே

வந்திருக்கின்றேன்

எஞ்சியிருப்பது

அப்பாவின்

சாய்வு நாற்காலி மட்டுமே

அப்பா தன் வாழ்வின்

அதிக நேரங்களை

இந்தச் சாய்வு நாற்காலியில்தான்

கழித்திருக்கின்றார்.

இறுதிக்காலங்களில் அப்பா

இந்த நாற்காலியில்தான்

சாய்ந்துறங்கினார்

தேநீர் அருந்துவது

பத்திரிகைகள்

புத்தகங்கள் வாசிப்பது

குர்ஆன் ஓதுவது

எல்லாமே இந்த நாற்காலியில்தான்

இந்தச் சாய்வாசனம்

அவருக்கு ஒரு தோழமையைப் போல

அதன் தோள்களில் சாய்ந்து அப்பா

யாருக்கும் தெரியாமல்

அழுதிருக்கக்கூடும்

அப்பாவின் மறைவுக்குப் பிறகு

அம்மா

அதனருகே சாய்ந்தமர்ந்து

உறங்கியிருக்கிறாளே தவிர

அந்த நாற்காலியில் அமர்ந்ததே இல்லை

அந்த நாற்காலியில்

அப்பாவின் நினைவு மட்டுமே

படிந்திருக்க வேண்டுமென

அவள் விரும்பியிருக்கலாம்

அப்பா இல்லாத நாள்களிலும்

அப்பா இருக்கிறார்

அந்தச் சாய்வு நாற்காலியில்.

- வி.எஸ்.முஹம்மத் அமீன்

*****

சொல்வனம்

செருப்பின் சாட்சியம்

சாலை வெளியில்

ஒழுங்கற்றுக் கிடக்கும்

ஒற்றைச் செருப்புகள்

நடந்து முடிந்த கலவரத்தை

உறுதிசெய்கின்றன

தன் உரிமைக் கால்களால்

உதறிவிடப்பட்ட அவை

உயிரற்றுக் கிடக்கின்றன

சுடுவெயில் தாங்கிச்

சகித்து வரும் கைவண்டிக்காரன்

தன்கால் அளவு தேடுகிறான்

கிடைத்த இருவேறு அளவுகளின்

செருப்பணிந்த நடையில்

உயிர்பெறுகின்றன

அந்த ஒற்றைச் செருப்புகள்

அகலிகைக் கல்லாக!

- ஆர்.ஜவகர்

*****

ஒற்றை விதி

குழந்தைகள் வரையும்

வட்டத்தில் இருக்கும்

ஒரே விதி

தொடங்கிய இடத்தில்

முடிப்பது மட்டுமே!

- திருப்பூர் சாரதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism