Published:Updated:

சொல்வனம்

பக்கத்து வீட்டு அக்காவிற்கு கொரோனா பஞ்சாயத்திலிருந்து எங்கள் வீடுகளைச் சுற்றி

பிரீமியம் ஸ்டோரி

உன்னுடைய நான்

நீ தந்த

உன் திருமணப் பத்திரிகையில்

அச்சாகி இருந்ததெல்லாம்

என் காதலின்

அஞ்சலிச் சொற்கள்தான்

கை பிடித்து

என்னிடம் சொன்ன

காதலின்

பரவச நொடிகள்

ஒளி இழந்துவிட்டன

யாரும் காணாமல்

நீ கண்ணடிக்கும்

தருணங்கள்

வரப்போவதில்லை

மீண்டும்

நம்மை

தழுவிக்கொண்ட

முத்தங்களின்

ருசி

அப்படியேதான்

உறைந்து நிற்கிறது

தோள் சாய்ந்து

ஆறுதலடைந்த சொற்களெல்லாம்

தள்ளி நின்று

தேம்புகின்றன

நீ இல்லாத நாள்களை

எப்படிக் கடக்க

பெருந்துயரமாயிருக்கிறது

உன்னுடைய என்னை

தொலைக்க வேண்டும்

என்பது.

- வேல்முருகன்

*****

தொற்றும் மகிழ்ச்சி

பக்கத்து வீட்டு

அக்காவிற்கு கொரோனா

பஞ்சாயத்திலிருந்து

எங்கள் வீடுகளைச் சுற்றி

வேலி அமைத்தனர்

கந்து வட்டிக்காரர் அச்சத்தோடு

திரும்பிப் போவதைப் பார்த்து

அப்பாவிற்கு

அற்ப சந்தோஷம்.

- மணிமேகலை பாலு

சொல்வனம்

படையல்

அவளுக்குப் பிடித்த கடவுளை

அவருக்குப் பிடித்தது என்ற படையலுடன்

அம்மா காட்டினாள்

அப்புறம் அம்மாவின் வருத்தங்கள் வளர்ந்தன

நானும் வளர்ந்தேன்

அவள் வருத்தங்களும் வளர்ந்தன

எப்படியோ

அவள் வணங்கும் கடவுளர் வரிசையும் வளர்ந்தது

என்னதான் கண்ணில் நீர் துளிக்கக் கும்பிட்டாலும்

அவரவர்க்கு உகந்த படையலைத் தயாரிக்க

அவள் மறந்ததேயில்லை

அவள் துயரத்தையெல்லாம்

ருசியாக மாற்றிவிடக் கற்றிருந்தாள்

அதுதான் வினையானது போலும்

ருசி குறையாமலிருக்க

கடவுளரும் விரும்பினர்

கடைசிவரை.

- உமா மோகன்

*****

ஞான ஊற்று

பொதுக் கழிப்பிடத்து வரிசையில் நில்

வரிசையில் நின்று தண்ணீர் லாரியில் நீர் பிடித்து வா

வெயிலோடு ரேஷன் கடை வரிசையில் நின்று பார்

மின்சாரக் கட்டண வரிசைக்கு முந்திச் செல்

வரிசைக்கா பஞ்சம்

படக்கென்று கிளம்பி ஊர் சுற்றுவது சுலபம் புத்தா

வரிசையில் நின்று பிள்ளைக்கு

அட்மிஷன் வாங்கிப் பார்த்தால்

கிட்டிவிடும் ஞானம்.

- கவிஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு