Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

நமக்கென்ன கேடு நம்பிக்கை வைக்க.

சொல்வனம்

நமக்கென்ன கேடு நம்பிக்கை வைக்க.

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

மூன்றாவது வீடு

வெயில் காலத்தில்

வேப்ப மரத்தடி

மழைக்காலத்தில்

ரயில்வே பாலத்தடி என

ஏற்கெனவே

இரண்டு வீடுகள்

அவர்களுக்கு.

இப்போது

ஊரடங்கு

தந்திருக்கிறது

நகராட்சி மண்டபத்தை

மூன்றாவது வீடென.

ஏதோ ஒரு வகையில்

இருவேளை உணவாவது

கிடைப்பதால்

இதை

ராசியான வீடென்கிறாள் அம்மா.

எப்படியோ பீடி

கிடைத்துவிடுகிறது அப்பாவுக்கு.

குப்பையிலிருந்து கண்டெடுத்த காலொடித்த

மயில் பொம்மைக்கு

கொரோனா வரக்கூடாதென

வேண்டுகிறாள் லட்சுமிக்குட்டி.

சாயங்காலப் பொழுதுகளில்

மண்டப முற்றத்தில்

உதிர்ந்து கிடக்கும்

வேப்பம் பூக்களோடு

வெயிலையும்

கூட்டித் தள்ளிவிட்டு

நல்வரவு எனக்

கோலமிடுகிறாள்

ஒருத்தி.

நமக்கென்ன

கேடு

நம்பிக்கை வைக்க.

- கண்மணிராசா

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சொல்வனம்
சொல்வனம்

சமையலின் பரிமாணங்கள்

சாப்பாட்டுக்கு அடிமையாவதென்பது

ஒரு தற்செயல் நிகழ்வென்றும்

சமைக்க அடிமையாவதென்பதோ

திட்டமிட்ட நெடுங்காலப் பேரழிவென்றும்

வகுப்பெடுக்கிறார் பாட்டி

அகப்பையுடன் கீரை கடைந்தவாறே.

சமைப்பதானது

காலம்தின்னும்

ஒருவகைக் கலை என

தத்துவம் பொறிக்கிறார்

சமையற்கட்டிலேயே

வெந்துபோன அம்மா.

சமையலானது பெண்களை

பொடிவைத்து மயக்கும்

மாயச் சிந்தாந்தம்.

தான் கட்டமைத்த கோட்டைக்கு

தானே அடிமையாகிப்போகும் அவலம்.

எப்போதாவதான

ஆண்களின் சமையல் அழகு

தினசரியாகும் பெண்களுக்கு

அது பெரும்சலிப்பென

பொங்கித் தீர்க்கிறார்

நவீனப் பெண்ணொருத்தி.

அத்தனையையும் பொருத்தி

`தலைமுறை இடைவெளியே இல்லாத துறை

சமையலறை' என

பழைய

கவிதையொன்றை

எழுதி நகர்கிறார்

நவீனக் கவிஞர் ஒருவர்.

- சாமி கிரிஷ்