Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

பசியைப் போக்கும் பாவங்கள்!

சொல்வனம்

பசியைப் போக்கும் பாவங்கள்!

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

நுண்ணுயிரி

விரல்களில் நெட்டி முறித்தபடி

தனித்திருத்தலை அறிவிக்கின்றீர்கள்.

ஒவ்வொரு சொடக்கொலிக்கும்

புழுக்கமான வீடு அதிர்கிறது.

மளுக்கென்று சத்தமின்றி

கழுத்தெலும்பு முறிய

மீண்டும் ஒருமுறை

தன் களைப்பை இறக்கிவைக்கிறாள்.

தொங்கும் தலைகளுடன்

ஒவ்வொருவராக

நீண்டுகிடக்கும் அவள்

இடுப்பில் ஏறுகின்றீர்கள்.

அவள் தளர்ந்த தனங்களில்

சின்னச் சொகுசுடன் தொங்கியபடி

மணிக்கொருமுறை

கைகளைக் கழுவுகின்றீர்கள்.

கண்களுக்குப் புலப்படாத உதடுகளுடன்

உங்களைப் பார்த்துச் சிரிக்கிறாள்.

இருண்ட நோய்மையைப் போல்

அவள் கண்களில் நுழைந்து

பகல்களை வெளியேற்றுகின்றீர்கள்.

குடை ராட்டினம்போலச் சுற்றுகிறது

தலைவிரிகோலமான அடுக்களை.

பருத்த உடல்கள் நிறைந்த வீட்டில்

திணறும் சுவாசத்துடன்

கட்டப்படாத தன் அறைக்கதவுகளைத்

தட்டிக்கொண்டேயிருக்கிறது

ஒரு பழக்கப்படுத்தப்பட்ட நுண்ணுயிரி.

- சுபா செந்தில்குமார்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சொல்வனம்

பசியைப் போக்கும் பாவங்கள்!

ஒவ்வொரு ஆலயத்தின்

முன்பும் அந்தந்த

மத அடையாளத்துடன்

பிச்சையெடுப்பவர்கள்

பாத்திரமறிந்து

பிச்சையெடுத்தல் குறித்து‌

நன்கு அறிந்தவர்கள்.

ஒவ்வொரு மதமும் கதைக்கும்‌

சொர்க்கம் குறித்த கதைகள்

அவர்களின்

தட்டுகளை தாராளமாய்

நிரப்புகின்றன.

செய்த பாவங்களை

தான தர்மத்தில் கரைக்க

முயலுகிறவர்கள்

அவர்களின் தட்டுகளைப்

பசிக்கவிடுவதில்லை.

ஆலயங்களை‌த்

தவிர்த்துப் பிற இடங்களில்

பிச்சையெடுக்கிறவர்களின்

நிலைமைதான் மோசமானது

அரிதாகத் தட்டுப்படும் நேயத்துக்காக

அவர்களின் தட்டுகள்

வெகுநேரம்

பசித்திருக்கின்றன.

பல வேளைகளில்

பட்டினியும் கிடக்கின்றன.

- வீ.விஷ்ணு குமார்