எல்லாவற்றிலிருந்தும் மௌனமாயிருக்கிறது

தனித்த இரவின் கடைசிச் சொட்டு.

ஊருக்குத் திரும்பும் அப்பாவின் பாதையில்

பூத்தபடி இருக்கும் கண்களை

சோடியம் வேபர் விளக்கு வெளிச்சத்தில்

பறக்கும் தட்டான்கள் ஈர்க்கின்றன.

சாலையோரப் போக்குவரத்துகள்

காத்திருப்பின் பொழுதுபோக்குகளாகின்றன.

அடைக்கப்பட்ட வீடுகளில் அணைக்கப்பட்ட விளக்குகள்

அப்பாக்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

தேடலின் மணித்துளிகளை

நிலவொளியின் பிரவாகம் குளிரச் செய்கிறது.

ஊரடங்கியபின் இயற்கையை ஊதும் காற்றின் ஓசையில்

தென்றல் கொஞ்சம் பருத்திருக்கிறது.

நிசப்தத்தின் வெகுதூரத்தில் உதிக்கும் நாய்க்குரைப்பு

யாரோ வருவதை ஊருக்கே அம்பலப்படுத்துகிறது.

எதிர்பாராத தருணம்

மெல்லிய வெளிச்சத்தின் தொலைதூரக் குறுக்கிடலில்

இரவைக் கிழித்து முன்னேறுகிறது

டார்ச் லைட் ஒளி.

சமிக்ஞை உறுதிப்படுத்தப்பட்டதும்

எந்தவித நிர்பந்தமும் பூசிக்கொள்ளாத இரவு

தனது கடைசிச் சொட்டிலிருந்து

ஒருதுளி குழைந்து

அப்பா என்றவிழ்கிறது.

- பிறைநிலா

மலைக்காடுகளை

வரைகிறது குழந்தை

மேகம் முட்டும் மலை

மலையிலிருந்து

நீர்வீழ்ச்சி, நீலநிற நதி...

மீன்கள், நாரை அல்லது கொக்கு

கரையில்

குடிசை, பசு, நாய், ஆடு, கோழி

பறவைகள்

பெருமரங்களுக்கு இடையே

ஒற்றையடிப்பாதை

பாதையில் நடந்து செல்லும் இருமனிதர்கள்

இருவரின் தோள்களிலும்

கோடரி!

- கோ.காளீஸ்வரன்

அப்பாவின் சுவைக்காகவே

வீட்டின் நடை தூரத்தில்

அமைக்கப்பட்டிருத்த சமையலறைக்கு

அம்மா ஊரில் இல்லாதபோது

வரநேர்ந்தது

அம்மாவின் ஆயிரம் கைகளில்

தொள்ளாயிரத்துத் தொண்ணூறு கைகள்

இங்கேதான் அடுக்கியிருந்தன

உணவில் உப்பு குறைவாகவும்

காரம் அதிகமாகவும் இருந்ததற்காக

நான் கத்தியபோதெல்லாம்

இங்குவரை கேட்டிருக்க வேண்டும்...

என்னைப் பார்த்ததும்

அந்தக் கைகள் மட்டும் சற்றே

நடுங்கத் தொடங்கின

ஒருநாளேனும் அப்பாவை இங்கு அழைத்து வரவேண்டும்.

- ஆண்டன் பெனி

ஓடி ஓடிக் களைத்துப்போகிறாள் பொம்மி

முடிவில் அது

தானாக அவள் கையில் வந்தமர்கிறது

ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போலவே.

- விருட்சகன்

எல்லாவற்றிலிருந்தும் மௌனமாயிருக்கிறது

தனித்த இரவின் கடைசிச் சொட்டு.

ஊருக்குத் திரும்பும் அப்பாவின் பாதையில்

பூத்தபடி இருக்கும் கண்களை

சோடியம் வேபர் விளக்கு வெளிச்சத்தில்

பறக்கும் தட்டான்கள் ஈர்க்கின்றன.

சாலையோரப் போக்குவரத்துகள்

காத்திருப்பின் பொழுதுபோக்குகளாகின்றன.

அடைக்கப்பட்ட வீடுகளில் அணைக்கப்பட்ட விளக்குகள்

அப்பாக்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

தேடலின் மணித்துளிகளை

நிலவொளியின் பிரவாகம் குளிரச் செய்கிறது.

ஊரடங்கியபின் இயற்கையை ஊதும் காற்றின் ஓசையில்

தென்றல் கொஞ்சம் பருத்திருக்கிறது.

நிசப்தத்தின் வெகுதூரத்தில் உதிக்கும் நாய்க்குரைப்பு

யாரோ வருவதை ஊருக்கே அம்பலப்படுத்துகிறது.

எதிர்பாராத தருணம்

மெல்லிய வெளிச்சத்தின் தொலைதூரக் குறுக்கிடலில்

இரவைக் கிழித்து முன்னேறுகிறது

டார்ச் லைட் ஒளி.

சமிக்ஞை உறுதிப்படுத்தப்பட்டதும்

எந்தவித நிர்பந்தமும் பூசிக்கொள்ளாத இரவு

தனது கடைசிச் சொட்டிலிருந்து

ஒருதுளி குழைந்து

அப்பா என்றவிழ்கிறது.

- பிறைநிலா

மலைக்காடுகளை

வரைகிறது குழந்தை

மேகம் முட்டும் மலை

மலையிலிருந்து

நீர்வீழ்ச்சி, நீலநிற நதி...

மீன்கள், நாரை அல்லது கொக்கு

கரையில்

குடிசை, பசு, நாய், ஆடு, கோழி

பறவைகள்

பெருமரங்களுக்கு இடையே

ஒற்றையடிப்பாதை

பாதையில் நடந்து செல்லும் இருமனிதர்கள்

இருவரின் தோள்களிலும்

கோடரி!

- கோ.காளீஸ்வரன்

அப்பாவின் சுவைக்காகவே

வீட்டின் நடை தூரத்தில்

அமைக்கப்பட்டிருத்த சமையலறைக்கு

அம்மா ஊரில் இல்லாதபோது

வரநேர்ந்தது

அம்மாவின் ஆயிரம் கைகளில்

தொள்ளாயிரத்துத் தொண்ணூறு கைகள்

இங்கேதான் அடுக்கியிருந்தன

உணவில் உப்பு குறைவாகவும்

காரம் அதிகமாகவும் இருந்ததற்காக

நான் கத்தியபோதெல்லாம்

இங்குவரை கேட்டிருக்க வேண்டும்...

என்னைப் பார்த்ததும்

அந்தக் கைகள் மட்டும் சற்றே

நடுங்கத் தொடங்கின

ஒருநாளேனும் அப்பாவை இங்கு அழைத்து வரவேண்டும்.

- ஆண்டன் பெனி

ஓடி ஓடிக் களைத்துப்போகிறாள் பொம்மி

முடிவில் அது

தானாக அவள் கையில் வந்தமர்கிறது

ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போலவே.

- விருட்சகன்