அப்பா கொடுக்கும் முத்தங்களில்

பீடி வாடைதான் பிரதானமாய் மணக்கும்.

சட்டைப்பை துழாவி அவர் தரும்

ஒன்றிரண்டு காசுகளில்கூட

பீடி வாசனையே பிசுபிசுக்கும்.

இடைவெளியின்றி

வாயில் மினுமினுக்கும்

செந்நிறத் தீக்கங்குகள்

பீடியைவிடவும்

அதிகம் எரித்தது

அவரது நுரையீரலைத்தான்.

தினமும்

போட்டு வதைக்கும்

இருமல் இரைச்சல்களில்

எங்களின் அக்கறைகளும் அறிவுரைகளும்

அவர் காதுகளைச் சேரவேயில்லை.

கடைசிப்பீடி வாயிலிருக்க

அப்படியே இறந்துபோன அப்பா

இப்போதும்

ஆவியாக

அடிக்கடி வந்துபோகிறார்

யாரோ ஒருவர் இழுத்து விடும்

புகை வழியாக.

- சாமி கிரிஷ்

சுகவீனப்பட்ட நாளிலிருந்து

தனையொரு குழந்தையென

கவனித்து வந்த அத்தையின்

கத்தரிப்பூ நிறத்துச் சேலைமீது

அளவிலா பிரியங்களைப்

படரவிட்டிருந்தார் மாமா.

நோய்மையின் ஆழம் அதிகரிக்க

கத்தரிப்பூச் சேலையைக்

கொஞ்சம் கொஞ்சமாய்க் கிழித்து

மாமாவின் கடைவாய் ஒழுகுதலை

துடைத்துக்கொண்டிருந்தார் அத்தை.

வாழ்வின் இறுதித் தருணங்களில்

மிச்சம் மீதியிருந்த

சேலையைத் துவைத்து உலர வைக்க

புழக்கடை சென்ற

அத்தையின் நாசிக்கருகே

மாமாவின் சுவாச வாசம் வந்து உரச

பதற்றத்தில் வீடடைந்த அத்தையின்

பார்வைக்குக் கிடைத்தது

விட்டத்தைப் பார்த்தபடியே

மலர்ச்சியோடு மரணித்திருந்த

மாமாவின் முகத்தில் நிறைந்திருந்த

கத்தரிப்பூ வண்ணம்.

- தமிழ்த்தென்றல்

தன் சிறிய கடையை

ஞாயிற்றுக்கிழமை என்பதாலும்

வியாபாரமில்லை என்பதாலும்

நேரத்திலேயே பூட்டிவிட்டு

இரவைப் பொட்டலமாக்கி

கையில் எடுத்துச்செல்கிறான் அவன்

பொட்டலமாக்கிய இரவுக்குள்

கொஞ்சம் நட்சத்திரங்களிருக்கின்றன

கொஞ்சம் மேகங்களிருக்கின்றன

கொஞ்சம் விளக்குகளிருக்கின்றன

வீட்டை அடைந்ததும்

அப்பா ஏதேனும் தனக்கு

வாங்கி வந்திருப்பாரென

ஓடிவந்து

அப்பாவென கால்களைக் கட்டிக்கொண்ட

மகளிடத்து

பொட்டலத்தைப் பிரித்து

நட்சத்திரங்களையும் மேகங்களையும்

எடுத்துக்கொடுத்தவன்

விளக்குகளை அணைத்துவிட்டு

பொட்டலத்தில் மீதமிருந்த இரவை

தன்மீதெடுத்துப் போர்த்திக்கொண்டு

உறங்கத் தொடங்குகிறான்

உறங்கத் தொடங்கிய அவன்மீது

நட்சத்திரங்களையும் மேகங்களையும் பரப்பி

அவனை வானமாக்கிய மகள்

பௌர்ணமி நிலவாக மாறி

வானத்தைக் கட்டிப்பிடித்து

உறங்கத் தொடங்குகிறாள்

நட்சத்திரங்களின்

சின்னச் சின்ன வெளிச்சத்திலும்

பௌர்ணமி நிலவின்

குளிர் வெளிச்சத்திலும்

அழகாக நகரத்தொடங்குகிறது இரவு.

- சௌவி

அப்பா கொடுக்கும் முத்தங்களில்

பீடி வாடைதான் பிரதானமாய் மணக்கும்.

சட்டைப்பை துழாவி அவர் தரும்

ஒன்றிரண்டு காசுகளில்கூட

பீடி வாசனையே பிசுபிசுக்கும்.

இடைவெளியின்றி

வாயில் மினுமினுக்கும்

செந்நிறத் தீக்கங்குகள்

பீடியைவிடவும்

அதிகம் எரித்தது

அவரது நுரையீரலைத்தான்.

தினமும்

போட்டு வதைக்கும்

இருமல் இரைச்சல்களில்

எங்களின் அக்கறைகளும் அறிவுரைகளும்

அவர் காதுகளைச் சேரவேயில்லை.

கடைசிப்பீடி வாயிலிருக்க

அப்படியே இறந்துபோன அப்பா

இப்போதும்

ஆவியாக

அடிக்கடி வந்துபோகிறார்

யாரோ ஒருவர் இழுத்து விடும்

புகை வழியாக.

- சாமி கிரிஷ்

சுகவீனப்பட்ட நாளிலிருந்து

தனையொரு குழந்தையென

கவனித்து வந்த அத்தையின்

கத்தரிப்பூ நிறத்துச் சேலைமீது

அளவிலா பிரியங்களைப்

படரவிட்டிருந்தார் மாமா.

நோய்மையின் ஆழம் அதிகரிக்க

கத்தரிப்பூச் சேலையைக்

கொஞ்சம் கொஞ்சமாய்க் கிழித்து

மாமாவின் கடைவாய் ஒழுகுதலை

துடைத்துக்கொண்டிருந்தார் அத்தை.

வாழ்வின் இறுதித் தருணங்களில்

மிச்சம் மீதியிருந்த

சேலையைத் துவைத்து உலர வைக்க

புழக்கடை சென்ற

அத்தையின் நாசிக்கருகே

மாமாவின் சுவாச வாசம் வந்து உரச

பதற்றத்தில் வீடடைந்த அத்தையின்

பார்வைக்குக் கிடைத்தது

விட்டத்தைப் பார்த்தபடியே

மலர்ச்சியோடு மரணித்திருந்த

மாமாவின் முகத்தில் நிறைந்திருந்த

கத்தரிப்பூ வண்ணம்.

- தமிழ்த்தென்றல்

தன் சிறிய கடையை

ஞாயிற்றுக்கிழமை என்பதாலும்

வியாபாரமில்லை என்பதாலும்

நேரத்திலேயே பூட்டிவிட்டு

இரவைப் பொட்டலமாக்கி

கையில் எடுத்துச்செல்கிறான் அவன்

பொட்டலமாக்கிய இரவுக்குள்

கொஞ்சம் நட்சத்திரங்களிருக்கின்றன

கொஞ்சம் மேகங்களிருக்கின்றன

கொஞ்சம் விளக்குகளிருக்கின்றன

வீட்டை அடைந்ததும்

அப்பா ஏதேனும் தனக்கு

வாங்கி வந்திருப்பாரென

ஓடிவந்து

அப்பாவென கால்களைக் கட்டிக்கொண்ட

மகளிடத்து

பொட்டலத்தைப் பிரித்து

நட்சத்திரங்களையும் மேகங்களையும்

எடுத்துக்கொடுத்தவன்

விளக்குகளை அணைத்துவிட்டு

பொட்டலத்தில் மீதமிருந்த இரவை

தன்மீதெடுத்துப் போர்த்திக்கொண்டு

உறங்கத் தொடங்குகிறான்

உறங்கத் தொடங்கிய அவன்மீது

நட்சத்திரங்களையும் மேகங்களையும் பரப்பி

அவனை வானமாக்கிய மகள்

பௌர்ணமி நிலவாக மாறி

வானத்தைக் கட்டிப்பிடித்து

உறங்கத் தொடங்குகிறாள்

நட்சத்திரங்களின்

சின்னச் சின்ன வெளிச்சத்திலும்

பௌர்ணமி நிலவின்

குளிர் வெளிச்சத்திலும்

அழகாக நகரத்தொடங்குகிறது இரவு.

- சௌவி