Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

வாயிற்காவல் தாத்தா

சொல்வனம்

வாயிற்காவல் தாத்தா

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

மீன் பிடித்துக்கொண்டிருந்தாள் கமநிதா

அவள் அன்பில் அகப்படுதலின் பொருட்டு

பேராவல் கொண்ட விண்மீன்கள்

வானத்தைக் கடலாக்கி நீந்தத்தொடங்கின

தன் விரிகூந்தல் இழைகளை

அலைகளாக இடம்மாற்றியிருந்த  

தடாகத்திற்குப் பாதங்களைப் பரிசளித்தபடி வீசிய தூண்டிலின் தக்கை இழுபடும்

குறிப்பறிந்த கமநிதா

தூண்டிலை இழுத்ததில் சிக்கியிருந்தது நிலவு

துள்ளத் துடிக்கப் பொற்கரத்தில் மோட்சமுறும்

கதியற்றுக் கலங்கிய நட்சத்திரங்கள்

காலைப் புல்வெளியில்

கமநிதா பாதங்களை முத்தமிட்டு அடங்கின

பொறாமையில் தகித்த கண்ணுற்ற சூரியன்

வெயிலை வாரி இறைத்தபடி

நாளையேனும் மீனாகும் பிரார்த்தனையில்

கண்கள் சிவக்க மேற்கில் சரிந்தது

தாய்மையின் கருணை பொங்க

தன் தூண்டிலை

கிழக்கிற்கு அருளினாள் கமநிதா

- கோ. பாரதிமோகன்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சொல்வனம்

ஆளாய் நிற்கும் பொம்மை

சோளக்காட்டுக்குள் காக்கை குருவிகளுக்காக ஆச்சி பேச்சியம்மாள் ஊன்றிவைத்தாள் நிலப்பொம்மை.

முதலில் வைக்கோல் தயார் செய்தாள்

தன் அண்ணன் கருப்பையா சட்டையைத்

தயார் செய்தாள்

உருவமானது சோளக்காட்டுப் பொம்மை.

காக்கைகளும் குருவிகளும் ஆள் நிற்பதாய்க் கண்டு சோளம் கொறிக்க வருவதில்லை.

பின்னொரு மழைநாளில் அடித்த காற்றில் ஆடைகள் பறக்க

மிஞ்சியிருந்த வைக்கோல் கூடு குடிலானது

வனாந்தரப் பறவைகள் காக்கையோடு குருவியும் தங்கிவிட்டுச் செல்கின்றன.

- வீரசோழன் க.சோ.திருமாவளவன்

வாயிற்காவல் தாத்தா

ஒரு தாத்தா

தன் நாயோடு பூங்காவில்

நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்

ஒரு தாத்தா

தன் அலுவலகத்துப் பழைய நண்பர்களோடு

தான் சமீபத்தில் படித்த

மனங்கவர்ந்த நாவலைப் பற்றி

விவரித்துக்கொண்டிருக்கிறார்

ஒரு தாத்தா

விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும்

அமெரிக்கப் பேரன் பேத்திகளோடு

ஆனந்தமாய்க் கதைத்துக்கொண்டிருக்கிறார்

ஒரு தாத்தா

முழுத்தலை நரைத்த தன் மனைவியின்

கரம்பற்றியபடி

பொங்கும் காதலோடு

நடந்துகொண்டிருக்கிறார்

ஒரு தாத்தா

ஜீன்ஸ் போட்டு அமர்ந்தபடி

வீட்டிலிருந்து கொண்டு வந்த அரிசியை

புறாக்களுக்குத் தூவிக்கொண்டிருக்கிறார்

அதே பூங்காவில்

அதே வயதொத்த ஒரு தாத்தா

ஒட்டிய வயிற்றோடும்

குழிவிழுந்த கண்களோடும்

வலிக்கின்ற கால்களோடும்

வாயிற்காவலாளியாக நின்றுகொண்டிருக்கிறார்

பகல் முடிந்து

இரவு கவிழத் தொடங்குகிறது

எல்லோருக்காகவும் பாரபட்சமின்றி.

- சௌவி