புத்தரின் சாயல் பூனைக்கு

கண்களின் சிமிட்டல்களில்

சேமித்த நட்சத்திரங்களை,

உதிர்க்கும்

ஒவ்வொரு `மியாவ்'க்கும்

பூனைகளின் பிரபஞ்சங்கள்.

அதற்குள் நுழையுமுன்

உங்கள் வாலைச் சுருட்டிக்கொள்ளுங்கள்.

பூனைகளின் ராஜ்ஜியமென்பது

மிகச்சிறியதுதான்.

ராஜாவாகவோ ராணியாகவோ

கம்பீரமாக அமர்ந்துவிடுகிறது.

செவ்வனே சேவகம் செய்வது

நம் கடமையாகிவிடுகிறது.

பூனை கண்களை மூடியதும்

இருட்டிவிடும் உலகத்தில்

இரண்டு மின்மினிப்பூச்சிகள் பறக்கின்றன.

அதைத் தாவித் தாவிப் பிடித்து விளையாடலாம்

வால்கள் முளைத்த யாரும்.

உறி அறியாத பூனைகள்,

அடுக்ககங்களின்

கேஸ் ஸ்டவ்களின் மேல் உறங்குகின்றன.

ஸொமேட்டோக்கள்,

ஸ்விகி-களின்

அழைப்புமணிச்சத்தங்கள்தான்

எழுப்பிவிடுகின்றன அதன் பசியை.

பூனையை

உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு

வெளியே பாய்ந்தோடுகிறீர்கள்.

உங்களை

வெளியே தள்ளிச் சாத்திவிட்டு

உள்ளே பதுங்கும் பூனைக்கு

புத்தரின் சாயல்.

- வலங்கைமான் நூர்தீன்

மௌனமாக்கப்பட்ட இசை

துணியிலிட்டு

சுவரில் தொங்கவிடப்பட்டுள்ள

நாகஸ்வரத்திற்கும்

நல்ல நாகஸ்வரக் கலைஞன் என

எப்போதோ பரிசு வழங்கப்பட்டதன்

சாட்சியாக மாட்டப்பட்டிருக்கும்

புகைப்படத்திற்கும்

இடையே வலைகட்டி

பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிட்டுவிட்டு

உறங்கிக்கொண்டிருக்கிறது சிலந்தி

கையிருப்பெல்லாம் கரைந்து

கருப்பராயன் ஃபைனான்ஸில்

ஆறு வட்டியென்று வாங்கிய கடனில்

அடுப்படி இயங்குகிறது

அப்பா அம்மா போனபின்பு

அநாதையாகிவிடாமல்

வளர்த்த பாட்டியின்

வைத்தியச் செலவுக்கு

இனி காசில்லை என்பதால்

போய்ச்சேர்ந்தால் பரவாயில்லை

என எதிர்பார்ப்பு வந்தாயிற்று

ஆன்லைன் வகுப்புகளென்று

வீட்டுக்கு வந்த பள்ளிக்கூடம்

வங்கி அட்டையில் வைத்திருந்த

அத்தனை பணத்தையும்

மொத்தமாய்ச்

சுருட்டிக்கொண்டுபோய்விட்டு

இன்னும் பத்தவில்லை என

மகனையும் மகளையும் விட்டு

சண்டைபோட வைக்கிறது

அத்தனை அழுத்தங்களோடு படுத்துத்

தூக்கம் வராது புரண்டு புரண்டு

நான்கைந்து பீடி புகைத்து

பின்னிரவில் தூங்கிப்போகும்

நாகஸ்வர வித்வான் நமச்சிவாயத்தின் முகம்

மலர்ந்துவிடுகிறது

கனவில் தவறாமல் ஒலிக்கும்

நாகஸ்வரக் கச்சேரி கேட்டு.

- சௌவி

இரண்டாவது

கண்ணில் பார்க்கப்படும்

வீடு தேடிப் பொருள் விற்பவளின்

முதல் கண்

பள்ளிக்குச் சென்ற

குழந்தை மீதிருக்கிறது.

சிலையாய் நிற்கும் கால்களுக்காக

பூமியே நடந்து சென்று

மேற்கைக் கடக்கிறது.

பூமியின் பாதச்சுவடுகள்

காலத்தின் மீது

தூசியாய்ப் படிந்திருக்கிறது.

பாதச்சுவட்டின்

படிமத்தை அழிப்பதற்கு

எந்த மழையையும்

அது தேக்குவதில்லை.

முருங்கை இலையில்

பியானோ வாசிக்கும்

தூறலின் சாதுரியம்

பாதத்தின் பள்ளத்தில்

காலில் விழுந்தும்

நகம்கூட நனையவில்லை.

இரண்டு கண்களும்

இணையாத பார்வையில்

மூன்றாவது கண்ணின்

முப்பரிமாணக் கலைடாஸ்கோப்பில்

உடைந்த வளையல் துண்டுகளின்

கணீர் சத்தங்கள்.

- காரைக்குடி சாதிக்

புத்தரின் சாயல் பூனைக்கு

கண்களின் சிமிட்டல்களில்

சேமித்த நட்சத்திரங்களை,

உதிர்க்கும்

ஒவ்வொரு `மியாவ்'க்கும்

பூனைகளின் பிரபஞ்சங்கள்.

அதற்குள் நுழையுமுன்

உங்கள் வாலைச் சுருட்டிக்கொள்ளுங்கள்.

பூனைகளின் ராஜ்ஜியமென்பது

மிகச்சிறியதுதான்.

ராஜாவாகவோ ராணியாகவோ

கம்பீரமாக அமர்ந்துவிடுகிறது.

செவ்வனே சேவகம் செய்வது

நம் கடமையாகிவிடுகிறது.

பூனை கண்களை மூடியதும்

இருட்டிவிடும் உலகத்தில்

இரண்டு மின்மினிப்பூச்சிகள் பறக்கின்றன.

அதைத் தாவித் தாவிப் பிடித்து விளையாடலாம்

வால்கள் முளைத்த யாரும்.

உறி அறியாத பூனைகள்,

அடுக்ககங்களின்

கேஸ் ஸ்டவ்களின் மேல் உறங்குகின்றன.

ஸொமேட்டோக்கள்,

ஸ்விகி-களின்

அழைப்புமணிச்சத்தங்கள்தான்

எழுப்பிவிடுகின்றன அதன் பசியை.

பூனையை

உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு

வெளியே பாய்ந்தோடுகிறீர்கள்.

உங்களை

வெளியே தள்ளிச் சாத்திவிட்டு

உள்ளே பதுங்கும் பூனைக்கு

புத்தரின் சாயல்.

- வலங்கைமான் நூர்தீன்

மௌனமாக்கப்பட்ட இசை

துணியிலிட்டு

சுவரில் தொங்கவிடப்பட்டுள்ள

நாகஸ்வரத்திற்கும்

நல்ல நாகஸ்வரக் கலைஞன் என

எப்போதோ பரிசு வழங்கப்பட்டதன்

சாட்சியாக மாட்டப்பட்டிருக்கும்

புகைப்படத்திற்கும்

இடையே வலைகட்டி

பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிட்டுவிட்டு

உறங்கிக்கொண்டிருக்கிறது சிலந்தி

கையிருப்பெல்லாம் கரைந்து

கருப்பராயன் ஃபைனான்ஸில்

ஆறு வட்டியென்று வாங்கிய கடனில்

அடுப்படி இயங்குகிறது

அப்பா அம்மா போனபின்பு

அநாதையாகிவிடாமல்

வளர்த்த பாட்டியின்

வைத்தியச் செலவுக்கு

இனி காசில்லை என்பதால்

போய்ச்சேர்ந்தால் பரவாயில்லை

என எதிர்பார்ப்பு வந்தாயிற்று

ஆன்லைன் வகுப்புகளென்று

வீட்டுக்கு வந்த பள்ளிக்கூடம்

வங்கி அட்டையில் வைத்திருந்த

அத்தனை பணத்தையும்

மொத்தமாய்ச்

சுருட்டிக்கொண்டுபோய்விட்டு

இன்னும் பத்தவில்லை என

மகனையும் மகளையும் விட்டு

சண்டைபோட வைக்கிறது

அத்தனை அழுத்தங்களோடு படுத்துத்

தூக்கம் வராது புரண்டு புரண்டு

நான்கைந்து பீடி புகைத்து

பின்னிரவில் தூங்கிப்போகும்

நாகஸ்வர வித்வான் நமச்சிவாயத்தின் முகம்

மலர்ந்துவிடுகிறது

கனவில் தவறாமல் ஒலிக்கும்

நாகஸ்வரக் கச்சேரி கேட்டு.

- சௌவி

இரண்டாவது

கண்ணில் பார்க்கப்படும்

வீடு தேடிப் பொருள் விற்பவளின்

முதல் கண்

பள்ளிக்குச் சென்ற

குழந்தை மீதிருக்கிறது.

சிலையாய் நிற்கும் கால்களுக்காக

பூமியே நடந்து சென்று

மேற்கைக் கடக்கிறது.

பூமியின் பாதச்சுவடுகள்

காலத்தின் மீது

தூசியாய்ப் படிந்திருக்கிறது.

பாதச்சுவட்டின்

படிமத்தை அழிப்பதற்கு

எந்த மழையையும்

அது தேக்குவதில்லை.

முருங்கை இலையில்

பியானோ வாசிக்கும்

தூறலின் சாதுரியம்

பாதத்தின் பள்ளத்தில்

காலில் விழுந்தும்

நகம்கூட நனையவில்லை.

இரண்டு கண்களும்

இணையாத பார்வையில்

மூன்றாவது கண்ணின்

முப்பரிமாணக் கலைடாஸ்கோப்பில்

உடைந்த வளையல் துண்டுகளின்

கணீர் சத்தங்கள்.

- காரைக்குடி சாதிக்