பித்து

பாதக்கமலங்கள்

என்றெல்லாம் இல்லை

கரிசல் காட்டுச் சூரியன்

முத்தமிடும்

மண் விரிசல்போல

உன்

பித்த வெடிப்புப் பாதங்களே

பிடித்தமாயிருக்கிறது.

- வெள்ளூர் ராஜா

டார்வினும் முட்டுச்சந்தும்

ஒவ்வொரு முட்டுச்சந்திலும்

ஒரு வாய்ப்புக்கான இருப்பு

ஒளிந்திருக்கிறது...

வாய்ப்பைக் காண்பவன் அதற்கான

முஸ்தீபுகளை மேற்கொள்ளத் திராணியற்று இருக்கிறான்...

முஸ்தீபுகளை மேற்கொள்ளும் திராணியுள்ளவனின்

பார்வைக்கு

வாய்ப்புகள் தெரிய மறுக்கின்றன...

இரண்டும் அமையப்பெற்றவனின் நிமித்தமே

அந்த முட்டுச்சந்து

தகவமைகிறது...

பரிணாம வளர்ச்சிக்கோட்பாடானது

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை காத்திருந்து

தன் பொருட்டு

டார்வினைப் பிரசவித்ததுபோல...

- ராம்பிரசாத்

இரங்கல் பயணம்

யாரென்று தெரியவில்லை

எப்படியென்று

அறியவில்லை

எந்த ஊர் எனக்

கேட்கவில்லை...

RIP

என்ற ஒற்றை வார்த்தையில்

கடந்துகொண்டிருக்கிறோம்...

ஒவ்வொரு மரணத்தையும்!

- மு.முபாரக்

புழுக்கம்

நகரத்தில் நான் கட்டிய

புது வீட்டில் இயன்றளவு

நிறைய சன்னலை அமைக்க

நிர்பந்தித்திருந்தார் அப்பா

காற்றுக்கும் வெளிச்சத்திற்கும்

குறைவில்லாமல் இருக்க வேண்டுமென...

அதன்படியே செய்துவிட்டாலும்

புழுக்கத்தில் அடைந்து எல்.ஈ.டி.

பல்புகள் சூழ குடித்தனம்

நடத்திக்கொண்டிருக்கிறோம்

கொசுக்களுக்கும் மாசுக்களுக்கும்

அஞ்சியபடி...

இப்போதெல்லாம் சன்னலுக்கு

அப்பால்

டிராபிக் சத்தங்களையும் மீறி

அப்பாவிற்கு மட்டுமே சன்னமான குரலில் கேட்கிறது

அவர் ஏங்கிய

குளிர்காற்றின் விசும்பலும் வெளிச்சத்தின் முணுமுணுப்புகளும்.

- தி.கலையரசி

பித்து

பாதக்கமலங்கள்

என்றெல்லாம் இல்லை

கரிசல் காட்டுச் சூரியன்

முத்தமிடும்

மண் விரிசல்போல

உன்

பித்த வெடிப்புப் பாதங்களே

பிடித்தமாயிருக்கிறது.

- வெள்ளூர் ராஜா

டார்வினும் முட்டுச்சந்தும்

ஒவ்வொரு முட்டுச்சந்திலும்

ஒரு வாய்ப்புக்கான இருப்பு

ஒளிந்திருக்கிறது...

வாய்ப்பைக் காண்பவன் அதற்கான

முஸ்தீபுகளை மேற்கொள்ளத் திராணியற்று இருக்கிறான்...

முஸ்தீபுகளை மேற்கொள்ளும் திராணியுள்ளவனின்

பார்வைக்கு

வாய்ப்புகள் தெரிய மறுக்கின்றன...

இரண்டும் அமையப்பெற்றவனின் நிமித்தமே

அந்த முட்டுச்சந்து

தகவமைகிறது...

பரிணாம வளர்ச்சிக்கோட்பாடானது

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை காத்திருந்து

தன் பொருட்டு

டார்வினைப் பிரசவித்ததுபோல...

- ராம்பிரசாத்

இரங்கல் பயணம்

யாரென்று தெரியவில்லை

எப்படியென்று

அறியவில்லை

எந்த ஊர் எனக்

கேட்கவில்லை...

RIP

என்ற ஒற்றை வார்த்தையில்

கடந்துகொண்டிருக்கிறோம்...

ஒவ்வொரு மரணத்தையும்!

- மு.முபாரக்

புழுக்கம்

நகரத்தில் நான் கட்டிய

புது வீட்டில் இயன்றளவு

நிறைய சன்னலை அமைக்க

நிர்பந்தித்திருந்தார் அப்பா

காற்றுக்கும் வெளிச்சத்திற்கும்

குறைவில்லாமல் இருக்க வேண்டுமென...

அதன்படியே செய்துவிட்டாலும்

புழுக்கத்தில் அடைந்து எல்.ஈ.டி.

பல்புகள் சூழ குடித்தனம்

நடத்திக்கொண்டிருக்கிறோம்

கொசுக்களுக்கும் மாசுக்களுக்கும்

அஞ்சியபடி...

இப்போதெல்லாம் சன்னலுக்கு

அப்பால்

டிராபிக் சத்தங்களையும் மீறி

அப்பாவிற்கு மட்டுமே சன்னமான குரலில் கேட்கிறது

அவர் ஏங்கிய

குளிர்காற்றின் விசும்பலும் வெளிச்சத்தின் முணுமுணுப்புகளும்.

- தி.கலையரசி