தூண்டிலில் பிடிபட்டுத்

துள்ளும்

மீனின் குடலில்

செரிக்கப்படும்வரை

துள்ளிக்கொண்டுதானிருந்தது

தலையறுந்த

மண்புழுவின் வால்.

- அயன் கேசவன்

எப்போதும்

அறையின் மூலையில்

எப்போதும்

ஒரு பூங்கொத்தாக வாழ்கிறேன்

இந்த அறை எப்போதும்

துர்நாற்றமானது

வரும் விருந்தாளிகள்

முகஞ்சுளிக்க வாய்ப்புகள் அதிகம்

அதனால்தான்

எல்லாக் காலங்களிலும்

ஒரு பூங்கொத்தாக இருக்கிறேன்

எனக்கும்

உலகம் சுற்ற ஆசைதான்

தெருவெங்கும் பேசித்தீர்க்க

இருக்கின்றன சொற்கள்

ஒரு பூங்கொத்தாக இருப்பது

எவ்வகையான சிரமம் என்பதைக்

கூறிவிடவாவது ஆசைதான்

ஒரு பூங்கொத்தின் பணி

வாசனையோடு இருப்பது மட்டும்தான் என

கண்டிக்கவும் செய்கிறார்கள்.

- க.அம்சப்ரியா

சுவரில்லாச் சித்திரங்கள்

நான் மட்டும்

வசிக்கும் வீட்டுச்சுவரில்

இருளில் முட்டிகொண்டு

‘சாரி’ என்கிறேன்...

சிறு சுண்ணப்பூச்சுதிர்த்து

பதிலளிக்கிறது சுவர்...

நான் மட்டும் வசிக்கும்

வீடில்லைதானே அது...

- சுசித்ரா மாரன்

பொம்மை ஞாபகம்

சிறுவயதில் வைத்திருந்த

பொம்மையொன்று ஞாபகத்திற்கு வருகிறது

நாணயத்தைப் பொத்தான்மேல் வைத்தவுடன்

கதவைத் திறந்தபடியே

தாவிவரும் நாய்க்குட்டி

நாணயத்தைக் காலால் பிடித்தவாறு

உள்நகர்த்திச் செல்லும்

நாணயங்கள் இல்லாதபோது

சிறு கல்லை வைப்பேன்

நெஞ்சைஅழுத்தும்

வெறுப்பையும் புறக்கணிப்பையும்

அன்பென

இதயம் எளிதில் நம்பிவிடுவதில்லையா...

அதைப்போலவே

கல்லையும் தயக்கமின்றி இழுத்துச் சென்று விடும்

இந்த முறையேனும் நாணயமொன்று

பொத்தானை அழுத்தாதா

என ஏங்குவதில்லை

மாறாக

பொத்தானை அழுத்தும் அனைத்தையுமே

நாணயமென நம்பிவிடுகிறது நாய்க்குட்டி.

- ஹரிகரன்

பயம்!

முரட்டு மீசையில்

உருட்டி விழிக்கும் சாமிக்கு

பயப்படாது

படையலில் தனக்குப் பிடித்த

பலகாரமொன்றை

எடுத்துச் சாப்பிடும் குழந்தை

பின் பயந்து பணிகிறது

சாமி கண்ணைக் குத்திடும் என்ற அம்மாவின் மிரட்டலுக்கு!

- திருமயம் பெ.பாண்டியன்

தூண்டிலில் பிடிபட்டுத்

துள்ளும்

மீனின் குடலில்

செரிக்கப்படும்வரை

துள்ளிக்கொண்டுதானிருந்தது

தலையறுந்த

மண்புழுவின் வால்.

- அயன் கேசவன்

எப்போதும்

அறையின் மூலையில்

எப்போதும்

ஒரு பூங்கொத்தாக வாழ்கிறேன்

இந்த அறை எப்போதும்

துர்நாற்றமானது

வரும் விருந்தாளிகள்

முகஞ்சுளிக்க வாய்ப்புகள் அதிகம்

அதனால்தான்

எல்லாக் காலங்களிலும்

ஒரு பூங்கொத்தாக இருக்கிறேன்

எனக்கும்

உலகம் சுற்ற ஆசைதான்

தெருவெங்கும் பேசித்தீர்க்க

இருக்கின்றன சொற்கள்

ஒரு பூங்கொத்தாக இருப்பது

எவ்வகையான சிரமம் என்பதைக்

கூறிவிடவாவது ஆசைதான்

ஒரு பூங்கொத்தின் பணி

வாசனையோடு இருப்பது மட்டும்தான் என

கண்டிக்கவும் செய்கிறார்கள்.

- க.அம்சப்ரியா

சுவரில்லாச் சித்திரங்கள்

நான் மட்டும்

வசிக்கும் வீட்டுச்சுவரில்

இருளில் முட்டிகொண்டு

‘சாரி’ என்கிறேன்...

சிறு சுண்ணப்பூச்சுதிர்த்து

பதிலளிக்கிறது சுவர்...

நான் மட்டும் வசிக்கும்

வீடில்லைதானே அது...

- சுசித்ரா மாரன்

பொம்மை ஞாபகம்

சிறுவயதில் வைத்திருந்த

பொம்மையொன்று ஞாபகத்திற்கு வருகிறது

நாணயத்தைப் பொத்தான்மேல் வைத்தவுடன்

கதவைத் திறந்தபடியே

தாவிவரும் நாய்க்குட்டி

நாணயத்தைக் காலால் பிடித்தவாறு

உள்நகர்த்திச் செல்லும்

நாணயங்கள் இல்லாதபோது

சிறு கல்லை வைப்பேன்

நெஞ்சைஅழுத்தும்

வெறுப்பையும் புறக்கணிப்பையும்

அன்பென

இதயம் எளிதில் நம்பிவிடுவதில்லையா...

அதைப்போலவே

கல்லையும் தயக்கமின்றி இழுத்துச் சென்று விடும்

இந்த முறையேனும் நாணயமொன்று

பொத்தானை அழுத்தாதா

என ஏங்குவதில்லை

மாறாக

பொத்தானை அழுத்தும் அனைத்தையுமே

நாணயமென நம்பிவிடுகிறது நாய்க்குட்டி.

- ஹரிகரன்

பயம்!

முரட்டு மீசையில்

உருட்டி விழிக்கும் சாமிக்கு

பயப்படாது

படையலில் தனக்குப் பிடித்த

பலகாரமொன்றை

எடுத்துச் சாப்பிடும் குழந்தை

பின் பயந்து பணிகிறது

சாமி கண்ணைக் குத்திடும் என்ற அம்மாவின் மிரட்டலுக்கு!

- திருமயம் பெ.பாண்டியன்