Published:Updated:

புக்கர் பரிசை வென்றார் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக!

ஷெஹான் கருணாதிலக

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக இந்த ஆண்டிற்கான 2022 புக்கர் பரிசை வென்றுள்ளார்.

புக்கர் பரிசை வென்றார் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக!

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக இந்த ஆண்டிற்கான 2022 புக்கர் பரிசை வென்றுள்ளார்.

Published:Updated:
ஷெஹான் கருணாதிலக

சர்வதேச அளவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதாக புக்கர் பரிசு கருதப்படுகிறது. புக்கர் பரிசு எனப்படும் இந்த விருது, கடந்த 1969-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு லண்டனில் பிரசுரமாகும் நாவல்களுக்கு வழங்கப்படும் இவ்விருது உலக அளவில் மிகப் பிரபலமானவை.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசுக்கு, உலகம் முழுவதிலும் இருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது `தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மேடா' (மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்) என்ற புனைகதைக்காக ஷெஹான் கருணாதிலக இந்த புக்கர் பரிசை வென்றுள்ளார்.

ஷெஹான் கருணாதிலக
ஷெஹான் கருணாதிலக

இந்த நாவல், விடுதலைப் புலிகள் - இலங்கை ராணுவம் இடையே நடந்த போரில் கொல்லப்பட்ட புகைப்பட கலைஞர் குறித்து விவரிக்கப்பட்டு, இலங்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவுக் கதையாக எழுதப்பட்டுள்ளது. ரவுண்ட் ஹவுஸில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் இங்கிலாந்து அரசர் 3-ம் சார்லசின் மனைவியும், ராணியுமான கமீலா கலந்துகொண்டார். புக்கர் பரிசுக்காக அளிக்கப்படும் 50,000 யூரோ பரிசுத் தொகையாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.