Published:Updated:

இது `ட்ராமா ஃப்ரம் ஹோம்'... நாடகக் குழுவின் அடடே பிளான்!

இந்த நாடகத்தை வீட்டிலிருந்தபடியே மக்கள் காண வகை செய்துள்ளது திணை நிலவாசிகள் நாடகக்குழு.

இன்று உலக நாடக தினம். ஒவ்வோர் ஆண்டும் நாடக தினத்தையொட்டி பல நாடகக் குழுக்கள் சென்னையின் பல்வேறு அரங்குகளில் தங்களின் நாடகங்களை அரங்கேற்றும். ஆனால், தற்போது கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழலில் பல நிகழ்ச்சிகள் தடைபட்டுள்ளன. நேரில் சென்று பார்ப்பதற்கு சாத்தியப்படும் நாடக நிகழ்வை, நேரலையாக நிகழ்த்த உள்ளனர் திணைநிலவாசிகள் நாடகக் குழுவினர். நாடக தினத்தையொட்டி இன்று மாலை இணைய வழி நேரலை நாடக முயற்சியை அவர்கள் அரங்கேற்ற உள்ளனர். இந்த நாடகத்தை வீட்டிலிருந்தபடியே மக்கள் காண வகை செய்துள்ளனர்.

திணைநிலவாசிகள்
திணைநிலவாசிகள்
``இசை இருக்கும்... இடையில் கொஞ்சம் அரசியலும் இருக்கும்!'' - நாடக மேடையேறும் `வொண்டர்லேண்ட்' அலெக்ஸ்

Zoom cloud meeting ஆப் மூலமாக அதை வீட்டிலிருந்தபடியே மக்கள் காணும்படி செய்துள்ளார்கள். இதுகுறித்து திணைநிலவாசிகள் குழுவின் இயக்குநர் பகுவிடம் பேசினோம். ``உலக நாடக தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாட திணைநிலவாசிகள் குழு சார்பில் `காட்லா' கலைத் திருவிழாவைத் திட்டமிட்டிருந்தோம்.

கொரோனா காரணமாக ஒன்றுகூடி இயங்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. அதனால் புது முயற்சியாக அவரவர் வீட்டிலிருந்தபடியே நாடகக் கலைஞர்கள் நேரலையில் நாடகத்தை நிகழ்த்துவார்கள். மாலை 5 மணிக்கு துவங்கவுள்ள இந்த நிகழ்வை மக்கள் " Zoom Cloud settings app" மூலம் வீட்டிலிருந்தபடியே காணும் வகையில் வழிசெய்துள்ளோம். இனிவரும் நாள்களில் தினமும் இணையம் வழியாகவே கதை சொல்லல், இசைக் கச்சேரி போன்ற கலைவடிவங்களைத் தொடர்ந்து நிகழ்த்திக்காட்ட உள்ளோம். அதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை" என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு