Published:Updated:

"கன்டென்ட்தான் முக்கியம், டூல் இல்லை!"- ஸ்ட்ரீட் போட்டோகிராபர் விடுதலைமணி தர்மராஜ்

கடற்கரை
News
கடற்கரை

"உங்களுக்கு மட்டும் எப்படி பாஸ் இப்படியெலாம் கன்டென்ட் சிக்குது ?''

``எல்லோரையும் கேலி பேசி, நக்கல், நையாண்டியோட ஒவ்வொரு பொழுதையும் கொண்டாட்டமாகக் கழிச்ச என் கிராமத்து வாழ்க்கை, பிழைப்புக்காக நகரத்துக்கு வந்த பின்னாடி அடியோடு மாறிப்போச்சு. இங்கெல்லாம், `போங்க, வாங்க' நண்பர்கள்தான் அதிகம் இருக்காங்க.போடா,வாடாண்ணு உரிமையோட கூப்பிடுற அளவுக்கு நண்பர்கள் யாரும் இல்ல. அதனால, யாரையும் ஜாலியா திட்டவோ, கேலி செய்யவோ முடியல. அப்படி, என் ஆழ் மனசுல தேங்கிப் போன நகைச்சுவை எண்ணங்களைத்தான், புகைப்படங்கள் மூலமா வெளிப்படுத்திட்டு இருக்கேன். ஒருவகையில் அது எனக்கு நிம்மதியாவும், கொண்டாட்டமாகவும் இருக்கு!''
விடுதலைமணி தர்மராஜ்

நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படத்திலும், ஏதோ ஒரு மெல்லிய நகைச்சுவையுணர்வு இழையோடுகிறதே எனக் கேட்க, இவ்வாறு பதிலளித்தார், ஸ்ட்ரீட் போட்டோகிராபியில், குறிப்பாக டார்க் ஹியூமரில் பட்டையைக் கிளப்பிவரும் விடுதலைமணி தர்மராஜ்.

விடுதலைமணி தர்மராஜ்
விடுதலைமணி தர்மராஜ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தஞ்சையையொட்டிய டெல்டா கிராமமான கருவாக்குறிச்சிதான் விடுதலைமணியின் சொந்த ஊர். எம்.சி.ஏ முடித்தவர், சென்னையில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கை நிறைய சம்பளம் வாங்கினாலும், வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம், கேமராவுடன் சென்னையை வலம் வந்து கொண்டிருக்கிறார் .

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

போட்டோகிராபியின் மீது ஏன் இப்படியொரு தீராக் காதல்

``எங்க ஊர்'ல லட்சுமணன்'ணு வயசான தாத்தா ஒருத்தர் இருந்தார். நாங்க எல்லோரும் அவர `சிங்கப்பூர் தாத்தா'ண்ணுதான் கூப்பிடுவோம். சிங்கப்பூர்ல வேலை பார்த்ததனால அவருக்கு அந்தப் பேரு. ஊருக்கு வரும்போதெல்லாம் எப்போதும் கையில கேமராவோட காட்டுலயும், மேட்டுலயும் சுத்திட்டு இருப்பாரு. மாடுகளை போட்டோ எடுக்க அப்பா ஒருமுறை அவரை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தாரு. நான் அவரோட கேமராவ தொட்டுப் பார்த்தேன். என்னைக் கண்டபடி திட்டிட்டாரு. அப்பத்தான் எனக்கு கேமரா மேல பெரிய ஈர்ப்பு வந்துச்சு.

விடுதலைமணி தர்மராஜின் புகைப்படம்விடுதலைமணி தர்மராஜ்
விடுதலைமணி தர்மராஜின் புகைப்படம்விடுதலைமணி தர்மராஜ்

அப்பல்லாம் என்கிட்ட யாராவது வந்து உனக்கு என்ன வேணும்னு கேட்டா 'கேமரா'ன்னுதான் சொல்லுவேன். அந்தளவுக்கு கேமரா பைத்தியமா இருந்தேன். ஸ்கூல், காலேஜ் படிக்குற வரை கேமரா வாங்குற அளவுக்கு வசதி இல்லை. அதனால, போட்டோகிராபர்ஸ் பத்தியும், போட்டோகிராபி பத்தியும் தேடித் தேடி எதையாவது படிச்சுட்டே இருப்பேன். வேலைக்குச் சேர்ந்த பின்னாடிதான் சொந்தமா கேமரா வாங்க முடிஞ்சது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'கன்டென்ட்'தான் முக்கியம், 'டூல்' இல்லை...

ஆரம்பத்துல, உயர் ரக கேமரா இருந்தாதான் நல்ல தரமான போட்டோஸ் எடுக்கமுடியும்னு நம்பிட்டு இருந்தேன். 'ஹென்ட்ரி கார்டியர் பிரெஸ்ஸான்' போன்ற பல வெளிநாட்டு போட்டோகிராபர்களைப் பத்திச் தெரிஞ்சுக்க ஆரம்பிச்ச பிறகு, என்னோட எண்ணத்துல மாற்றம் உண்டாச்சு. 'கன்டென்ட்'தான் முக்கியம், 'டூல்' இல்லைன்னு புரிய தொடங்குச்சு. அதுக்கப்புறம் மிகத் தீவிரமா போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன்.

பீச் சாலை
பீச் சாலை
விடுதலைமணி தர்மராஜ்

சென்னையில் நான் போகாத தெருக்களே இல்லை. விடுமுறை நாள்கள்'ல வெளி ஊர்களுக்குப் போயிடுவேன். கூவாகம், குலசேகரப்பட்டினம் போன்ற பிரமாண்ட திருவிழாக்கள் நடக்கும் போது ஆபீஸுக்கு லீவு போட்டுருவேன். இதுவரை வாரணாசி, கேரளா, சிங்கப்பூரு போயிருக்கேன். அடுத்ததா, கொல்கத்தா போகணும்னு திட்டத்தோட இருக்கேன். வெளிநாடுன்னா ரஷ்யாதான் போகணும்''

``உங்களுக்கு மட்டும் எப்படி பாஸ் இப்படியெலாம் கன்டென்ட் சிக்குது ?''

''புகைப்படக் கலை ஒரு தவம் மாதிரி. நமக்கான தருணங்களுக்காக பல மணி நேரம் காத்துக் கிடக்கணும். நானும் அப்படித்தான். ஆனால், எந்தவொரு விஷயத்தையும் நகைச்சுவையோடு பதிவுசெய்ய அதிகம் மெனக்கெடுவேன். அதுக்காக பல மணி நேரம் காத்துக் கிடப்பேன். ஒரு சில புகைப்படங்களை, பல நாள்கள் கூட காத்திருந்து எடுத்துருக்கேன். உதாரணமா, கோயம்பேடு மார்க்கெட்டுக்குப் போகும்போதெல்லாம், அங்கே, ஒரு இடத்துல, வாழத்தார் எல்லாம் கீழ அழகா கிடத்தி வைச்சுருப்பாங்க. அத பார்க்குறதுக்கே ரொம்ப அழகா இருக்கும். ஆனா, அத அப்படியே பதிவு செய்ய எனக்கு மனசு வரல.

கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு மார்க்கெட்
விடுதலைமணி தர்மராஜ்

அதே வடிவத்துல வேறு ஏதாவது, அது பக்கத்துல வந்தா சேர்த்து எடுக்கலாம்ணு பல மணிநேரம் காத்துக் கெடந்துருக்கேன். ஒருநாள் அப்படிக் காத்திருக்கும் போது, சரியா ஒரு நாய், வாழத்தாருக்குக் பக்கத்துல வந்து நிக்க. அதோட வாலும், தாரோட கூர்முனையும் ஒரே மாதிரி இருந்துச்சு. அந்தத் தருணத்த போட்டோவா எடுத்தேன். 'ஸ்ட்ரீட் போட்டோகிராபி'யில இதை 'ஜக்ஸ்டா பொசிஷன்'ன்னு சொல்லுவாங்க. இந்த வகையில் போட்டோ எடுக்குறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் பெரும்பாலான புகைப்படங்கள் இப்படித்தான் இருக்கும்.''

'உங்கள் புகைப்படங்கள் பெரும்பாலும் கறுப்பு - வெள்ளையில் இருப்பது ஏன்?''

``கறுப்பு வெள்ளையில நாம் எதைப் பதிவு செய்தோமோ, அது பார்ப்பவர்களுக்கு சரியாய்ப் போய்ச்சேரும். வண்ணப் புகைப்படங்களில் அதுக்கான சாத்தியம் குறைவு''

மாமல்லபுரம்
மாமல்லபுரம்
விடுதலைமணி தர்மராஜ்

''உங்களுக்கு மிகவும் பிடித்த போட்டோகிராபர்கள் யார்?'

'' இந்திய அளவில் ரக்பீர் சிங் ரொம்பப் பிடிக்கும். சர்வதேச அளவுல, 'இலியாட் எர்விட்', 'அலெக்ஸ் வெப்' ரெண்டு பேரும் என்னோட ஆதர்ச போட்டோகிராபர்கள்''

நாம வாழ்க்கையில தொலைஞ்சு போற விஷயங்கள போட்டோ மூலமா பார்க்கலாம்..!
விடுதலைமணி தர்மராஜ்

''எப்போதும் கேமாராவுடனே சுத்திட்டு இருக்கீங்க, வீட்டில் எதிர்ப்பு ஏதும் இல்லையா?''

``என் மனைவி ஓரளவுக்குப் புரிஞ்சுக்கிட்டாங்க. அம்மாவும் அப்பாவும், நான் எதோ தேவை இல்லாம ஊர் சுத்திட்டு இருக்கேன்னு நினைச்சுட்டு எனக்கு அப்பப்ப அட்வைஸ் பண்ணிட்டு இருந்தாங்க. `ஐஞ்சு வருசத்துக்கு முன்னாடி நம்ம வீட்டுல இருந்த கிணத்த நாம தூத்துட்டோம், நான் அத போட்டோ எடுத்து வச்சதால இப்போ கூட நம்மளா'ல அதப் பார்க்க முடியுது. இப்படித்தான் நாம வாழ்க்கையில தொலைஞ்சு போற விஷயங்கள போட்டோ மூலமா பார்க்கலாம்'னு ஒருமுறை சொன்னேன். அதுக்கப்புறம் பெரிசா ஏதும் கண்டுக்குறது இல்ல ''

ஜக்ஸ்டா பொசிஷன்
ஜக்ஸ்டா பொசிஷன்
விடுதலைமணி தர்மராஜ்

''போட்டோகிராபியில் உங்களின் எதிர்காலத் திட்டம் ?''

''இன்டர்நேஷனல் லெவல்'ல நடக்குற போட்டோகிராபி காம்பெட்டிஷன்ல அப்பப்போ கலந்துகிட்டு வர்றேன். ஆனா, நான் எடுத்த போட்டோஸ்'ல சிறந்த புகைப்படங்களைத் தேர்வு செஞ்சு ஒரு டாக்குமென்ட் பண்ணணும் அவ்வளவிடுதலைமணி தர்மராஜ்வுதான் என்னோட ஆசை'' என்கிறார் விடுதலைமணி தர்மராஜ்.

மொழியில்லா கவிதைகளான புகைப்படங்களை, நகைச்சுவையுணர்வோடு பதிவு செய்துவரும் விடுதலைமணிக்கு இன்னும் ஆயிரம் சிறகுகள் முளைக்கட்டும்.

விடுதலைமணியின் புகைப்படங்கள் சில...