Published:Updated:

புத்தாண்டு... புதிய இந்தியா!

புத்தாண்டு... புதிய இந்தியா!
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தாண்டு... புதிய இந்தியா!

ஜூ.வி 2020

ந்த ஆண்டு

இப்படித்தான் தொடங்கியிருக்கிறது.

பல்கலைக்கழகத்தின் வாசலில்

ரத்தப்புள்ளிகளால் கோலம் வரைந்து

புத்தாண்டை வரவேற்றிருக்கிறார்கள்.

‘எல்லாப் பிரச்னைகளுக்கும் நேருதான் காரணம்’ என்பது

இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அவர் பெயரில் பல்கலைக்கழகம் என்றால்

இப்படித்தானே ரத்தக்கோலம் வரவேற்கும்?

வழக்கம்போல் இந்த ஆண்டும்

பிறந்திருக்கிறது

புதிய இந்தியா என்னும் குழந்தை.

முகமூடி அணிந்திருப்பதால்

குழந்தை சிரிக்கிறதா

என்று தெரியவில்லை.

அதன் கையில் தடிகளைக் கொடுத்தால்

போராடுபவர்களைக் கச்சிதமாகத் தாக்கும்.

புத்தாண்டு... புதிய இந்தியா!
புத்தாண்டு... புதிய இந்தியா!

இந்தப் புதிய இந்தியாவுக்கு

இன்னும் பெயர் சூட்டவில்லை.

என்றபோதும் திட்டம் என்னவோ ‘மேக் இன் இண்டியா’தான்!

அடுத்த திட்டங்களும் தயார்...

தேசிய விலங்கு பசு

தேசிய கீதம் ‘ஜெய் ஶ்ரீராம்’

தேசிய மலர்..?

அதுதான் ஏற்கெனவே இருக்கிறதே!

தாக்குதலுக்கு உள்ளானவர்கள்

இனி அனுமதிக்கப்படுவது மருத்துவமனைகளில் அல்ல

சிறைச்சாலைகளில் எனச் சட்டப்புத்தகம் திருத்தப்படலாம்.

‘மதச்சார்பற்ற... ஜனநாயக’ என்னும்

கெட்டவார்த்தைகளை நீக்கிவிட்டால்

அரசியல் சட்டம் புனிதப்பட்டுவிடும்.

அடுத்து பாடப்புத்தகத்தைத் திருத்த வேண்டியதுதான்

கோலம் போடுவது குற்றம்.

கோஷமிடுவது பெருங்குற்றம்.

கருத்துச்சுதந்திரம் பாவச்செயல்.

போராட்டம் மனிதத்தன்மையற்ற செயல்.

இனி நம் நாக்குகளுக்கும் மூளைகளுக்கும்

நாள்தோறும் தேசிய விடுமுறை.

ஆமாம், இந்த ஆண்டுதானே

இந்தியா வல்லரசு ஆகும் என்றார்கள்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz