ட்ரம்ப் வருகிறார்...

அகமதாபாத் விழாக்கோலம் பூணுகிறது.

உலகம் முழுக்க விரியும்

அமெரிக்கக் கழுகின் நிழல்

அகமதாபாத்தில் விழப்போவது

மூன்று மணி நேரம் மட்டும்தான்.

ஆனால், அதற்கு 100 கோடி செலவு.

இரவு உணவின்றி

படுக்கைக்குச் செல்வோர்,

மூடப்படும் அரசுப்பள்ளிகள்,

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள்

ஆகியவை குறித்த புள்ளிவிவரங்கள்

உங்கள் நினைவுக்கு வராமலிருக்கவேண்டும்.

இப்போது நாம் சிலவற்றை

ட்ரம்பின் கண்களில் படாமல்

மறைக்க வேண்டும்.

குடிசைகளை...

அழுக்குத் தொழிலாளர்களை...

நடைபாதையில் வசிப்பவர்களை...

தேசத்தின் உடல்களில்

தேமல்களாய் இருக்கும் சேரிகளை...

குஜராத் மாடல் எனத் தீட்டிய சித்திரத்துக்கு

மாறான எல்லாவற்றையும் மறைக்க வேண்டும்.

இன்னொரு பொய்ச்சித்திரம் தீட்டல் வேண்டும்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.

இப்போது நம் தேசியக் கடமை சுவர் எழுப்புவது.

சுவர்களை எழுப்புவது நமக்குப் புதிதல்ல....

பெருமுதலாளிகளுக்கும் ஏழைகளுக்குமிடையில்....

ஊருக்கும் சேரிக்குமிடையில்...

மதங்களுக்கு இடையில்...

மனங்களுக்கு இடையில்...

எத்தனை சுவர்களை எழுப்பிப் பழகியிருக்கிறோம்!

முதலில் நாம் எழுப்ப வேண்டியது

சபர்மதி ஆசிரமத்துக்கு முன்னால் ஒரு சுவர்

முதலில் நாம் மறைக்க வேண்டியது

விவசாயிகள் அரைநிர்வாணத்துக்காக

ஆடை துறந்த காந்தி

இதே குஜராத்தில்தான் பிறந்தார் என்பதையும்!