Published:Updated:

அசுரனின் மூலக்கதை `வெக்கை' நாவல் படைத்திருக்கும் புதிய சாதனை!

எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவல் 1982 -ல் வெளியிடப்பட்டது.

வெக்கை
வெக்கை

தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான `அசுரன்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகத் தனி கவனம் ஈர்த்த 'அசுரன்' வசூலிலும் பெரும் வெற்றி பெற்றது.

எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' நாவலை மூலக்கதையாகக் கொண்டு இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் நாவல், சிறுகதையைத் தழுவி மிகச் சில படங்களே வெளிவந்துள்ளன. வெற்றிமாறன் 2016 ஆம் ஆண்டு எழுத்தாளர் சந்திரகுமாரின் `லாக்கப்' நாவலைத் தழுவி 'விசாரணை' திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

'வெக்கை' நாவலின் முதல் பதிப்பு 1982-ல் வெளியானது. இது, கரிசல் இலக்கியத்தில் மிக முக்கியமானதொரு படைப்பாக இன்றுவரை இலக்கிய வாசகர்களால் கொண்டாடப்படுகிறது.

வெக்கை
வெக்கை

கடந்த 37 வருடங்களாக, இந்நூல் பல பதிப்புகள் கண்டுள்ளன. சமீபத்தில் 'வெக்கை' நாவல் புதியதொரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. 2019 ஆண்டின் 'அமேசான் கிண்டில்' ('Amazon kindle') அதிகம் விற்பனையான இந்திய மொழி நூல்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் தகவலை அமேசான் கிண்டில் இந்தியா ( Amazon Kindle India) தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் ஒரு தமிழ் நாவல் அதிக விற்பனையாகியிருப்பது குறித்து பலரும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.

சமீப காலங்களில் அமேசான் கிண்டிலில் நூல்களை வாங்கிப் படிக்கும் வழக்கம் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.