Published:Updated:

எனும் நான்: "வாழ்க்கை கத்துக்கொடுத்தது எல்லாம் வலிதான்!" - கவிஞர் ஆசு

ஆசு
ஆசு

தன் மொழியைப் போலவே வாழ்க்கையையும் எளிமையாகக் கொண்டாடும் ஆசு, அம்பத்தூர்வாசிகளுக்கு அறிமுகமானது டர்னராக.

ஆசுவின் கவிதைகள், நவீனத்துக்கும், வெகுஜன இலக்கியத்துக்குமான ஊடாட்டம். அன்றாடப் பொழுதுகளை நகர்த்த அல்லல்படும் விளிம்புநிலை மனிதர்களின் குரலாக வெடிக்கும் அந்தக் கவிதைகளுக்கு 'எதிர்ப்பு' என்றும் பெயர் சூட்டலாம். அனுபவங்களின் வறட்டுத்தனமின்றி, பூடகமான அழகியல் உள்ளடக்கங்களைக் கொண்ட ஆசுவின் படைப்புகள், ஏராளமான அங்கீகாரங்களைக் குவித்தவை.

'என்றொரு மௌனம்', 'யோசித்தவனின் வாழ்வுரை', 'ஈரவாடை', 'குரல்களைப் பொறுக்கிச் செல்கிறவன்', 'நேசித்தவனின் வாழ்வுரை', 'ஆறாவது பூதம்' என்றொரு மௌனம், தீண்டும் காதலின் சொற்கள், நிலம் பருகும் மழை ஆகிய கவிதைத் தொகுப்புகள் ஆசுவின் அடையாளம்.

திண்டிவனத்திலும் சென்னையிலும் சேகரித்த வாழ்பனுபவங்களின் தொகுப்பிலிருந்து தனித்துவமான சிறுகதைகளைப் படைக்கும் ஆசு, 'அம்மாக்கள் வாழ்ந்த தெரு' நாட்குறிப்பில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள், கடந்து போகிறவர்களின் திசைகள், செல்லி ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.

தன் மொழியைப் போலவே வாழ்க்கையையும் எளிமையாகக் கொண்டாடும் ஆசு, அம்பத்தூர்வாசிகளுக்கு அறிமுகமானது டர்னராக. எந்திரச் சத்தங்களுக்கு மத்தியில் கவிதை மனதோடு இயங்கும் ஆசுவின் படைப்புகள் இலக்கிய வீதி அன்னம் விருது, பண்ணை தமிழ்ச்சங்க விருது, விதைநெல் இலக்கிய விருது என பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ளன.

ஆசுவின் எழுத்துலகம், வாழ்க்கை பற்றி முழுமையாக அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
அடுத்த கட்டுரைக்கு