Published:Updated:

"கண்ணீர்ப் பூக்கள் கிடைத்தது எப்படி?" - மு.மேத்தா பிறந்த தின சிறப்புப் பகிர்வு

Muhammed Metha and Vaali ( விகடன் )

புதுக்கவிதையில் புரட்சி படைத்த கவிஞர் மு.மேத்தாவின் பிறந்த நாள் (செப்டம்பர் 5) இன்று.

"கண்ணீர்ப் பூக்கள் கிடைத்தது எப்படி?" - மு.மேத்தா பிறந்த தின சிறப்புப் பகிர்வு

புதுக்கவிதையில் புரட்சி படைத்த கவிஞர் மு.மேத்தாவின் பிறந்த நாள் (செப்டம்பர் 5) இன்று.

Published:Updated:
Muhammed Metha and Vaali ( விகடன் )

"உஷாவாய்ப் பிறந்திருந்தால்

ஓடிப் பிழைத்திருப்பேன்...

உஷா உதுப்பாய்ப் பிறந்திருந்தால்

பாடிப் பிழைத்திருப்பேன்...

யாரையும் நாடிப்

பிழைக்கத் தெரியாததால்

வாடிப் பிழைத்துக் கொண்டிருக்கிறேன்!"

Muhammed Metha
Muhammed Metha
விகடன்

- தஞ்சையில் நடைபெற்ற எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் கவிஞர் மு.மேத்தா பாடிய கவிதை வரிகள் இவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது, சென்னை நந்தனம் அரசுக் கலைக் கல்லூரியில் மு.மேத்தா பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அவரின் மாணவராக நான் இருந்தேன். அந்தச் சமயத்தில், நடிகைகள் சிலுக்கு, குஷ்புவின் பெயர்களை வைத்து ஓரிரு வரிகள் எழுதிவிட்டு, `நடிகையாய் பிறக்காததால் நாடாள முடியாமல் தவிக்கிறேன்!’ என மு.மேத்தா பாணியிலேயே கவிதை பாடிக் காட்டினேன்.

Muhammed Metha
Muhammed Metha
விகடன்

''நன்றாக இருக்கிறது. ஆனால், சுயமாக எழுது'' எனச் சொல்லி கவிதை எழுதுவதற்கான இலக்கணத்தைச் சொல்லியும் கொடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதுக்கவிதையில் புதிய விடியலைப் படைத்தவர் மு.மேத்தா. 'அதிக வாசகர்களைப் பெற்ற கவிஞர்' என்ற பெருமையைப் பெற்றவர். அவருடைய கண்ணீர்ப் பூக்கள் பல பதிப்புகளைக் கண்டது.

Muhammed Metha
Muhammed Metha

ஒருமுறை கவிஞர் அறிவுமதி பேசியபோது, ''மு.மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள் கவிதை நூலைக் கையில் வைத்திருப்பதே கௌரவம்“ எனச் சொன்னார். கவிஞர் வாலியின் 'அவதார புருஷன்' எழுதுவதற்கு விதை போட்டது மு.மேத்தா எழுதிய 'நாயகம் ஒரு காவியம்' என்கிற நூல்தான். வாலியை நான் சந்தித்தபோது 'நாயகம் ஒரு காவியம்' நூலை என்னிடம் சிலாகித்துப் பேசினார். ''அவதார புருஷர் அவதரிக்க நாயகம் காரணம்'' என்றார் வாலி.

Vaali
Vaali

நடப்பு அரசியலையும் நாட்டு நடப்பையும் தன் கவிதைகளில் பதியம் போட்டுக்கொண்டே இருந்தார் மேத்தா. ''அணு ஆயுதங்கள் இருக்கிறது'' எனச் சொல்லி இராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது மு.மேத்தாவின் பேனா எழுதியது.

இராக் அழிந்து

சிதைந்த பிறகுதான்

தெரிந்தது

பேரழிவு ஆயுதங்கள்

எவர் கையில்

இருந்ததென்பது !

எண்ணெய்க்காக வளைகுடா நாடுகள் வளைக்கப்பட்டபோது மு.மேத்தா இப்படி எழுதினார்.

Muhammed Metha
Muhammed Metha
விகடன்

தலையில் எண்ணெய்

தடவுவார்கள் உலகில்...

அமெரிக்காவோ

எண்ணெய்க்காகவே

வளைகுடா நாடுகளின்

தலையைத் தடவுகிறது !

1970-களில்தான் 'கண்ணீர்ப் பூக்கள்' நூலைப் படைத்தார், மு.மேத்தா. தமிழ்ப் புதுக்கவிதைப் புத்தகங்களில் அதிக விற்பனையைப் படைத்த புத்தகம் கண்ணீர்ப் பூக்கள். பல பதிப்புகளைக் கண்ட அந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு அவ்வளவு எளிதாக வெளியாகிவிடவில்லை. முனைவர் பட்ட ஆய்வுக்காக மு.மேத்தாவைச் சந்திக்கப் போனார் பேராசிரியர், ஹாஜா கனி. அப்போது கண்ணீர்ப் பூக்கள் பிறந்த கதையை அவரிடம் சொல்லியிருக்கிறார், மு.மேத்தா.

“கண்ணகி சிலம்பைக் கழட்டினாள், சிலப்பதிகாரம் கிடைத்தது. என் மனைவி வளையலைக் கழட்டினாள் கண்ணீர்ப் பூக்கள் கிடைத்தது” என்றார். மு.மேத்தாவின் மனைவி மல்லிகாவின் வளையலே, கண்ணீர்ப் பூக்கள் புத்தகமாக வெளியாவதற்குக் காரணம். ஆனந்த விகடனின் பொன் விழா கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட இலக்கியப் போட்டியில் மேத்தா எழுதிய 'சோழ நிலா' நாவலுக்கு முதல் பரிசு கிடைத்தது.

Muhammed Metha
Muhammed Metha

திரைப்பாடல்களிலும் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார், மு.மேத்தா. 'பெண் மானே சங்கீதம்...' 'யார் வீட்டில் ரோஜா...' 'பாடு நிலாவே...' 'ராஜராஜ சோழன் நான்...' 'கற்பூர பொம்மை ஒன்று...' 'மயில்போல பொண்ணு ஒண்ணு' எனத் தடம் பதித்திருக்கிறார். 'பூமணி' படத்தில் '௭ம்பாட்டு ௭ம்பாட்டு...' பாடலை எழுதியிருந்தார். அந்தப் படத்தின் கேசட்டில் பாடல் எழுதிய பாடலாசிரியரின் பெயர் இல்லை. ''பாடலுக்காக இசையமைத்த இசையமைப்பாளரின் பெயரையும் பாடகரின் பெயரையும் குறிப்பிடுகிறவர்கள், அந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியரின் பெயரைச் சொல்வதில் என்ன தயக்கம்? அது ௭ம்பாட்டு ௭ம்பாட்டு'' என மேடையிலேயே உரிமையை நிலைநாட்டினார் மேத்தா.

அந்த மேத்தாவுக்கு இன்று (செப்டம்பர் 5) 75-வது பிறந்தநாள். அவரைக் கௌரவிக்கும் வகையில் மு.மேத்தா அறக்கட்டளை ஒன்று புதுக்கல்லூரி தமிழ்த்துறையில் தொடங்கப்படுகிறது.

நம்பிக்கை நார் மட்டும்

நம் கையில் இருந்தால்

உதிர்ந்த பூக்களும்

ஒவ்வொன்றாய் ஒட்டிக்கொள்ளும்

கழுத்து மாலையாய்

தன்னைத்தானே கட்டிக்கொள்ளும்!

நம்பிக்கை விதைக்கும் மேத்தாவின் வரிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism