Published:Updated:

தாழ்வாரம்: கும்பகோணம் - ஒன்றுகூடி பேசுகிற இடம்

செருகுடி செந்தில், கு.இலக்கியன், கோ.பாரதிமோகன்
பிரீமியம் ஸ்டோரி
செருகுடி செந்தில், கு.இலக்கியன், கோ.பாரதிமோகன்

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த காலம்தொட்டே, குடந்தையில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் இயங்கி வருகின்றன. பல்வேறு இலக்கிய வடிவங்களை விவாதிக்கக்கூடிய பல இலக்கியக் கூட்டங்களை எண்ணிக்கையில் மிகுந்தும் குறைந்தும் பலர் நடத்திவந்திருக்கிறார்கள்.

தாழ்வாரம்: கும்பகோணம் - ஒன்றுகூடி பேசுகிற இடம்

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த காலம்தொட்டே, குடந்தையில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் இயங்கி வருகின்றன. பல்வேறு இலக்கிய வடிவங்களை விவாதிக்கக்கூடிய பல இலக்கியக் கூட்டங்களை எண்ணிக்கையில் மிகுந்தும் குறைந்தும் பலர் நடத்திவந்திருக்கிறார்கள்.

Published:Updated:
செருகுடி செந்தில், கு.இலக்கியன், கோ.பாரதிமோகன்
பிரீமியம் ஸ்டோரி
செருகுடி செந்தில், கு.இலக்கியன், கோ.பாரதிமோகன்

னெனில் குடந்தை மண் என்பது கலை, இலக்கியம், ஆன்மிகம் என்று முத்துறையிலும் தன் தடத்தைப் பதித்திருப்பதுதான். அத்தகைய மண்ணில், இலக்கிய உலகில் பெரும் வீச்சோடு கருத்தியல்புகளை முன்வைக்கிற, நவீன இலக்கியங்கள் குறித்து விவாதிக்கிற, நூல்களை அறிமுகப்படுத்துகிற ஓர் இலக்கிய அமைப்பு இல்லையே என்ற கேள்வியின் முடிவில் தொடங்கியதுதான் `தாழ்வாரம் நவீன இலக்கியக் களம்’. அனைவரும் கூடிப் பேசுகிற இடத்தைக் குறிப்பிடும் ஒரு பெயராக இருக்க வேண்டும் என்பதால், `தாழ்வாரம்’. செருகுடி செந்தில், கு.இலக்கியன், கோ.பாரதிமோகன் மூன்று பேரும் இந்த இலக்கிய அமைப்பினைத் தொடங்கி, நடத்திவருகிறோம்.

2018-ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் பிந்தைய ஞாயிறு ஒன்றில், எழுத்தாளர் கண்மணி குணசேகரன், பாடலாசிரியர் ஏகாதசி, கவிஞர் ஸ்டாலின் சரவணன், எழுத்தாளர் பாக்கியம் சங்கர், புதுவை இளங்கவி அருள், கவிஞர்கள் முருக தீட்சண்யா, மீனா சுந்தர், கே.பாக்யா, யாழி, நிலாதரன், வலங்கைமான் நூர்தீன், சத்யன் போன்ற திரளான படைப்பாளர்களின் பங்கேற்போடு தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை சமகால எழுத்தாளர்களின் நூல்களை அறிமுகப்படுத்தி விவாதிப்பது, கலந்துரையாடுவது அடுத்த நிலைக்கு படைப்புகளை முன்னிருத்தி ஊக்கப்படுத்துவது என்று செம்மையாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது ‘தாழ்வாரம்’.

தாழ்வாரம்: கும்பகோணம் - ஒன்றுகூடி பேசுகிற இடம்

கடந்த பிப்ரவரி மாதம், அமைப்பின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவைக் கொண்டாடினோம். வழக்கமான விழாவாக இல்லாமல், மற்றுமொரு புதிய முயற்சியைக் கைக்கொண்டது தாழ்வாரம். அது, ‘தாழ்வாரம் இலக்கிய விருதுகள்’ எனும் புதிய நகர்வு.

எப்போதும் படைப்பாளர்களையும் படைப்புகளையும் ஊக்கப்படுத்தும் தாழ்வாரம், இவ்விருதின் மூலமும் அந்தந்த ஆண்டிற்கான சிறந்த கவிதை, சிறுகதை, நாவல், சிறார் இலக்கிய நூல்களுக்கான விருதுகளை அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதிலிருந்தும் விருதுத் தேர்விற்கென நூல்கள் வந்து குவிந்தன. தமிழ் நிலத்தைக் கடந்து, கேரளத்திலிருந்தும் தமிழ்ப் படைப்பு விருதுப் போட்டிக்கு நூல்கள் வந்திருந்தன. வந்து சேர்ந்த நூல்களை வகைமை சார்ந்து பிரித்து, துறை சார்ந்த முக்கிய ஆளுமைகளைக் கொண்டு தேர்வுசெய்து அறிவித்தோம். இவ்விருதின் மூலம், அறியப்படாத பல நல்ல நூல்களை அடையாளம் காண்பதும் அதன் படைப்பாளர்களை அடையாளப்படுத்துவதும் எங்கள் நோக்கமாக இருந்தது/இருக்கிறது.

மாதாந்திர நூல் விமர்சன நிகழ்வுகளோடு மட்டுமல்லாது, ஒரு குறிப்பிட்ட ஆளுமையின் மொத்த எழுத்துப் பணிகளையும் கவனப்படுத்தும் விதமாக, ‘ஒரு ஆளுமையின் படப்புலகம்’ என்ற தலைப்பில் ஒரு முழுநாள் நிகழ்வும் ஏற்பாடு செய்துவருகிறோம். இன்றைக்குத் தொடர்ந்து எழுதிவருகிற எல்லாப் படைப்பாளர்களும் சிற்றிதழ்களின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள்தாம். தம் எழுத்துகளைச் சிற்றிதழ்களின் வழியாக அச்சில் பார்த்துதான் எழுத்துப் பயணத்தை அவர்கள் தொடங்கியிருக்கக்கூடும். அத்தகைய சிற்றிதழ்களின் வளர்ச்சி என்பது இன்று பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. அதையும் கவனத்தில்கொண்டு அந்தச் சிற்றிதழ்களை மீண்டும் உயிர்ப்பிப்பதும் அவற்றை அடையாளப்படுத்துவதும் சந்தா சேர்த்து தொடர்ந்து வெளிவர வழிவகை செய்யவும் முயன்று வருகிறது தாழ்வாரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism