Published:Updated:

மிகப்பெரும் வெற்றி, மிகப்பெரும் சரிவு... இரண்டையும் பார்த்தவன் நான்! - முனைவர் வைகைச்செல்வன்

முனைவர் வைகைச்செல்வன்
முனைவர் வைகைச்செல்வன்

நம் வாழ்வில் யாரோ சொல்கிற ஒரு வரி நம் வாழ்வையே மொத்தமாக மாற்றக்கூடும். அப்படி முனைவர் வைகைச்செல்வனின் வாழ்க்கையை மாற்றி 'அந்த ஒரு வரி' என்ன, அவரே சொல்கிறார், கேட்கலாம்!

"வாழ்க்கையில் எது நம்மை உந்தித் தள்ளுகிறது என்றால், அது சின்ன சின்ன வார்த்தைகள் தான். சின்ன சின்ன வார்த்தைகளில் எத்தனையோ உச்சத்தைத் தொடுகிற ஒரு உணர்ச்சி நமக்குள்ளே மேலெழும்பும். ஒவ்வொரு வார்த்தைகளுக்குள்ளும் ஏதோ ஒன்று நம்மை உந்தித் தள்ளுகிறது. அப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொருவர் நம்மிடம் நம்பிக்கை விதைகளைத் தூவிச் செல்கிறார்கள். அந்த வகையில் என்னை இன்னும் செதுக்கிக் கொண்டே இருக்கிற வார்த்தைகள், ஆரம்பப் பள்ளிக்கூடக் காலகட்டத்தில் எப்போதுமே என் கைவிரல்களைப் பிடித்துக் கொண்டு என் தந்தையார் நடக்கும் போது அவர் கூறிய அந்த வார்த்தைகள் தான் என்னை எப்போதும் செதுக்குவதாக நான் நினைக்கிறேன்."

நம் வாழ்வில் யாரோ சொல்கிற ஒரு வரி நம் வாழ்வையே மொத்தமாக மாற்றக்கூடும். அப்படி முனைவர் வைகைச்செல்வனின் வாழ்க்கையை மாற்றி 'அந்த ஒரு வரி' என்ன, அவரே சொல்கிறார், கேட்கலாம்!
அடுத்த கட்டுரைக்கு