நம்முடைய பலமொழிகள் அல்லது சொலவடைகள் எல்லாமே நம்முடைய மூதாதையர்கள் மூலமாக, மரபின் மூலமாக வந்துசேர்ந்த விஷயம். என்னுடைய அப்பா அடிக்கடி ‘வியர்வை ஆறுமுன் கூலியை கொடு’ன்னு சொல்லுவார். யாரையாவது நாம் வேலைக்காகக் கூப்பிட்டால் அவர்கள் அந்த வேலையைச் செய்துமுடித்த உடனேயே, அதாவது அவர்களுடைய வியர்வை ஆறுவதற்கு முன்னதாகவே காலம் தாழ்த்தாமல் அவர்களுக்குப் பேசின கூலியைக் கொடுத்துவிட வேண்டும்.

கூலி என்பது அன்றைய காலகட்டத்தில் தானியமாகவோ, பயிராகவோ, நெல்லாகவோ வழங்கப்பட்டது. இந்தக் கூலி என்பதைச் சமகாலத்திற்குக் கூட பொருத்திப் பார்க்கலாம். உதாரணமாக, ஒரு அலுவலகத்தில் நீங்கள் நன்றாக வேலை செய்கிறீர்கள். நேர்மையாக உழைக்கிறீர்கள். உங்களுடைய கூலி என்பது இங்கே பதவி உயர்வு. அந்தக் கூலியை உடனே கொடுக்காமல் தாமதிப்பது அல்லது உங்களைவிட சில படிகள் கீழே இருப்பவரைச் சமூக அரசியல் காரணமாக, பணம் என்கிற காரணத்திற்காக பதவி உயர்வு கொடுப்பது என்பது 'வியர்வை ஆறுமுன் கூலியை கொடு' என்பதாகாது.
ஒரு எழுத்தாளனுக்கு, கலைஞனுக்கு அவனுடைய உழைப்புக்கான கூலியை உடனே கொடுக்க வேண்டும். உழைப்பு இருப்பவனை விட்டுவிட்டு அரசியல் காரணங்களுக்காகப் பல கோடி ரூபாய் நன்கொடை தருகிறார் என்பதற்காக மற்றொருவனுக்கு பதவிகொடுத்து உயர்ந்த இடத்தில் உட்கார வைப்பதற்கும் ‘வியர்வை ஆறுமுன் கூலியை கொடு' என்பது பொருந்தும்.

நாஞ்சில் நாடனின் வாழ்வை மாற்றிய அந்த ஒரு வரியை அவரது குரலிலேயே கேட்க..!