Published:Updated:

கவிஞர் அ.வெண்ணிலாவின் வாழ்வை மாற்றிய `அந்த ஒரு வரி'!

அ.வெண்ணிலா
அ.வெண்ணிலா

தன் வாழ்வை மாற்றிய 'அந்த ஒரு வரி'யைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர், கவிஞர் அ.வெண்ணிலா.

வார்த்தைகளுக்கு வாழ்க்கையை மாற்றும் சக்தி உண்டு. எங்கோ யாரோ ஒருவர் போகிற போக்கில் சொல்கிற ஒரு வார்த்தை கூட நம் மனதில் தங்கி நம் வாழ்க்கையையே மாற்றக்கூடும்.

"1988-ல் ஆசிரியர் பயிற்சி முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து விட்டுக் காத்திருந்த கொஞ்சக் காலத்திலேயே ஆசிரியர் பணிக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. அந்த இடைப்பட்ட காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் படிப்பதற்காக விண்ணப்பித்திருந்தேன். அந்த விண்ணப்பத்திற்காக அசல் சான்றிதழ்களைப் பல்கலைக்கழகத்தில் கொடுத்திருந்தேன். இந்த ஆசிரியர் பணிக்கான நேர்காணலுக்கு அந்த சான்றிதழ்கள் தேவைப்பட்டன. எனவே, உடனடியாக சென்னை சென்று சான்றிதழ்களை வாங்கி வர வேண்டும் என்ற இக்கட்டான சூழல். அப்பாவிடம் சென்று கூறினேன். அப்போது அவர் சொன்ன அந்த ஒரு வரி தான், இன்று என் வாழ்க்கையை யாருடைய துணையும் இன்றி நானாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறது"

தன் வாழ்வை மாற்றிய 'அந்த ஒரு வரி'யைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர், கவிஞர் அ.வெண்ணிலா.

கவிஞர் அ.வெண்ணிலாவின் வாழ்வை மாற்றிய அந்த ஒரு வரியை அவரது குரலிலேயே கேட்க..!
அடுத்த கட்டுரைக்கு