Published:Updated:

சிந்தனை விருந்து! - துறவறம்தான் சந்நியாசமா?

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து

தென்கச்சி சுவாமிநாதன் ஓவியம்: சேகர்

``இதோ பாருடிம்மா... குழப்பமில்லாம, சண்டை- சச்சரவு இல்லாம குடும்பம் நடத்துறதுதான் புத்திசாலித்தனம். அது உன் கையிலதான் இருக்கு!'' என்றாள் அந்த மாமி.

``நான் என்ன செய்யணும்?''_ இளம்பெண் கேட்டாள்.

``இப்பவே உன் புருசன்கிட்டே கண்டிப்பா சொல்லிடு...''

``என்னன்னு..?''

''இதோ பாருங்க... நீங்க ஏதாவது சின்னதா தப்பு பண்ண ஆரம்பிச்சாலும் நான் பத்ரகாளியா மாறிடுவேன்னு ஆரம்பத்துலேயே சொல்லி வெச்சுடு!''

``நீங்ளும் இப்படித்தான் சொன்னீங்களா மாமி?''

``ஆமாம்! எங்களுக்குக் கல்யாணம் ஆன மறுநாளே சொல்லிப்புட்டேன்!''

''அப்புறம் என்ன ஆச்சு? நீங்க எதிர்பார்த்த மாதிரி அவரு நடந்துகிட்டாரா?''

``அதுதானே தெரியலை?''

``ஏன்?''

சிந்தனை விருந்து! - துறவறம்தான் சந்நியாசமா?

அப்பாவியாகக் கேட்ட புதுமணப் பெண்ணிடம் மாமி சொன்னாள் ''அன்னிக்கு வீட்டை விட்டு ஓடினவர்தான்... இன்னமும் வீடு திரும்பலை!''

அந்த ஆள் அதற்கப்புறம் ஒரு சந்நியாசி ஆகிவிட்டார் என்று கேள்வி!

ஆனால், சந்நியாசம் என்பது இதுவல்ல.

சந்நியாசம் என்பது எதையும் விடுவதோ அல்லது துறப்பதோ அல்ல.

ஒருவன் எல்லாவற்றையும் துறந்து, வாழ்க்கையை விட்டு வெளியில் வருவதையே சந்நியாசம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

`வாழ்க்கையை விட்டு வெளியே வருவதால் வாழ்வுக்கும் சரி, வாழும் மனிதர்களுக்கும் சரி... எந்தப் பயனும் இல்லை' என்பது ஞானிகளின் கருத்து.

ஓஷோ என்ன சொல்கிறார் தெரியுமா?

`வாழ்க்கையை விட்டு வெளியே செல்லும் சந்நியாசிகள் தங்களைத் தாங்களே சித்ரவதை செய்து கொள்கிறார்கள்' என்கிறார். சந்நியாசிகள் பலரும் முகத்தைக் கோபத்துடன் 'உர்ர்ர்' என்று வைத்திருப்பது இதனால்தான் என்கிறார் ஓஷோ.

உண்மையான சந்நியாசம் என்பது வாழ்க்கையைத் துறப்பதல்ல; அதில் ஆனந்தமாக ஓர் பயணத்தை மேற்கொள்வது!இன்றைய சந்நியாசிகள் இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

06-07-09 இதழிலிருந்து...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz