Published:Updated:

சிந்தனை விருந்து! - ஆண்டவன் ஏன் தெரிவதில்லை?

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து

தென்கச்சி சுவாமிநாதன்; ஓவியம்: சேகர்

சிந்தனை விருந்து! - ஆண்டவன் ஏன் தெரிவதில்லை?

தென்கச்சி சுவாமிநாதன்; ஓவியம்: சேகர்

Published:Updated:
சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து

``என் பின்னாடி வாங்க... உங்க எல்லாரையும் கடவுள் கிட்ட கூட்டிட்டுப் போறேன்’’ என்றார் அந்தச் சாமியார். ஏராளமானோர் அவர் பின்னால் செல்லத் தொடங்கினர்.

‘`என்னால் முடியாதது எதுவுமே இல்லை. ஏற்கெனவே, நிறைய முறை தவம் செய்திருக்கிறேன். உங்கள் குறைகளையெல்லாம் தீர்த்து வைக்கிறேன். வாருங்கள்!’’ என்று அறைகூவல் விடுத்தார் சாமியார்.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆண்டவனுக்கே பொறுக்கவில்லை. ஆகவே, அவரும் சாமியாரிடம் வந்தார்.

சந்நியாசி வேடத்தில் வந்த கடவுள், சாமியாரின் முன் நின்றார். ‘`சுவாமி... நீங்க நெறைய ஸித்திகள் அடைஞ்சிருக்கறதா கேள்விப்பட்டேன். அதான் உங்கள பாத்துட்டுப் போலாமேனு வந்தேன்’’ என்று பணிவுடன் சொன்னார்.

உடனே உற்சாகம் அடைந்த சாமியார், ‘`என்னைப் பத்திதான் ஊருக்கே தெரியுமே?! வாங்க... இப்படி உக்காருங்க... என்ன வேணும் உங்களுக்கு?’’ என்று பெருமிதத்துடன் கேட்டார்.

‘`அதோ... யானை ஒண்ணு நடந்து போகுது பாருங்க, அந்த யானையைக் கொல்ல முடியுமா?’’- சந்நியாசி வேடத்தில் வந்த கடவுள் கேட்டார்.

சிந்தனை விருந்து! - ஆண்டவன் ஏன் தெரிவதில்லை?

இதைக் கேட்ட சாமியார் அலட்சியமாக, ‘`இதென்ன பிரமாதம்... இப்ப பாருங்க...’’ என்றபடி, ஒரு பிடி மண்ணைக் கையில் எடுத்து, ஏதோ மந்திரம் சொல்லி, யானையை நோக்கி வீசினார். அவ்வளவுதான்... யானை சுருண்டு விழுந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`அடடா... எப்பேர்ப்பட்ட சக்தி உங்களுக்கு!’’ என்று சாமியாரைப் புகழ்ந்த சந்நியாசி, ‘`சரி சுவாமி... செத்துக் கிடக்கும் இந்த யானைக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியுமா, உங்களால்?’’ என்று கேட்டார்.

‘`ஓ... தாராளமா முடியுமே! இதோ பாருங்க...’’என்ற சாமியார், மறுபடியும் மண் எடுத்தார்; மந்திரம் போல் முணு முணுத்தார்; யானையை நோக்கி மண்ணை வீசி னார். யானை அசைந்தது; எழுந்தது!

இதைக் கண்ட சந்நியாசி, ‘`நீங்க சக்தியுள் ளவர்தான்; சந்தேகமே இல்ல. ஆனாலும் ஒரு கேள்வி...’’ என்றார். உடனே, ‘`சந்தேகத்தை நிவர்த்தி பண்றதுக்குத்தான் நான் இருக்கேன். தயங்காம கேளுங்க’’ என்ற சாமியார், சந்நியாசி சொல்வதைக் கண் மூடிக் கேட்கலானார்.

‘`இப்ப ஒரு யானையைக் கொன்னீங்க; அப்புறமா அதுக்கு உயிர் கொடுத்தீங்க. இதனால நீங்க அடைஞ்ச லாபம் என்ன? எந்த மாதிரி ஆன்மிக முன்னேற்றம் உண்டாச்சு? நீங்க கடவுளை அடையறதுக்கு, எந்த விதத்துல இது உதவி செய்றதா நினைக்கறீங்க?’’

கண்களைத் திறந்து பார்த்தார் சாமியார். எதிரே சந்நியாசியைக் காணவில்லை.

குரு என்பவர் கூட்டம் சேர்ப்பவர் அல்ல... வழிகாட்டுபவர். அதேபோல், இன்றைய பக்தர்கள் பலரும், குருமார்களின் முதுகுக்குப் பின்னால் அணிவகுக்கவே ஆசைப்படுகின்றனர். உண்மை யான தேடுதல் அவர்களிடம் இல்லை. அதனால் தான்... அவர்களின் கண்களுக்கு ஆண்டவன் தெரிவதில்லை!

24.5.2009 இதழிலிருந்து...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism