Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

துளிர்- அறிவியல் கட்டுரைகள்

படிப்பறை

துளிர்- அறிவியல் கட்டுரைகள்

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

அறிவியல்தான் மனித குலத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தி வந்திருக்கிறது. எத்தனையெத்தனையோ தொற்று நோய்கள்... இயற்கைச் சீற்றங்கள்... அனைத்தையும் எதிர்கொண்டு அவற்றுக்கான தீர்வுகளை ஆய்ந்தறிந்து மனிதகுலத்துக்குக் கேடயமாக இருப்பது அறிவியல்தான்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுவர்களுக்குச் செயல் வழியாகவும் இதழ்கள், வெளியீடுகள் வழியாகவும் அறிவியல் ஆர்வத்தையும் திறமையும், சிந்தனையையும் வளர்த்துவருகிறது ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.’ அறிவியலை ஏட்டிலிருந்து எடுத்து, எளிய வாழ்க்கை உதாரணங்களில் கலந்து கற்றுத்தரும் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் இந்த அமைப்பு, ‘துளிர்’ என்ற மாத இதழையும் வெளியிட்டுவருகிறது. அறிவியல் கதைகள், எளிய செய்முறைப் பயிற்சிகள், விநாடி வினாக்கள் என எளிமையாகவும் சுவாரசியமாகவும் அறிவியலைக் கற்றுத்தரும் ‘துளிர்’ இதழில் வெளியான, தேர்ந்தெடுக்கப்பட்ட 50 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். அழகு ஓவியங்கள், கதைகள் எனப் பக்கத்துக்குப் பக்கம் ஈர்க்கும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது நூல்.

படிப்பறை

கொரோனா வைரஸ் குறித்து குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை ராமானுஜம் எழுதியிருக்கிறார். உலகை அச்சுறுத்தும் 12 கொடிய வைரஸ் நோய்கள் பற்றிய கட்டுரையைக் குழந்தைகள் கட்டாயம் வாசிக்க வேண்டும். மருத்துவத் தொழில்நுட்பங்கள், காலநிலை மாற்றம், நுண்ணுயிரியல், புவிகாந்தவியல், விண்கல், ஈர்ப்புவிசை எனத் தீவிர அறிவியலைச் சிறுவர்களுக்கான மொழியில் எளிய உதாரணங்களோடு, கதை சொல்லல் தொனியோடு எழுதியிருக்கிறார்கள் அத்துறை சார்ந்த நிபுணர்கள். எறும்புகள், உடல் முழுவதும் நஞ்சைச் சுமந்துகொண்டிருக்கும் மெல்லுடலிகள், மணற்குழி நண்டுகள், கடல் ஜெல்லிகள் பற்றிய கட்டுரைகளும் இந்த நூலை குழந்தைகளுக்கு நெருக்கமாக்குகின்றன. பேராசிரியர் சோ.மோகனா வல்லூறுகளின் வாழ்க்கைமுறை பற்றி எழுதியிருக்கும் கட்டுரையை ரஜினியின் குரலில் படித்துப்பார்ப்பது ஜாலி அனுபவம்.

சவர்க்காரத்தை வீட்டிலேயே தயாரிக்கும் முறைகள், ஓரிகாமி காகித மடிப்புக்கலை, கணித விளையாட்டுகள் எனப் புத்தகம் நெடுக குழந்தைகள் செய்து பார்க்கப் பல பயிற்சிகளும் இருக்கின்றன. இந்தப் புத்தகம் நிச்சயம் குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்யும்!

துளிர்- அறிவியல் கட்டுரைகள்

அறிவியல் வெளியீடு

245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம்,

சென்னை-600086,

தொடர்புக்கு:9994368501

விலை: ரூ.150

பக்கங்கள்:152