Published:Updated:

எல்லை காக்கும் வீரர்களுக்கு ஓர் அமைதி சமர்ப்பணம்!- கவிதை #MyVikatan

விகடன் வாசகி

``நம் கண்ணின் குதூகலம் அவன் கண்ணின் பயத்தையும் கண்ணீரையும் தாண்டித்தான் நம்முள் வர முடியும்''

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

ஒரு டீசரும் பந்தும் அவனைத் தாண்டித்தான் நம் பார்வைக்கு வர முடியும்

நம்மில் உதிக்கும் புது உறவும் பேரின்பமும் அவன் தெளித்த ரத்த நீரில்தான் முளைத்திருக்க முடியும்

நம் நாவின் சுவை அவன் விட்டுவைத்த பசியில் தான் ருசியாக இருந்திருக்க முடியும்

நாம் தேடும் லட்சியங்கள் அவன் தொலைத்த கனவுகளில் தான் தொடங்கி இருக்க முடியும்

நம் மேனியின் பளபளப்பு அவன் மேனியின் காயங்களில் தான் தோன்றி இருக்க முடியும்

நாம் கேட்கும் இசை அவனின் வலிக்குமுறலில் தான் உதித்திருக்க முடியும்

நம்மின் அமைதியான நிமிடங்கள் அவனின் பரபரப்பான தருணங்களைத் தாண்டித்தான் பிறந்திருக்க முடியும்

நம் கண்ணின் குதூகலம் அவன் கண்ணின் பயத்தையும் கண்ணீரையும் தாண்டித்தான் நம்முள் வர முடியும்

நம் நீலவானமும் அந்திமாலையும் அவன் சோர்வான கண்களில் இருந்தே உதயமாகி இருக்க முடியும்

நமக்கு வரும் கரகோஷம் அவன் கேட்ட மரண ஓலத்தில் இருந்தே ஓங்கியிருக்க முடியும்

நாம் சேர்க்கும் பொருள் அவன் மறந்த நேரங்களில் தான் நமக்கு கிடைத்திருக்க முடியும்

நம்மின் நீங்கா நினைவுகள் அவன் மறந்துபோன உணர்வுகளில் இருந்து தான் கிளைத்திருக்க முடியும்

நாம் விடும் பெருமூச்சு அவன் நிறைவாய் விட்டுச்சென்ற சிறு மூச்சினிலே நிறைந்திருக்க முடியும்

நம்மின் ஆசைகள் அவனது தாகத்திலேயே அடங்கியிருக்க முடியும்

நம்மின் புதிருக்கான விடைகள் அவனது வினாக்களுக்கே கிடைத்திருக்க முடியும்

நமது வாழ்வின் வண்ணம் அவனது குருதியினாலேயே வரைந்திருக்க முடியும்

Representational Image
Representational Image
Credits : Shutterstock

அவன் தவித்து அளித்த அமைதி என்னும் பரிசை சாதி, தீண்டாமை, ஊழல், கொலை, பாலியல் வன்கொடுமை, போட்டி, பொறாமை, வஞ்சம், லஞ்சம் என்ற ஆயுதங்களால் கிழித்து உடைத்து கசக்கி விடாமல் நித்தமும் காத்து வருவது மட்டுமே நம்மால் முடியும்.

-நாக சரஸ்வதி

MyVikatan
MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/