கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

கவிதை : காதல் மருந்து

கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதை

உமாதேவி

காலமும் வாழ்வும்

வண்ணமயமாய் காட்சியளிக்க

இன்மையின் இறுதியிலிருந்து

இறுப்பின் முதன்மையில் சுடரும்

ஒற்றைச் சூரியனின்

கருணையில் உயிர்க்கிறது பிரபஞ்சம்

அளந்தெடுக்க முடியாத

அதன் ஆற்றலை சுரக்கிறது

சொற்களாய் கருவுற்றும்

வார்த்தையாய் பிறக்காத

பல்லாண்டு கர்ப்பிணிபோல்

உள்ளுறைந்து கிடக்கும்

அன்பின் ஊற்று

கவிதை : காதல் மருந்து

ஏழுகடல்

ஏழுமலை

ஏழுஉலகம் அல்ல

கோடி கடல்

கோடி மலை

கோடி உலகம் கடந்து

உன்னைச் சரணடைந்திருக்கிறது

என் காதல்

ஆற்றிடும் பெருமருந்து

நீ என்று இருக்கையில்

கசப்பென்ன அன்பே

கடும் விஷமும்

அருந்திடுவேன்.