Published:Updated:

தகுதி நீக்கம் செய்யப்பட்ட உசேன் போல்ட் உலக சாதனை செய்த கதை! | பர்வீன் சுல்தானா | சொல் புதிது

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

நம் வாழ்வில் கற்றல் எப்படி இருக்க வேண்டும் என 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"பசியோடு காத்திருக்கும் குஞ்சுகளுக்கு ஒரு பறவை எப்படி இறையைக் கொடுக்குமோ, அது போலத்தான் கற்பதற்கு ஆர்வமுடன் காத்திருக்கும் மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் சரியான சிந்தனைகளைப் புகட்டுவது. கற்றல் என்பது எப்படி இருக்க வேண்டும், முழுமையாக ஒரு விஷயத்தைக் கற்க வேண்டும், கற்றுத் தெளிய வேண்டும், அதில் இருக்கின்ற ஆனந்தத்தை இளைஞர்கள் உணர வேண்டும்.

உசைன் போல்ட் ஒரு ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். போட்டி தொடங்குவதற்கான துப்பாக்கி முழங்கும் முன்பே கால் எடுத்து வைத்து ஓட்டத்தைத் தொடங்கினார் எனக் கூறி தகுதிநீக்கம் செய்யப்படுகிறார். அதற்கு அடுத்து வந்த ஒலிம்பிக்கில் உசைன் போல்ட் கலந்துகொள்கிறார், முன்பை விடத் தீவிரமாக, முன்பை விடத் தீர்க்கமாக, முன்பை விடத் தெளிவாக வந்து பதக்கத்தைத் தட்டிச் செல்கிறார். அந்த இரண்டு ஒலிம்பிற்கிக்கும் இடைப்பட்ட காலத்தை அவர் எப்படிக் கடந்திருப்பார்? அந்த ஒரு காலகட்டம் எவ்வளவு சோர்வானதாக அவருக்கு இருந்திருக்கும்?"

நம் வாழ்வில் கற்றல் எப்படி இருக்க வேண்டும் என 'சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு