வண்ணப் புதுமலரே - எங்கள்

வாசனைச் சிறுகனவே!

எண்ணச் சுனைகளிலே - சுற்றும்

இன்பப் பொன்படகே!

வீடு நிறைந்திருக்கும் - எங்கள்

வெளிச்ச மலரழகே!

காடு சுமந்திருக்கும் - எங்கள்

கற்பகச் சிறுவிதையே!

பள்ளிச் சிறைக்கதவு - காலை

பையத் திறக்கையிலே

சுள்ளி எரிவதுபோல் - நீங்கள்

சுருங்கிப் போவதென்ன?

அமுதப் பாசனங்கள் - உங்கள்

அடியில் பாய்வதுபோய்

அமிலப் பெருவெள்ளம் - உம்மை

அடித்துக் கொண்டோடுவதோ?

சந்தனக் கிண்ணங்களாய் - நீங்கள்

சாய்ந்து நடப்பதற்குள்

பந்தயக் குதிரைகளாய் - நீங்கள்

பதறிப் பறப்பதுவோ?

சுயத்தை இனங்கண்டு - பிள்ளை

சுடர்விடு பொழுதினிலே

பயத்தை உருவாக்கி - சின்னப்

பைத்தியம் செய்வதுவோ?

நேயக் கனவுகளில் - உள்ளம்

நீந்திவரும் வயதில்

மாயப் பேய்களிடம் - நீங்கள்

மல்லுக்கு நிற்பதுவோ?

ஞானச் சிறகுகளைப் - பூட்டும்

நல்லதோர் வயதினிலே

ஆணிப் படுக்கையிலே - நீங்கள்

அறையப் படுவதுவோ?

வெண்ணிலா தொடுவதற்கும் - ஆங்கே

விண்மீன்கள் நடுவதற்கும்

எண்ணிலாக் கனவுகாணும் - சிறாரின்

இளங்கண் பறிப்பதுவோ?

சிட்டாங் குருவிகட்குப் - பறக்கச்

சிகரம் காட்டாமல்

பட்டாம் பூச்சிகளின் - சிறகில்

பாறாங்கல் கட்டுவதோ?

தப்பென்று பிள்ளைகளை - மதிப்பெண்

தரம்பார்த் தறிவீரோ?

உப்பென்று கொள்ளுவதால் - கடலை

ஒப்பாமற் போவீரோ?

தேர்விலே வருவதல்ல - கல்வி

திணிப்பதில் வருவதல்ல

ஆர்வத்தில் வருவதல்லால் - ஞானம்

ஆணையிட் டடைவதல்ல

வதைகளை நிறுத்திவிட்டால் - பள்ளி

வகுப்பறை பூக்கள்பூக்கும்

விதைகளை நசுக்கிநட்டால் - ஆங்கே

விளைச்சலா பெருகக்கூடும்?

வெள்ளப் போக்கினிலே - மெல்ல

விரையும் படகினைப்போல்

உள்ளப் போக்கினிலே - உங்கள்

உலகம் அசையட்டும்

அச்சத்தை ஓட்டுதற்கே - முன்னோர்

அருங்கல்வி தந்துவந்தார்

அச்சத்தை மூட்டுமென்றால் - அந்த

அழுங்கல்வி தேவையில்லை

நின்றதோர் அறிவுகொண்டு - மேலும்

நீளுமோர் அறிவுகண்டு

குன்றுபோல் ஊர்நிமிர்த்தும் - நல்ல

கொள்கையே கல்விக்கொள்கை.

வண்ணப் புதுமலரே - எங்கள்

வாசனைச் சிறுகனவே!

எண்ணச் சுனைகளிலே - சுற்றும்

இன்பப் பொன்படகே!

வீடு நிறைந்திருக்கும் - எங்கள்

வெளிச்ச மலரழகே!

காடு சுமந்திருக்கும் - எங்கள்

கற்பகச் சிறுவிதையே!

பள்ளிச் சிறைக்கதவு - காலை

பையத் திறக்கையிலே

சுள்ளி எரிவதுபோல் - நீங்கள்

சுருங்கிப் போவதென்ன?

அமுதப் பாசனங்கள் - உங்கள்

அடியில் பாய்வதுபோய்

அமிலப் பெருவெள்ளம் - உம்மை

அடித்துக் கொண்டோடுவதோ?

சந்தனக் கிண்ணங்களாய் - நீங்கள்

சாய்ந்து நடப்பதற்குள்

பந்தயக் குதிரைகளாய் - நீங்கள்

பதறிப் பறப்பதுவோ?

சுயத்தை இனங்கண்டு - பிள்ளை

சுடர்விடு பொழுதினிலே

பயத்தை உருவாக்கி - சின்னப்

பைத்தியம் செய்வதுவோ?

நேயக் கனவுகளில் - உள்ளம்

நீந்திவரும் வயதில்

மாயப் பேய்களிடம் - நீங்கள்

மல்லுக்கு நிற்பதுவோ?

ஞானச் சிறகுகளைப் - பூட்டும்

நல்லதோர் வயதினிலே

ஆணிப் படுக்கையிலே - நீங்கள்

அறையப் படுவதுவோ?

வெண்ணிலா தொடுவதற்கும் - ஆங்கே

விண்மீன்கள் நடுவதற்கும்

எண்ணிலாக் கனவுகாணும் - சிறாரின்

இளங்கண் பறிப்பதுவோ?

சிட்டாங் குருவிகட்குப் - பறக்கச்

சிகரம் காட்டாமல்

பட்டாம் பூச்சிகளின் - சிறகில்

பாறாங்கல் கட்டுவதோ?

தப்பென்று பிள்ளைகளை - மதிப்பெண்

தரம்பார்த் தறிவீரோ?

உப்பென்று கொள்ளுவதால் - கடலை

ஒப்பாமற் போவீரோ?

தேர்விலே வருவதல்ல - கல்வி

திணிப்பதில் வருவதல்ல

ஆர்வத்தில் வருவதல்லால் - ஞானம்

ஆணையிட் டடைவதல்ல

வதைகளை நிறுத்திவிட்டால் - பள்ளி

வகுப்பறை பூக்கள்பூக்கும்

விதைகளை நசுக்கிநட்டால் - ஆங்கே

விளைச்சலா பெருகக்கூடும்?

வெள்ளப் போக்கினிலே - மெல்ல

விரையும் படகினைப்போல்

உள்ளப் போக்கினிலே - உங்கள்

உலகம் அசையட்டும்

அச்சத்தை ஓட்டுதற்கே - முன்னோர்

அருங்கல்வி தந்துவந்தார்

அச்சத்தை மூட்டுமென்றால் - அந்த

அழுங்கல்வி தேவையில்லை

நின்றதோர் அறிவுகொண்டு - மேலும்

நீளுமோர் அறிவுகண்டு

குன்றுபோல் ஊர்நிமிர்த்தும் - நல்ல

கொள்கையே கல்விக்கொள்கை.