கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

தூரத்தில் விழுந்த நிழல்

கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதை

கவிதை

தானியங்களைக் காற்றில்தானே வீசினோம்

அது எப்படி தரைக்கு வந்தது

தானியங்களைத் தரையில்தானே விதைத்தோம்

இடையில் எப்படி நீர் புகுந்தது

தானியங்களை மிதக்கத்தானே சொன்னோம்

அது ஏன் நம்பிக்கை இழந்தது

இங்குவந்து பாருங்கள்

நீரில் உருவம் பெரிதான தானியங்களை

இன்னும் சிலபேர் சேர்த்து உண்ணலாம்போல

தூரத்தில் விழுந்த நிழல்

இப்படி வெறுமனே கதைபேசுவதில்

ஒரு அர்த்தமும் இல்லை நண்பா

அந்தப் பளிங்கு நீரில் மூழ்கிய தானியங்கள்

அதுபாட்டுக்கு ஆழத்திற்குச் சென்றுவிட்டன

கோழிகள்தான்

இன்னும் நீரின் மேற்பரப்பைக்

கொத்திக்கொண்டிருக்கின்றன