Published:Updated:

பதில் சொல்வதா, கேள்வி கேட்பதா - எது கல்வி? | பர்வீன் சுல்தானா | சொல் புதிது

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

கற்றலில் கேட்டல் எவ்வளவு முக்கியம் என்பதனை 'சொல் புதிது' என்ற கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

"இந்தியச் சமூகக் கட்டமைப்பில் கல்வி என்பது இன்றியமையாத ஒன்று. கேட்கின்ற கேள்விகளுக்கு எல்லாம் சரியான பதில் சொல்கிற ஒருவர் தான் சிறப்பாகக் கல்வி கற்றிருக்கிறார் என்கிற பொதுவான எண்ணம் நம் எல்லோரிடமும் உண்டு. ஆனால், பதில் சொல்வது தான் சிறந்த கல்விக்கு அடையாளமா என்றால், இல்லை கேள்விகள் கேட்க வேண்டும். கேள்வி கேட்க வேண்டும் என்றால் சிறப்பான கற்றல் நம்மிடம் இருக்க வேண்டும்.

'நான் சொல்வதைக் கேள்' என வகுப்பில் ஆசிரியர் எப்போதும் கூறிக் கொண்டே இருப்பார்கள். ஏனென்றால், கேட்கின்ற திறன் என்பது கல்வி கற்பதற்கு மிகவும் முக்கியமான ஒன்று. யார் ஒருவர் கேட்பதில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்களோ, அவர்கள் தான் கற்றலில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்."

கற்றலில் கேட்டல் எவ்வளவு முக்கியம் என்பதனை 'சொல் புதிது' என்ற கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
அடுத்த கட்டுரைக்கு