Published:Updated:

பிரபல எழுத்தாளர், கார்ட்டூனிஸ்ட் பரணீதரன் மரணம்!

பரணீதரன்
பரணீதரன்

ஊர்வம்பு, தனிக்குடித்தனம், மாப்பிள்ளை குறுக்கு உள்ளிட்ட நாடகங்களிலும் தன் தனித்துவத்தை வெளிப்படுத்த அவர் தவறியதே இல்லை.

நாடகம், எழுத்து, கார்ட்டூன் ஆகிய மூன்று துறைகளிலும் முத்திரை பதித்த பரணீதரன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

எழுத்தை ஆத்மரீதியாக நேசித்தவர் பரணீதரன். "ஆனந்த விகடன்" இதழின் இணைஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் பல சிறப்புமிக்க படைப்புகளைத் தந்தவர்.

பரணீதரன்
பரணீதரன்

பரணீதரன் எனும் பெயரில் ஆன்மிகக் கட்டுரைகளும் ஶ்ரீதர் எனும் பெயரில் கார்ட்டூன்களும் மெரினா எனும் பெயரில் நாடகங்களையும் எழுதினார்.

இவரின் ஆன்மிகக் கட்டுரைகளுக்குத் தனி வாசகர் பரப்பே இருக்குமளவு, அதில் தேர்ந்த ஆக்கங்களை அளித்தவர். காசி உள்ளிட்ட பல ஆன்மிக இடங்களுக்கு நேரில் சென்று அந்த அனுபவங்களை எழுதியவர். இவரின் `கஸ்தூரி திலகம்' எனும் நூல் சமீபத்தில் மறுபதிப்பு வெளிவந்து பலரின் பாராட்டுகளைப் பெற்றது.

ஊர்வம்பு, தனிக்குடித்தனம், மாப்பிள்ளை குறுக்கு உள்ளிட்ட நாடகங்களிலும் தன் தனித்துவத்தை வெளிப்படுத்த தவறியதே இல்லை. நாடகங்கள் மிகுந்திருந்த காலகட்டத்திலும் தனக்கான எல்லையை வகுத்துக்கொண்டு அதில் நேர்த்தியான கலைஞர்களைக் கொண்டு நாடகங்களை இயக்கினார்.

பரணீதரன்
பரணீதரன்

கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்த எழுத்தாளர் பரணீதரன் நேற்றிரவு மரணமடைந்தார். கலை உலகைச் சேர்ந்தவர்கள் பரணீதரனுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு