Published:Updated:

"அந்த மூத்த எழுத்தாளரின் செயலை இப்போது நினைத்தாலும் கோபம் வருகிறது"! - எழுத்தாளர் தமயந்தி #LetsRelieveStress

கிராபியென் ப்ளாக்

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் மீதுகூட சிலர் குற்றச்சாட்டுகளை வைப்பதுண்டு. அவர், பெண் எழுத்தாளர்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று பேசிக்கொண்டே, கொச்சையாகச் சிரித்து முடிப்பார்கள். அவர்களைப் பார்க்கும்போது எனக்கு கடுமையான கோபம் வரும்.

எழுத்தாளர் தமயந்தி
எழுத்தாளர் தமயந்தி

இயக்குநர், பாடலாசிரியர், எழுத்தாளர் எனப் பல முகங்களைக் கொண்ட படைப்பாளி தமயந்தி. புதிய திரைப்படத்துக்கான கதை விவாதம், புதிய படங்களுக்கான பாடல் எழுதும் பணிகளுக்கு மத்தியில் நாவல் ஒன்றையும் எழுதிக்கொண்டிருக்கிறார். தமயந்தியை ஒரு மழைப்பொழுதில் சந்தித்தேன். தனக்கு ஏற்பட்ட மனஅழுத்தங்கள் குறித்து மனம்திறந்து பேசினார்.

எழுத்தாளர் தமயந்தி
எழுத்தாளர் தமயந்தி

“நம் சமூகத்தில் எழுத்தாளராக வாழ்வது எளிதான காரியமல்ல. வாசிப்புக்கு பழக்கப்படாத ஒரு சமூகத்திலிருந்து எழுத வந்தவள் நான். திருநெல்வேலி மாவட்டத்தில், மத நெருக்கடியுள்ள ஒரு சமூகத்தில் பிறந்தேன். எழுத்து, சினிமா என்று சொன்னாலே பயங்கர கோபப்படுவார்கள்.

`இது சிறப்பான கதை’ என்று தமிழில் கொண்டாடப்படும் ஓர் எழுத்தாளர் விமர்சனம் எழுதினார். அப்போது அவர் மதுரையில் தங்கியிருந்தார். வார இதழ் ஒன்றில் அந்த விமர்சனம் வெளியானது. அந்த நேரத்தில், அது மிகப் பெரிய ஊக்கத்தை எனக்குக் கொடுத்தது.
எழுத்தாளர் தமயந்தி

நான் கிறிஸ்தவப் பள்ளியில் படித்தேன். அதனால் எழுத்து, கலை, இலக்கியம் என்று இறங்கினாலே வாழ்க்கையின் மிகப் பெரிய பாவம் என்பதுபோல பார்த்தார்கள். அப்போதெல்லாம் என் நண்பர்கள்தான் எனக்கு உதவியாக இருந்தார்கள். என்னுடைய அப்பாவும் ஆதரவளித்தார். பலர் என்னை எதிர்த்தபோதிலும் `எழுதுவதுதான் சக்தி’ என்று எனக்கு உணர்த்தினார். எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அது அப்பாவின் கனவு. ஆனால், நான் மறுத்தேன்; என் கருத்தை அப்பா ஏற்றுக்கொண்டார். பிறகு, நான் விரும்பியபடி ஆங்கில இலக்கியம் பயின்றேன்.

எழுத்தாளர் தமயந்தி
எழுத்தாளர் தமயந்தி

நான் எழுத வந்தபோது எழுதிய கதையை யாரிடம், எப்படிக் கொடுக்க வேண்டும் என்று எதுவுமே தெரியாது. மண்ணிலிருந்து வெடித்துக்கொண்டு வெளியே வரும் துளிர்போல இலக்கிய உலகிற்குள் வந்தேன். சூரியன், வெளிச்சம், காற்று எல்லாமே அந்தத் துளிருக்கு எப்படி புதியதோ அப்படித்தான் எனக்கு இலக்கியமும் புதிதாக இருந்தது. தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த நான், நடுவே பத்தாண்டுகள் சில காரணங்களால் எழுதாமல் இருந்தேன்.

நான் எழுதிய கதைகளில் எனக்குப் பிடிக்காத கதைகளும் உண்டு. உச்சி முதல் பாதம் வரை என் எழுத்தைப் பாராட்டிய அந்த எழுத்தாளர், விமர்சனக்கூட்டத்தில் அப்படிப் பேசியது என் அப்பாவை மிகவும் காயப்படுத்தியது. அதை என்னால் மன்னிக்கவே முடியாது.
எழுத்தாளர் தமயந்தி

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீவிரமாக எழுத ஆரம்பித்தேன். `அக்கக்கா குருவிகள்’ என்கிற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. அந்தப் புத்தகத்தில், குறிப்பிட்ட ஒரு கதை உண்டு. அது, என் அப்பாவின் தொலைந்துபோன ஒரு ராலே சைக்கிள் பற்றியது. `இது சிறப்பான கதை’ என்று தமிழில் கொண்டாடப்படும் ஓர் எழுத்தாளர் விமர்சனம் எழுதினார்.

எழுத்தாளர் தமயந்தி
எழுத்தாளர் தமயந்தி

அப்போது அவர் மதுரையில் தங்கியிருந்தார். வார இதழ் ஒன்றில் அந்த விமர்சனம் வெளியானது. அந்த நேரத்தில் அது மிகப் பெரிய ஊக்கத்தை எனக்குக் கொடுத்தது. சுற்றியிருந்த மனிதர்கள் யாருமே நான் எழுதுவதை ஒரு பொருட்டாகக் கருதாதபோது, யாரோ ஒருவர் வந்து, `உன் கதை நல்லாயிருக்கு...’ என்று சொன்னபோது, வறண்ட பாலைவனத்தில் குளிர்க்காற்று அடித்த மாதிரி இருந்தது.

‘அக்கக்கா குருவிகள்’ நூலுக்கான விமர்சனக் கூட்டம் திருநெல்வேலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் பேச, அந்த எழுத்தாளர் வந்தார். கூட்டத்தில் அவர் முரண்பாடாகப் பேசினார். `வெகுஜன இதழ்களில் எழுதுபவர் தமயந்தி. வெகுஜனம் என்பது மலிவான இலக்கியத்தை புரமோட் செய்வது. இந்தத் தொகுப்பில் ஒரு கதை கூடத் தேறாது’ என்கிற ரீதியில் அவர் எதிர்மறையாகப் பேசிக்கொண்டேபோனார்.

எழுத்தாளர் தமயந்தி
எழுத்தாளர் தமயந்தி

நான் எழுதிய கதைகளில் எனக்குப் பிடிக்காத கதைகளும் உண்டு. உச்சி முதல் பாதம் வரை என் எழுத்தைப் பாராட்டிய அந்த எழுத்தாளர், விமர்சனக்கூட்டத்தில் அப்படிப் பேசியது என் அப்பாவை மிகவும் காயப்படுத்தியது. அதை என்னால் மன்னிக்கவே முடியாது.

இந்தச் சமூகத்தில் பெண்களின் பாடுகளை ஆண்கள் எழுதுவது போலியானது. பெண்களே தங்கள் பிரச்னைகளை எழுத வரும்போது, அதில் நுட்பமும் செழுமையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் எழுதுவதுதான் நிஜம். அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எழுத்தாளர் தமயந்தி
எழுத்தாளர் தமயந்தி

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன்மீது கூட சிலர் குற்றச்சாட்டுகளை வைப்பதுண்டு. அவர், பெண் எழுத்தாளர்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று பேசிக்கொண்டே கொச்சையாகச் சிரித்து முடிப்பார்கள். அவர்களைப் பார்க்கும்போது, எனக்குக் கடுமையான கோபம் வரும்.

பிரச்னைகளையெல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு, அந்த நொடியில் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதுவே வாழ்க்கை; என்றும் அதுதான் முக்கியம்
எழுத்தாளர் தமயந்தி

இப்படி, விமர்சனம் செய்பவர்களில் எத்தனைபேர் தங்கள் வீட்டுப் பெண்களை இலக்கியக் கூட்டங்களுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். தன் துணையின் ரசனை என்னவென்று அவர்களுக்குத் தெரியுமா? மழையில் நனைந்துகொண்டே பேல் பூரி சாப்பிடும் மனைவியின் ஆசையை உணர்ந்திருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை.

எழுத்தாளர் தமயந்தி
எழுத்தாளர் தமயந்தி

இதையெல்லாம் உணர்ந்தபோதுதான், நான் பலருடைய நிராகரிப்புகள், பேச்சுகளால் ஏற்பட்ட மனஅழுத்தத்திலிருந்து வெளியே வந்தேன். இது ஒரு புரிதல்தான். பேசுபவர்கள் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். எழுதுவது மட்டுமே என்னுடைய வேலை என்பதை உணர்ந்தேன்

Vikatan

இலக்கியக் கூட்டங்களுக்கு செல்வதைத் தவிர்த்தேன். பிரச்னைகளையெல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு, அந்த நொடியில் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதுவே வாழ்க்கை என்றும் அதுதான் முக்கியம் என்றும் தெளிந்தேன்.

எழுத்தாளர் தமயந்தி
எழுத்தாளர் தமயந்தி

விமர்சனம் என்பது இலக்கியத்தில் மட்டுமல்ல... எல்லாத் துறையிலும் உண்டு. ஆனால், நாம் செய்யவேண்டிய வேலைகளையும் செல்லவேண்டிய திசையையும் தீர்மானித்துப் பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செல்லும்போது, நம்முடைய இலக்குகள் வெற்றியின் அருகே போய் நிற்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை!” என்கிறார் தமயந்தி.