Published:Updated:

“சென்னையின் உடல்மொழி தோள்பட்டையில் இருக்கிறது!”

கரன் கார்க்கி
பிரீமியம் ஸ்டோரி
கரன் கார்க்கி

ஓவியம்: சுரேஷ்

“சென்னையின் உடல்மொழி தோள்பட்டையில் இருக்கிறது!”

ஓவியம்: சுரேஷ்

Published:Updated:
கரன் கார்க்கி
பிரீமியம் ஸ்டோரி
கரன் கார்க்கி

சென்னை மனிதர்களின் சரணாலயம். பல நூற்றாண்டு வரலாறு கொண்ட சென்னை பலதரப்பட்ட மக்களின் பண்பாட்டுச் சுவடுகளைத் தாங்கி நிற்கிறது. ஆனாலும் அனுதினம் அடையாளம் மாறும். சென்னையின் முகம் அதன் பூர்வகுடிகள்தாம்! அவர்தம் வாழ்வியல் கூறுகளைத் தன் படைப்புகளில் பதிவு செய்பவர் எழுத்தாளர் கரன் கார்க்கி. கறுப்பர் நகரம், மரப்பாலம், ஒற்றைப்பல் போன்ற நாவல்கள், திரைப்படப் பங்களிப்புகள் எனத் தீவிரமாகச் செயல்படுபவர். போர், சிதைவு, கலாசார அரசியல் எனத் தன் புனைவுகளில் கலந்து உருவேற்றக்கூடியவர். நோய்ப் பரவலின் முடக்க நிலையில் இன்று தமிழகத்தின் பேசுபொருளாகியுள்ளது சென்னை. ஒருபுறம் நோயின் அடையாளமாக மாறியிருக்கிறது என்றால் இன்னொருபுறம் வாழ்வு தேடிவந்தவர்கள் சென்னையை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். சென்னை எழுத்தாளர் என்ன நினைக்கிறார்?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“வெளியூரிலிருந்து சென்னை வருபவர்கள் அடையும் ஆச்சர்யம்தான் சென்னையைப் பற்றி என்னை உணரவைத்தது.

ஒரு கிராமத்திற்குள் நுழையும்போது முதல் கேள்வியாக நான் யார் என்று விசாரிப்பார்கள். ஆனால், சென்னையிலுள்ள ஒரு தெருவினுள் ஒருநாளைக்கு 100 முறைகூட சென்று வரலாம். யாரும் கேட்கமாட்டார்கள். மாறாக, சென்னையின் இந்தத் திறந்த சுதந்திர அமைப்புமுறை என்பது உளவியல்ரீதியிலான மகிழ்ச்சியைத் தருகிறது.

கரன் கார்க்கி
கரன் கார்க்கி

சென்னைக் கன்னிகாபுரம் பகுதியில்தான் நான் வசிக்கிறேன். சிறுவயதில் நான் பார்த்து ரசித்த பகுதிகள் இப்போது மாறிவிட்டன. ‘சால்ட் கோட்டர்ஸ்’ பின்புறத்திலிருந்து ‘பேசின் பிரிட்ஜ் அனல்மின் நிலையம்’ வரை குடிசைப்பகுதிகளாக இருந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை குடிசைகள் மட்டும்தான். மாட்டுக்கறி வியாபாரம் செய்யும் சிறிய கட்டடம், சாராயம் விற்பவர்கள் பகுதி, கிறிஸ்துவர் ஒருவர் வசிக்கும் வீடு, சிறிய சர்ச் இவை மட்டுமே கட்டடங்களாக இருந்தவை. தற்போது, சாலை 8 அடிவரை உயர்ந்துவிட்டதால் குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் பள்ளத்தில் இருப்பதாகத் தெரிகிறது. சில பகுதிகள் தற்போது ஹவுஸிங் போர்டாக மாறியிருக்கின்றன. பழைய கொத்தவால் சாவடி, நடராஜ் தியேட்டரிலிருந்து ஹார்பர் வரை கல்லிலேயே ரோடு போடப்பட்டிருக்கும். அதில் ட்ராம் வண்டியின் தண்டவாளம் இருக்கும். அன்று சென்னையின் ஒரே ‘அக்குவாரியம்’ இருந்த மூர்மார்க்கெட், பழைய நேரு ஸ்டேடியம், உயிர்காலேஜ் எல்லாம் அந்தக் காலத்தில் எங்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடங்கள்.

‘உயிர் காலேஜ்’ என்றால் அன்றைய விலங்குகள் காட்சி யகத்தின் சொல்வழக்கு. 1850களில் எக்மோர் மியூசியத்தை நிறுவிய பார்மன், மக்கள் யாரும் பார்வையிட வரவில்லை என்று கர்நாடகா நவாப் உதவியுடன் புலி, குரங்கு, உராங் குட்டான் போன்ற விலங்குகளை வாங்கி வைத்தார். பின், அந்த உயிர்களின் சத்தங்கள் தொல்லை தரக்கூடியதாக இருந்ததால், உயிர்காலேஜ் எங்கள் பகுதிக்கு மாற்றப்பட்டது. எங்கள் மக்கள் அப்போதே பிறருக்கான இன்னல்களைச் சுமந்திருக்கிறார்கள்.

அப்போது சென்னையில் இவ்வளவு மக்கள் அடர்த்தியெல்லாம் இல்லை. வடசென்னைப் பகுதியில் நடைபெறும் ‘திருப்பதி கொடை’ திருவிழாவில் ஒரு நாள் கூடும் கூட்டம் இன்று சென்னையின் முக்கியமான இடங்களில் அனுதினமும் கூடுகிறது. வடக்கில் வியாசர்பாடி, தெற்கில் சைதாப்பேட்டை, மேற்கில் அயனாவரம் வரைதான் அசல் சென்னை. இன்று பேசப்படும் வடசென்னை, தென்சென்னையெல்லாம் அரசியல் வசதிக்காக உருவாக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

கரன் கார்க்கி
கரன் கார்க்கி

“ஒவ்வொரு நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கும் தனித்த உடல்மொழி இருக்கும். அதுபோல், சென்னைக்காரர்களுக்கென தனித்த உடல்மொழி உள்ளது. அவர்கள் பேசும்போது அதிகம் தோள்பட்டையை ஆட்டி ஆட்டிப் பேசுவார்கள். ஆனால், ‘மெட்ராஸ் பாஷை’ என்று திரைப்படங்களில் கொச்சைப்படுத்தி அவர்களின் இயல்பைச் சாகடித்துவிட்டார்கள்.

கரன் கார்க்கி
கரன் கார்க்கி

ஆனால் இப்போது வட சென்னையைக் களமாகக் கொண்டு படைப்புகள் வருவது மகிழ்ச்சியானது. ஆனால், அவை பெரும்பாலும் உண்மையற்றதாகவும், பாசாங்குத்தனமாகவும் வெளிவருகிறது. பலரும் தெருவோரம் இருக்கும் அழுக்குக் குடியிருப்புகள்தான் வடசென்னை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அடிப்படையில் வடசென்னை 10, 12 லேயர் வரை பல அமைப்பைப் பெற்றுள்ளது. நேற்றுவரை எழவு வீட்டில், தங்களுக்குள் கானா பாடிக்கொண்டிருந்தவர்கள், இன்று கோட்சூட் போட்டு மேடையில் அரசியல் புரிதலோடு பாடுகிறார்கள். வடசென்னையின் தனித்துவம் இந்த விடுதலை அரசியல் உணர்வுதான்” என்கிறார் அழுத்தமாக.