Published:Updated:

"பெண் எழுத்தாளர் என்று என்னைச் சுருக்காதீர்கள்..." - எழுத்தாளர் அம்பை

அம்பை
News
அம்பை

பெண் எழுத்தாளர் என்பதற்காக எனக்கு விருது தந்தால் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். தமிழில்தான் இந்த நிலை. வேறு எந்த மொழியிலும் இந்த நிலை இல்லை

2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை' சிறுகதைத் தொகுப்புக்காக தமிழின் மூத்த நாவலாசிரியை அம்பைக்கு வழங்கப்பட்டுள்ளது. நாற்பதாண்டுகளுக்கு முன்பு ஒரு சிறார் நாவலின் மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமான அம்பை, சராசரியான கற்பிதங்களை உடைத்து நவீன பெண்ணெழுத்தின் தொடக்க முகமாக தன்னை தமிழிலக்கியச் சூழலில் நிலைநிறுத்தியவர். கோவையில் பிறந்து, சென்னையில் படித்து டெல்லியில் வேலை செய்து தற்போது மும்பையில் வசிக்கும் அம்பை, பெண்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் SPARROW (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நடத்துகிறார். சாகித்ய அகாடமி தமிழ்ப் பெண் படைப்பாளிகளை உரிய முறையில் அங்கீகரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவிவந்த நிலையில் இந்தாண்டுக்கான விருது அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பை
அம்பை

வாழ்த்துகளும் பூங்கொத்துகளுக்கும் குவிய சிறிய இடைவெளியொன்றில் அம்பையிடம் உரையாடினேன். "66 ஆண்டுகால வரலாற்றில் சாகித்ய அகாடமி விருதுபெறும் நான்காவது பெண் படைப்பாளி நீங்கள்.. வாழ்த்துகள்" என்றேன். "பெண் எழுத்தாளர் என்று என்னைச் சுருக்காதீர்கள்..." என்று சிரித்த அம்பை, "பெண் எழுத்தாளர் என்பதற்காக எனக்கு விருது தந்தால் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். தமிழில்தான் இந்த நிலை. வேறு எந்த மொழியிலும் இந்த நிலை இல்லை. தெலுங்கு, கன்னடம், குஜராத்தி என எந்தமொழியை எடுத்துக்கொண்டாலும் பெண் எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி வாங்கியிருக்கிறார்கள்..." என்றார். "விருது மகிழ்ச்சியளிக்கிறதா?" என்றேன் "விருது வந்தது மகிழ்ச்சிதான். ஆனால் எனக்கு முன்னால் இருக்கும் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஞானக்கூத்தன் போன்ற படைப்பாளிகளுக்கெல்லாம் சாகித்ய அகாடமி விருது கிடைக்கவில்லை. எனக்குக் கிடைத்திருக்கிறது. விருதை பெறுகையில் கூச்ச உணர்வு ஏற்படுகிறது" என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz