Published:Updated:

`கரிசல் மண்ணின் சீர்மிகு கதைசொல்லி!' - சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது

சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் `சூல்' நாவல் 2016-ம் ஆண்டு வெளியானது.

சோ.தர்மன்
சோ.தர்மன்

2019 ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் சோ.தர்மனுக்கு வழங்கப்படுகிறது. கரிசல் நில எழுத்தாளர்களில் தனக்கென தனித்த மொழிநடையும் கதைக்களமும் கொண்டவர் சோ.தர்மன். தன் எழுத்துகளின் வழியே எளிய மக்களின் வாழ்வை எந்தவித பூச்சுகளும் இன்றி பதிவு செய்தவர். கோவில்பட்டிக்கு அருகிலுள்ள உருளைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர். இதுவரை மூன்று நாவல்கள் எழுதியுள்ளார். இவரது முதல் நாவல்`தூர்வை’ 1996-ம் ஆண்டு வெளியானது. இரண்டாவது நாவல் `கூகை’ 2005-ம் ஆண்டு வெளியானது. மூன்றாவது நாவலான `சூல்’ 2016-ம் ஆண்டு வெளியானது.

`சூல்' நாவலை 2016-ம் ஆண்டுக்கான சிறந்த நாவலாகத் தேர்வு செய்து விகடன் விருது வழங்கப்பட்டது.

சோ.தர்மன்
சோ.தர்மன்
Vikatan

இவரது ஒவ்வொரு நாவலும் வெளிவர எடுத்துக்கொண்ட இடைவெளி 10 ஆண்டுகள். அவரது நான்காவது நாவல் வெளிவர உள்ளது. எப்போதும் தன் மண்சார்ந்த மக்களின் கதைகளை உயிர்ப்புடன் பதிவு செய்யும் சோ.தர்மன் நாவலைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுவார்.

" ஒரு படைப்பாளி, பரந்தவெளியில் சுதந்திரமாகப் பறந்து திரியத் தேர்ந்தெடுக்கும் இலக்கிய வடிவமே `நாவல்.’ படைப்புச் சுதந்திரத்தின் அத்தனை வீச்சுகளையும் பரிசோதித்துப் பார்க்க, நாவலைவிட சிறந்த இலக்கிய வடிவம் வேறு எதுவும் இருக்க முடியாது. என்னுடைய முதல் நாவல் `தூர்வை’ 1996-ம் ஆண்டு வெளியானது."

வாழ்த்துகள் சோ.தர்மன்