Published:Updated:

2021-ம் ஆண்டிற்கான விளக்கு விருதுகள் அறிவிப்பு!

அஸ்வகோஷ் எ இராஜேந்திரசோழன், வண்ணநிலவன்

2021-ம் ஆண்டிற்கான விளக்கு விருதுகள் அறிவிப்பு!

2021-ம் ஆண்டிற்கான விளக்கு விருதுகள் அறிவிப்பு!

2021-ம் ஆண்டிற்கான விளக்கு விருதுகள் அறிவிப்பு!

Published:Updated:
அஸ்வகோஷ் எ இராஜேந்திரசோழன், வண்ணநிலவன்

எழுத்தாளர் புதுமைப்பித்தனின் நினைவாக கலை மற்றும் இலக்கியத்தில் சிறப்பாக பங்காற்றுபவர்களை கெளரவப்படுத்தும் விதமாக 'புதுமைப்பித்தன் நினைவு விருது', 'விளக்கு விருது' அமெரிக்க வாழ் தமிழர்களின் ’விளக்கு’ என்ற இலக்கிய பண்பாட்டு அமைப்பினரால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விருதுடன் ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2021ம் ஆண்டிற்கான ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 26 வது “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளுக்குரியவர்களை எழுத்தாளர் சி. மோகன், ஆய்வாளர் வ. கீதா, மொழிபெயர்ப்பாளர் சண்முகசுந்தரம் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளது.

2021ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் அஸ்வகோஷ் எ இராஜேந்திரசோழன் (புனைவற்ற படைப்புகள்), வண்ணநிலவன் (புனைவிலக்கியம்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

அஸ்வகோஷ் எ இராஜேந்திரசோழன்

இராஜேந்திரசோழன்
இராஜேந்திரசோழன்

மனித மனங்களின் வெக்கையை, அந்த உணர்ச்சிச் சூடு குறையாமல் புனைவுக்குள் மொழிப்படுத்தியவர் எழுத்தாளர் இராசேந்திர சோழன். மண்ணின் மொழியில் நடுநாட்டுக்கதைகளைப் புனையும் எழுத்தாளுமைகளின் ஒரே ஆதாரம் இவர். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரைகள் எனக் கலை இலக்கியத்திலும் அரசியல், அறிவியல், தத்துவம், களப்போராட்டங்கள் எனப் பொதுவாழ்வில், வாழ்க்கையின் பெரும்பகுதியைச் சமூகச் செயல்பாடுகளால் நிறைத்தவர். அஸ்வகோஷ் என்ற புனைபெயரிலும் நிறைய எழுதியவர். தற்போது செங்கல்பட்டில் வசிக்கிறார்.

வண்ணநிலவன்

வண்ணநிலவன்
வண்ணநிலவன்

மிழ் சினிமாவின் அரிய முயற்சிகளில் ஒன்று `அவள் அப்படித்தான்’. ருத்ரைய்யா இயக்கிய இந்தப் படத்தின் வசனங்கள் இன்றளவும் பேசப்படுபவை. இப்படத்தின் வசனகர்த்தாக்களில் ஒருவராகப் பணியாற்றியவர் வண்ணநிலவன். `கடல்புரத்தில்’, `கம்பாநதி’, `ரெயினீஸ் ஐயர் தெரு’, `எம்.எல்’ உள்ளிட்ட நாவல்களும் ‘எஸ்தர்’, ‘பாம்பும் பிராடனும்’, தர்மம்’, `உள்ளும் புறமும்’, `தாமிரவருணிக் கதைகள்’, `வண்ணநிலவன் கதைகள்’, `கரையும் உருவங்கள்’ ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன. கடலாடிகளின் வாழ்க்கை சித்திரமாக விளங்கும் `கடல்புரத்தில்’ நாவல் பெரும்பான்மையான வாசகர்களால் இப்போதும் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்படுகிறது. இந்த நாவல், சென்னை தூர்தர்ஷனில் தொடராகவும் வெளிவந்தது. 

இந்த விளக்கு விருதினை சி.சு.செல்லப்பா, பிரமிள், பூமணி, ஞானக்கூத்தன், அம்பை, ராஜ்கெளதமன், சுகிர்தரானி உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.