Published:Updated:

படிக்கலாம், தனிமையைக் கழிக்கலாம்!

எஸ்.ராமகிருஷ்ணன், அ. வெண்ணிலா
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.ராமகிருஷ்ணன், அ. வெண்ணிலா

இந்த நூல்கள் நமக்கு வாழ்வின் அந்தப் பக்கங்களைப் புரட்டிக் காட்டும்.

படிக்கலாம், தனிமையைக் கழிக்கலாம்!

இந்த நூல்கள் நமக்கு வாழ்வின் அந்தப் பக்கங்களைப் புரட்டிக் காட்டும்.

Published:Updated:
எஸ்.ராமகிருஷ்ணன், அ. வெண்ணிலா
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.ராமகிருஷ்ணன், அ. வெண்ணிலா
கொரோனா உபயத்தில் இந்தியாவே வீட்டில் முடங்கி இருக்கிறது. கொரோனாக் குழப்பத்தில் மனதுக்கு இறுக்கமான நிலையை மாற்றி மனதைப் புத்துயிர்ப்பாக்கிக்கொள்ளச் சிறந்த மருந்து புத்தக வாசிப்பு. இந்த நெருக்கடியான சூழலைக் கடந்து வர, எதிர்கொள்ள என்ன படிக்கலாம் என, எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டோம்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அ. வெண்ணிலா எழுத்தாளர் :

கிழவனும் கடலும் - எர்னஸ்ட் ஹெமிங்வே

கடைசி இலை - ஓ ஹென்றி

குழந்தைப் போராளி - சைனா கெய்றெற்சி

செம்பருத்தி - தி.ஜானகிராமன்

மனிதர்களின் துயரங்களும், துயரங்களிலிருந்து மீள்வதற்கான பாடுகளுமே படைப்பிற்கான அடிப்படை. எக்காலத்திலோ, எந்த நாட்டிலோ, முகமறியாத மனிதர்களின் துயரங்களும், அந்தத் துயரங்களிலிருந்து அவர்கள் மீண்டு வந்த கதைகளும், வாசிக்கும் ஒவ்வொருவரையும் தன் வயப்படுத்திக்கொள்ளும். நம் துயரங்கள் ஒன்றுமே இல்லை, இந்த மாபெரும் துயரங்களுக்கு முன்னால் என்று மனதைச் சமாதானப்படுத்திப் புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும்.

அ. வெண்ணிலா
அ. வெண்ணிலா

நம் உடம்பில் எங்கிருக்கிறது என்றே தீர்மானிக்க முடியாத, நினைவுகளின் தொகுப்பான மனமே, உடம்பையும் மூளையையும் தன் கட்டுக்குள் வைக்கும் திறன் பெற்றிருக்கிறது. மனம் என்னும் பெரும் ராட்சசனை நெருக்கடி நேரத்தில் நம் வசம் வைத்திருக்க வேண்டும். உலகின் மாபெரும் போராட்டக் கதைகளை, உளநெருக்கடிகளை வாசிக்கும்போது, இன்று நாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை எளிதாகக் கடந்துவிடலாம் என்ற நம்பிக்கை வரும். நம்மைவிட இந்த உலகத்தின் மனிதர்கள் இதற்கு முன்னாள் எவ்வளவு துயரங்களைக் கடந்திருக்கிறார்கள் என்ற ஆறுதல் தோன்றும். உலக மனிதர்கள் அனைவரும் வீடடங்கி இருக்கும் இச்சூழலில் மனதிற்கு நம்பிக்கையும் ஆறுதலும் தரும் புத்தகங்களில் இவை உள்ளன.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தாளர் :

கு.அழகிரிசாமி சிறுகதைகள்; கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன்; கிழவனும் கடலும் - எர்னெஸ்ட் ஹெமிங்வே; வீரபாண்டியன் மனைவி - அரு.ராமநாதன்; புத்துயிர்ப்பு - லியோ டால்ஸ்டாய்; வெண்ணிற இரவுகள் - ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி.

எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்.ராமகிருஷ்ணன்

இந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைமை சார்ந்தது. இந்தச் சூழலுக்கு இவை ஏற்றவையாக இருக்கும். வாழ்வின் மீதான பெரும் நம்பிக்கையைத் தரக்கூடியவை இந்த நூல்கள்.

நக்கீரன் எழுத்தாளர்:

குட்டி இளவரசன் - அந்த்வான் து செந்த் - எக்சுபெரி.

ஓநாய் குலச்சின்னம் - ஜியாங் ரோங்.

பரிணாமத்தின் பாதை - டேவிட் அட்டன்பரோ.

அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு - பில் பிரைசன்.

நக்கீரன்
நக்கீரன்

அறிவியல் சார்ந்து தவறான தகவல்கள் நிறைய இன்று உலவுகின்றன. அவற்றைத் தவிர்த்து அறிவியல்படி இந்த உலகை எளிமையாகப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகங்கள் உதவும். கட்டாயம் வீட்டிற்குள் இருக்கும் இந்தச் சூழலை ஓய்வாகவும், சிந்திக்கவும் நாம் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். உயிரின வரலாற்றையும் இயற்கையையும் அதே சமயம் அறிவியலையும் புரிந்துகொண்டு நம் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் இதுபோன்ற சூழலை எதிர்கொள்ளலாம்.

அழகிய பெரியவன் எழுத்தாளர்:

சேப்பியன்ஸ் (மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு) - யுவால் நோவா ஹராரி.

வால்காவிலிருந்து கங்கைவரை - ராகுல் சாங்கிருத்யாயன்.

புதுமைப்பித்தன் கதைகள்.

கங்கவ்வா கங்கா மாதா - சங்கர் மோகாசி புணேகர்.

தர்பாரி ராகம்- ஸ்ரீ லால் சுக்ல.

அழகிய பெரியவன்
அழகிய பெரியவன்

இப்போது இருக்கும் இந்த நெருக்கடி திடீரென வந்ததல்ல. மனித குல வரலாற்றை, பரிணாமத்தை, இந்த உலகத்தை, இந்த இயற்கையைப் புரிந்துகொள்ளப் புத்தகங்கள் உதவிசெய்யும். இந்தச் சூழலுக்கு சேப்பியன்ஸ் மற்றும் வால்காவிலிருந்து கங்கைவரை ஏற்ற நூல்கள். இந்த இயற்கையை, உலகத்தை, பரிணாமத்தை நாம் இன்னும் முழுமையாக உள்வாங்கவில்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது. எள்ளல், பகடி நிறைந்த நூல்கள் இந்தத் தருணத்துக்கு உகந்ததாக இருக்கும். பரந்த பயணம் நாம் மேற்கொள்ளவில்லை என்றாலும், இந்தியாவின் பல பாகங்களிலிருந்து எழுதியதை வாசிக்கையில் பலதரப்பட்ட மக்களின் வாழ்நிலை பற்றிய பார்வையை நமக்குக் கொடுக்கும்.

குட்டிரேவதி கவிஞர்:

புத்தரும் அவரது தம்மமும் - டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.

ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகா.

கவிஞர் தேவதேவனின் கவிதைகள் - முழுத் தொகுப்பு.

வைக்கம் முகமது பஷீரின் கதைகள், படைப்புகள்.

குட்டிரேவதி
குட்டிரேவதி

தனிமையைக் கண்டு மக்கள் பதற்றமடைகிறார்கள். தனிமையைக் கையாள்வதற்கான இயற்கையை எளிமையாகப் புரிந்துகொள்ள நூல்கள் அவசியம். நான் பரிந்துரை செய்துள்ள நூல்கள் அனைத்தும் எளிமையான நேரடியான நூல்கள். புத்தரும் அவரது தம்மமும் நூலில் புத்தரது வாழ்க்கை வரலாற்றை மிக எளிமையாக அம்பேத்கர் கூறியிருப்பார். வாழ்க்கை நெறி பேசுகிற நூல். தேவதேவனின் கவிதைகள் இயற்கையுடன் நேரடியாக உரையாடக்கூடியவை. நாம் இப்போது தனியாக இருக்கிறோம். தனிமனிதனாக இருக்கிறோம். சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். அந்த மதிப்பைப் புரிந்துகொள்ளக்கூடிய இடத்தில் இருக்கிறோம் என நினைக்கிறேன். நம்மைச் சுற்றிக் கொடிய நோய் விரட்டிக்கொண்டிருந்தாலும், இதை இப்படி நம்பிக்கையோடு, அர்த்தத்தோடு அணுகும் வாய்ப்பாகப் பார்க்கிறேன். இந்த நூல்கள் நமக்கு வாழ்வின் அந்தப் பக்கங்களைப் புரட்டிக் காட்டும்.