காபி ஓவியம் மூலம் பெண்மையின் சிறப்பை 12 மணி நேரம் செலவழித்து ஓவியமாக வரைந்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி.

மதுரை, மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் கீர்த்திகா. பேஷன் டெக்னாலஜி இறுதியாண்டு பயின்று வரும் மாணவர்.
உலக குடும்ப தினத்தை முன்னிட்டு 'Virtue Book Of World Records'க்காக, குடும்பத்தின் ஆதாரமாக விளங்கும் பெண்ணின் சிறப்பை விளக்கும் வகையில், காபியை மட்டும் பயன்படுத்தி ஒவியம் வரைந்து, புதுமையான முயற்சியெடுத்து சாதனை செய்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
160 சதுர அடி அளவுள்ள கேன்வாஸில் இந்த ஓவியத்தை அவர் வரைந்து முடித்துள்ளார். நாட்டிலேயே தனிநபர் பெரிய அளவிலான காபி ஓவியம் வரைந்தது இதுதான் என்று சொல்லப்படுகிறது.

நம்மிடம் பேசிய கீர்த்திகா, ``காபி ஆர்ட் குறித்து கொஞ்சம் தெரிந்திருந்தாலும், கடந்த கொரோனா ஊரடங்கின்போது வீட்டில் இருந்து வரைய கற்றுக்கொண்டேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒரு குடும்பத்தில் தாயே முக்கியமானவர் என்பதால், உலக குடும்ப தினத்தில், ஒரு பெண் பிறப்பதில் இருந்து கல்யாணம் செய்வது, குழந்தைகளைப் பெறுவது, குடும்பத்தை வழிநடத்துவது வரையான 11 பருவங்களை ஓவியங்களாக வரைந்தேன்" என்றார்.

இவருடைய சாதனையை அங்கீகரித்து `Virtue Book Of World Records' நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது.
கொரோனா காலத்திலும் தாய்மைக்கும் மதுரைக்கும் பெருமை தேடித் தந்துள்ளார் கீர்த்திகா.