Published:Updated:

“சிவாஜி முதல் நயன்தாரா வரை!”

“சிவாஜி முதல் நயன்தாரா வரை!”
பிரீமியம் ஸ்டோரி
“சிவாஜி முதல் நயன்தாரா வரை!”

“சிவாஜி முதல் நயன்தாரா வரை!”

“சிவாஜி முதல் நயன்தாரா வரை!”

“சிவாஜி முதல் நயன்தாரா வரை!”

Published:Updated:
“சிவாஜி முதல் நயன்தாரா வரை!”
பிரீமியம் ஸ்டோரி
“சிவாஜி முதல் நயன்தாரா வரை!”

து ஒரு பல் மருத்துவமனை. நடிகர் சிவாஜி கணேசனுக்கு, பல்லில் ஏதோ பிரச்னை. பல் மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார். ஓர் உதவியாளர் வந்து மருத்துவரின் காதோடு, `ஜெயலலிதா மேடம் வந்திருக்காங்க... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடிகை உஷா நந்தினி மேடம் வந்தாங்க. அவங்களும் வெயிட் பண்றாங்க...’ இப்படிச் சொன்னால் அந்த மருத்துவருக்குப் பதற்றம் கூடுமா, கூடாதா? மூன்று பேருமே அந்தக் காலகட்டத்தில் முக்கியமானவர்கள். அந்தச் சூழலை அவர் எப்படி சமாளித்தார் என்பது இருக்கட்டும்... பிரபலங்களைப் பார்க்க மற்றவர்கள் காத்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்; ஒரு பல் மருத்துவரைப் பார்க்க பிரபலங்கள் காத்திருக்கிறார்கள் என்றால், அவர் எந்த அளவுக்குப் புகழ்பெற்றவராக இருந்திருக்க வேண்டும்? அப்படிப் பல திரைப் பிரபலங்களுக்கு சிகிச்சையளித்த அந்தப் பல் மருத்துவர் ஜானகிராமன்! 

“சிவாஜி முதல் நயன்தாரா வரை!”

``நான் ஆவரேஜ் ஸ்டூடன்ட். ஆனா, டாக்டராகணும்னு ஆசை. மெஜுரா காலேஜ்ல தேர்டு கிளாஸ்ல பாஸ் பண்ணினேன். மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல எம்.பி.பி.எஸ்-ஸுக்கு அப்ளை பண்ணினேன். நான் எடுத்த மார்க்குக்கு கேட்டைத் தாண்டி உள்ளேயே விடலை.

அந்தக் காலகட்டத்துலதான் பி.டி.எஸ் படிப்பை ஆரம்பிச்சி ருந்தாங்க. ஆனா யாரும் பெருசா அதுல ஆர்வம் காட்டலை. அதனால அந்தப் படிப்புல சேர பெருசா போட்டியும் இல்லை. சீட் கிடைச்சுது. ஆனா, அந்தப் படிப்புல மிகப் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு இங்கிலீஷ் வேற சுத்தமா வராது. படிப்படியா எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். லீடர்ஷிப் குவாலிட்டியை வளர்த்துக் கிட்டேன். ஒரு வழியா 1962-ம் வருஷம் படிப்பை முடிச்சேன். மயிலை ரங்கநாதன் தெருவுல கிளினிக்கை ஆரம்பிச்சேன்...’’ என்றவரிடம், ``திரைத்துறைப் பிரபலங்கள் உங்களைத் தேடி வர ஆரம்பித்தது எப்படி?’’ என்று கேட்டேன்.
 
``அப்போ ராதாகிருஷ்ணன் சாலையில இருந்த மேக்கப்மேன் ஹரிபாபுகிட்டதான் எல்லா நடிகர் நடிகைகளும் மேக்கப் போட்டுக்குவாங்க. அப்ப எல்லாம் தனித்தனி மேக்கப்மேன்  கிடையாது. ஒருநாள் அந்த வழியா நான் போயிட்டிருந்தப்போ, ஹரிபாபு சார் வீட்டுக்கிட்டே மக்கள் கூட்டம் அலை மோதிக்கிட்டிருந்துச்சு. பக்கத்துல போய்ப் பார்த்தேன். நடிகர் திலகம் சிவாஜி நின்னுகிட்டிருந்தார். பலபேர் அவர்கிட்ட ஆட்டோகிராப் வாங்க அலைபாய்ஞ்சுகிட்டிருந்தாங்க. நானும் அவர்கிட்ட ஆட்டோகிராப் வாங்கினேன் . அப்போதான் நடிகர், நடிகைகளுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தா நாமும் பிரபலம் ஆகலாமேனு தோணுச்சு... அதுக்கான வாய்ப்பும் கிடைச்சுது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சிவாஜி முதல் நயன்தாரா வரை!”

என் அண்ணன் டாக்டர் நாகராஜ்  லயன்ஸ் கிளப்ல  தலைவரா இருந்தார். லயன்ஸ் கிளப் சார்பாக ஈரோட்ல நிகழ்ச்சிகள் நடத்துவாங்க. அதுல நடிகர், நடிகைகள்லாம் கலந்துக்குவாங்க. அப்படி என் அண்ணனுக்கு நடிகர், நடிகைகளையெல்லாம் ரொம்ப நல்லா தெரியும். நடிகை ஹேமமாலினி அண்ணன் மூலமாத்தான் எனக்கு அறிமுக மானாங்க. அவங்க நடிச்ச முதல் படம், `இது சத்தியம்.’ ஜி.என்.வேலுமணிதான் அதோட இயக்குநர். ஹீரோ அசோகன், ஹீரோயின் சந்திரகாந்தா. அந்தப் படத்துல ஹேமமாலினி குரூப் டான்ஸ் ஆடியிருப்பாங்க. ஹேமமாலினி யோட மாமா சீனிவாசன். ஹேமா மாலினி  ஷூட்டிங்னு எங்கே போனாலும் அவரும் போவார். அவரும் எங்க அண்ணன் நாகராஜனும் நண்பர்கள்.

ஊட்டியில `இது சத்தியம்’ பட ஷூட்டிங்கை முடிச்சுட்டு எல்லாரும் ரயில்ல வந்தாங்க. அப்போதான் ஹேமமாலினியோட  மாமாவுக்கு  அண்ணன் என்னை அறிமுகம் செஞ்சுவெச்சார். `தம்பி சென்னையிலதான் இருக்கான். நாலு பேரை அறிமுகப்படுத்திவிடுங்க’னு சிபாரிசு பண்ணினார்.அப்போ, சென்னையில ஸ்ரீபுரம் ரெண்டாவது தெருவுல குடியிருந்தாங்க. அப்போ ஆரம்பிச்ச நட்பு இன்னைக்கு வரைக்கும் தொடருது. 

“சிவாஜி முதல் நயன்தாரா வரை!”

முதல்ல என் கிளினிக்குக்கு நடிகர் ரவிச்சந்திரன் வந்தார். அப்புறம், கோபாலகிருஷ்ணன் மூலமா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பொண்ணு சாந்திக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தேன். அடுத்த நாள் சிவாஜியே ட்ரீட்மென்ட்டுக்கு வந்தார். அன்னைக்கு நான் சிவாஜிகிட்ட ஆட்டோகிராப் வாங்கின நாள் ஞாபகத்துக்கு வந்தது. மிகப்பெரிய லெஜண்டுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிறோம்கிற சந்தோஷம் உள்ளுக்குள்ள. அவர் மட்டும் இல்லை... பிரபு, விக்ரம் பிரபுனு அவங்க வீட்லேருந்து பலரும் என்கிட்ட வந்துட்டிருக்காங்க.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு `ஆயிரத்தில் ஒருவன்’ படத்துல நடிச்சதுக்கப்புறம் எட்டு வருஷம் சிகிச்சை கொடுத்திருக்கேன். முன் பல் வரிசையில இருந்த இடைவெளியை சரி பண்ண அப்பப்போ வருவாங்க. சிவாஜி வர்றது தெரிஞ்சதும், கே.ஆர்.விஜயா வந்தாங்க. `நான்  ‘புன்னகை அரசி’னு பேர் வாங்கினதுக்கு ஒருவகையில டாக்டர் ஜானகிராமன்தான் காரணம்’னு ஒரு பேட்டியில சொன்னாங்க.

“சிவாஜி முதல் நயன்தாரா வரை!”

ஜெய்சங்கர், ஜெயசித்ரா, குஷ்பு, சுந்தர்.சி, பாரதிராஜா, மனோஜ், விஷால், சித்தார்த், பரத், ஜீவன்... இப்படிப் பல பேர் என்கிட்ட வருவாங்க. நயன்தாரா, என் மருமக ரேகாகிட்ட தான் ட்ரீட்மென்ட் எடுத்துப்பாங்க. விவேக், விஜயகாந்த், பாக்யராஜ் இப்படிப் பலபேரு வருவாங்க.  என்கிட்ட ட்ரீட்மென்ட்டுக்கு வர்ற நடிகர்கள்கிட்ட அவங்க படம் பத்தியோ, அவங்க ளோட சம்பளம் பத்தியோ, அரசியல் பத்தியோ பேச மாட்டேன்...’’ என்கிற ஜானகிராமனிடம், ``உங்களுக்கு எந்த நடிகையோட பல் பிடிக்கும்?’’ என்றால், யோசிக்காமல் சட்டென்று சொல்கிறார்... ``நடிகை தீபாவோட பல்லுதான். ரொம்ப அழகா இருக்கும்.’’

இரா.செந்தில்குமார் - படம்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism