Published:Updated:

சீர்காழி : 94 வயது நாதஸ்வரக் கலைஞர் சின்னத்தம்பி பிள்ளைக்கு சங்கீத நாடக அகாடமியின் விருது அறிவிப்பு

நாதஸ்வரக் கலைஞர் சின்னத்தம்பி பிள்ளை

சீர்காழி : நாதஸ்வரக் கலைஞருக்கு அமிர்த விருது ;சங்கீத நாடக அகாடமி அறிவிப்பு!

சீர்காழி : 94 வயது நாதஸ்வரக் கலைஞர் சின்னத்தம்பி பிள்ளைக்கு சங்கீத நாடக அகாடமியின் விருது அறிவிப்பு

சீர்காழி : நாதஸ்வரக் கலைஞருக்கு அமிர்த விருது ;சங்கீத நாடக அகாடமி அறிவிப்பு!

Published:Updated:
நாதஸ்வரக் கலைஞர் சின்னத்தம்பி பிள்ளை

இந்திய நாட்டின் 75 - வது சுதந்திர தினவிழாவையொட்டி சங்கீத நாடக அகாடமி, 75 கலைஞர்களுக்கு அமிர்த விருதுகளை அறிவித்திருக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த கலைஞர்களில், இதுவரை தேசிய அளவிலான விருதுகளைப் பெறாத கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக, இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த உயரிய விருது பெறுவோர் பட்டியலில் உள்ள கலைஞர்களில் மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி அருகேயுள்ள ஆச்சாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி பிள்ளை என்பவரும் ஒருவர் . இவர் நாதஸ்வரத்தில் மல்லாரி ராகத்தைச் சிறந்த முறையில் வாசிப்பதால் மல்லாரி சின்னத்தம்பி பிள்ளை என்றும் அழைக்கப்படுகிறார்.

நாதஸ்வரக் கலைஞருக்கு அமிர்த விருது
நாதஸ்வரக் கலைஞருக்கு அமிர்த விருது

நாதஸ்வரக் கலைஞர் குடும்பத்திலே பிறந்த இவர், இவருடைய பெரிய தந்தையிடமே ஆரம்பப் பாடங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கி, தனது மேற்பயிற்சிகளை சீர்காழி திருநாவுக்கரசு பிள்ளை மற்றும் திருவீழிமிழலை மூத்த கலைஞர்களிடம் பயிற்சி பெற்றார். 

பக்க நாதஸ்வரமாக சிதம்பரம் இராதாகிருஷ்ணனுடன் இணைந்து பல ஆண்டுகள் பல்வேறு இசை நுட்பங்களையும், வாசிக்க வேண்டிய முறைகள் பற்றியும் நன்கு அறிந்த சின்னதம்பி, தில்லை சபாநாயகர் திருக்கோயில், காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வானாகவும், திருவண்ணாமலை அருணகிரிநாதர் விழா நாதஸ்வர கமிட்டித் தலைவராகவும் இருந்துவருகிறார். இவர் நாதஸ்வரத்தில் மல்லாரி, பல்லவி, மாலைமாற்றுநோட்டு, தேவாரம், திருப்புகழ், திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பல்லாண்டு, திருமொழி, திருவாய்மொழி, தட்டுச்சுற்று, மங்கலம் எனப் பல்வேறு இசை வகைகளை வாசிப்பதில் வல்லவர். 

பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரின் இசைத் திறமையை  பேரறிஞர் அண்ணாவின் தாய் பெரிதும் பாராட்டியுள்ளார். இவரின் நாதஸ்வர இசை பல்வேறு இசைப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இவைகளில் மல்லாரி என்ற இசை,"நாதமும் நாதனும் " என்ற தலைப்பில் சைவ திருத்தல இசைமரபு வாசிப்பு முறை பற்றியும், "நாதமும்-நாரயணனும்" என்ற தலைப்பில் வைணவ திருக்கோயில் இசைமரபுகளைப் பற்றியும் வாசித்து அளித்திருப்பதன் மூலம் பல இசை யுக்திகளை    வெளிப்படுத்தியிருக்கிறார். இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்று நாதஸ்வர கச்சேரி நிகழ்த்தியுள்ளார். இப்படிப் பல வகைகளிலும் சிறந்து விளங்கிய நாதஸ்வரக் கலைஞர் சின்னத்தம்பி பிள்ளைக்கு மத்திய அரசின் அமிர்த விருது மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிலேயே அமிர்த விருதைப் பெறுவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 94 வயது நாதஸ்வரக் கலைஞர் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

நாதஸ்வரக் கலைஞருக்கு அமிர்த விருது
நாதஸ்வரக் கலைஞருக்கு அமிர்த விருது

இதுகுறித்து சின்னத்தம்பி பேசுகையில்

"விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இசைக்குக் கிடைத்த விருது. பல இசைக் கலைஞர்கள் ஏழ்மையில் வாடி வருகின்றனர். ஏழைக் கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும்போது மட்டுமே வருவாய் கிடைக்கிறது. மற்ற நாள்களில் சிரமத்தில் இருந்துவருகிறார்கள் எனவே ஏழ்மையில் வாடிவரும் அனைத்துக் கலைஞர்களுக்கும் மாதந்தோறும் உதவித் தொகை அரசு வழங்க வேண்டும் "என்றார்.