Published:Updated:

இனி, எதுவுமே வேஸ்ட் இல்லை!

வே.கிருஷ்ணவேணி,   படங்கள்: ப.சரவணகுமார்

இனி, எதுவுமே வேஸ்ட் இல்லை!

வே.கிருஷ்ணவேணி,   படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
இனி, எதுவுமே வேஸ்ட் இல்லை!

‘‘எவ்வளவு விலை கொடுத்து வாங்குற பொருளா இருந்தாலும், பயன்படுத்திட்டு வீசி எறியற யூஸ் அண்ட் த்ரோ கல்ச்சர் வளர்ந்துக்கிட்டிருக்கு. இதனால, சுற்றுச்சூழல் கேடுகளுக்கு நாம காரணமாகிட்டிருக்கோம். இதுமாதிரியான பொருட்களை ரீ-சைக்ளிங் பண்றதுக்குக் கொடுக்கலாம். இல்ல... என்னை மாதிரி அலங்காரப் பொருட்களா மாத்தலாம்!’’

-  தன் வீட்டு ஷோ கேஸ் முழுக்க நிறைந்திருக்கும் கலைப்பொருட்களைக் கைகாட்டியபடி அக்கறையோடு சொல்கிறார், சென்னை, மயிலாப்பூரில் கடந்த 20 வருடங்களாக கிராஃப்ட் வகுப்புகள் எடுத்துவரும், ‘விஜயலட்சுமி ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ்’ உரிமையாளர் ஹேமலதா குமார். இவர், வீணாகும் பொருட்கள் சிலவற்றை, கலைப்பொருட்களாக, பயனுள்ளவையாக மாற்றிக்கொள்ள சில டிப்ஸ் தருகிறார் இங்கே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீபம் ஸ்டாண்ட்: உபயோகமில்லாத சி.டி-யில் 3டி கிளிட்டரால் டிசைன் வரைந்து, ஒரு மணி நேரம் காயவிடவும். காய்ந்ததும், கிளாஸ் கலர் (வாட்டர் பேஸ்) கொண்டு விருப்பம் போல் நிரப்பி, இரண்டு நாட்கள் காயவிடவும். அடிப்பாகத்துக்கு, காலியான பெயின்ட் பாட்டில்கள் (சிறிய சைஸ்) மூன்றை எடுத்துக்கொள்ளுங்கள். இதை நன்கு கழுவி, காயவைத்து, தெர்மாகோல் பால்ஸ் கொண்டு நிரப்பி, மூடிபோட்டு மூடவும். இந்த பாட்டில்களை சி.டி-யின் அடியில் முக்காலி போல் க்ளூ கொண்டு ஒட்டினால், தீபம் ஸ்டாண்ட் தயார்!

இனி, எதுவுமே வேஸ்ட் இல்லை!
இனி, எதுவுமே வேஸ்ட் இல்லை!

போட்டோ ஃப்ரேம்: நீங்கள் ஃப்ரேம் செய்ய விரும்பும் போட்டோவை, சி.டி பாக்ஸின் உட்புறம் உள்ள காகிதத்தின் அளவுக்கு வெட்டிக்கொள்ளவும். போட்டோவின் ஓரங்களில் பசை தடவி, பாக்ஸின் உட்புறமாக ஒட்டவும். பாக்ஸின் மேல் பக்கம் கிளிட்டர் பேப்பரைக் கொண்டோ அல்லது குந்தன் கற்கள் கொண்டோ அலங்கரிக்கவும். பிறகு, சி.டி பாக்ஸை லேசாகத் திறந்து மேஜை மீது வைத்தால், அழகான போட்டோ ஸ்டாண்ட் தயார்!

பூந்தொட்டி: தேவையற்ற கூல்டிரிங்க், தண்ணீர் பாட்டில்களின் வாய்ப் பகுதியில், மார்க்கர் கொண்டு பூவின் இதழ் வரைந்து, கட்டர், கத்தரிக்கோல் உதவியுடன் வெட்டிக்கொள்ளவும். மீதம் உள்ள பாட்டில் பாகத்தில் சிறிய இதழ்களை வெட்டி வைக்கவும். இந்த இதழ்களை, உட்புற அடுக்குகள் போல் க்ளூ கொண்டு ஒட்டவும். காய்ந்ததும் அக்ரலிக் பெயின்ட் அடிக்கவும். வெல்வெட் இலைகளை, கிரீன் ஃப்ளோரல் டேப் கொண்டு இணைக்கவும். மகரந்த பகுதிக்கு முத்துக்களை ஒட்டி அழகுபடுத்தவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism