Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட் -37

பச்சைப் பட்டாணி பூக்கள்... பலே வருமானம்!

கைகொடுக்கும் கிராஃப்ட் -37

பச்சைப் பட்டாணி பூக்கள்... பலே வருமானம்!

Published:Updated:
கைகொடுக்கும் கிராஃப்ட் -37

டந்த இதழில் கிளாடியோலஸ் பூக்களில் தன் கைவண்ணத்தைக் காட்டியிருந்த சென்னை, வடபழனியைச் சேர்ந்த கனிமொழி, இந்த இதழில் க்ளே பயன்படுத்தி பச்சைப் பட்டாணிப் பூ ஜாடி செய்யக் கற்றுத்தருகிறார்.

கைகொடுக்கும் கிராஃப்ட் -37

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவையான பொருட்கள்:

தாய் க்ளே - 200 கிராம், கம்பிகள், ஃபெவிக்கால், பாலித்தீன் கவர், ஆயில் கலர்கள், தெர்மாக்கோல், செராமிக் கப், ஊசி, சப்பாத்திப் பலகை, சார்ட் பேப்பர், பென்சில்.

செய்முறை:

படம் 1: க்ளேயில் வயலட் வண்ணம் மற்றும் பச்சை வண்ணம் தனித்தனியாகக் கலந்து, சப்பாத்திப் பலகையில் வைத்து தேய்த்துக்கொள்ளவும்.

படம் 2: சார்ட் பேப்பரில் படத்தில் காட்டியுள்ளபடி இலை, இதழ்களுக்கான டிசைன்களை வரைந்து, கத்தரித்து எடுத்துக்கொள்ளவும்.

படம் 3: இதழ்களுக்கான சார்ட் டிசைன்களை, தேய்த்து வைத்துள்ள வயலட் க்ளேயில் வைத்து, ஊசியால் கட் செய்து எடுக்கவும். இலைகளுக்கான சார்ட் டிசைன்களை பச்சை க்ளேயில் வைத்து, ஊசியால் கட் செய்து எடுக்கவும்.

படம் 4: கட் செய்து எடுத்த க்ளே இதழ்களைப் படத்தில் காட்டியுள்ளபடி பெரிய ஊசியின் பின்புறமாக அழுத்தி அழுத்தி ஷேப் செய்துகொள்ளவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட் -37

படம் 5: மகரந்தம் செய்ய, வயலட் க்ளேயை முந்திரி போல உருட்டி, ஊசியால் அழுத்தி அதன் நடுவில் கோடிட்டுக் கொள்ளவும். பின்பு திலகம் வடிவில் ஒரு டிசைன் செய்து, அதன் மையத்தில் இந்த முந்திரி வடிவத்தை வைக்கவும். இவற்றை ஃபெவிக்கால் தடவிய கம்பியில் செருகவும்.

படம் 6: இப்போது மகரந்தத்தைச் சுற்றி, அந்தக் கம்பியில் இரண்டு வயலட் இதழ்களை ஃபெவிக்கால் கொண்டு ஒட்டவும். ஒரு பூ தயார். இதேபோல தேவையான எண்ணிக்கையில் பூக்களைச் செய்துகொள்ளவும்.

படம் 7, 7ஏ: பச்சை க்ளேயில் பட்டாணி போல சிறுசிறு உருண்டைகள் செய்து, அதை ஒரு கம்பியில் கோத்துக்கொள்ளவும். ஒரு பச்சை க்ளே இலையை, இந்தப் பட்டாணி வரிசையைச் சுற்றி படத்தில் காட்டியுள்ளபடி ஒட்டவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட் -37

படம் 8: ஒரு நீளக்கம்பி முழுவதும் ஃபெவிக்கால் தடவி, அதன் மீது பச்சை க்ளேயை படத்தில் காட்டியுள்ளபடி கம்பி முழுவதும் சுற்றவும். நடுத்தண்டுக்கு, கிளைகளுக்கு என இதுபோல தேவையான நீளங்களில் சில கம்பிகள் செய்துவைத்துக் கொள்ளவும்.

படம் 9: பச்சை க்ளே இலைகளின் நடுப்பகுதியில் நீளவாக்கில் ஃபெவிக்கால் தடவி, பச்சைக் கம்பியை அங்கு ஒட்டவும்.

படம் 10: இப்போது நடுத்தண்டுக் கம்பியில், பூக்கள், இலைகள் செருகிய கம்பிகளைச் செருகவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட் -37

படம் 11: செராமிக் கப்பில் ஃபெவிக்காலை தடவி, தெர்மாக்கோல் வைத்து, அதன் மீது ஃபெவிக்கால் தடவி வைக்கவும். இதன் நடுவில் பீர்க்கங்காய் நாரை வைத்து, அதன் மேலே க்ளே பூக்கள், இலைகள் இணைத்த கம்பிகளை கொடி போல சுற்றிவிடவும். அழகிய பூ ஜாடி, கண்களைக் கொய்யும்!

இந்த பூ ஜாடியை 800 ரூபாய் முதல் விற்பனை செய்யலாம். எவ்வளவு நாள் ஆனாலும், நிறம் மாறாமல் இருக்கும்!

- கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...

வே.கிருஷ்ணவேணி படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism