Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்!

கண்கவர் பூக்களில் கலர்ஃபுல் வருமானம்!

கைகொடுக்கும் கிராஃப்ட்!

கண்கவர் பூக்களில் கலர்ஃபுல் வருமானம்!

Published:Updated:
கைகொடுக்கும் கிராஃப்ட்!
கைகொடுக்கும் கிராஃப்ட்!

சென்னை, வடபழனி ‘டீனா ஆர்ட் அண்ட் கிராஃப்ட்’ ஷோரூமின் உரிமையாளர் விக்டோரியா இந்த இதழிலும் டியூப்லெக்ஸ் ஷீட் பயன்படுத்தி, மற்றுமொரு அழகிய பூ செய்யக் கற்றுத்தருகிறார். ‘‘மிக மிக எளிதாக செய்யக்கூடிய, அதிகப்படியான லாபத்தை அள்ளித்தரக்கூடிய இந்தப் பூக்களுக்கு அலுவலக மேஜைகள், திருமண மேடை அலங்காரங்கள், விழாக்களின் வரவேற்பு மேஜைகள் என்று அதிக தேவை இருக்கிறது. இந்த செயற்கை மலரை, பல விழாக்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும்’’ என்ற படியே பூ செய்ய ஆரம்பிக்கிறார், விக்டோரியா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவையான பொருட்கள்:

கைகொடுக்கும் கிராஃப்ட்!

டியூப்லெக்ஸ் (Duplex) ஷீட்  - மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில், பிரவுன் கலர் டேப், போலன்கள், நூல், ஃபெவிக்கால், ஸ்டெம் கம்பி, கத்தரிக்கோல்.

செய்முறை:

படம் 1, 1a: எவ்வளவு பெரிய பூ வேண்டுமோ அதற்கேற்ற அளவில் இதழை, மஞ்சள் நிற டியூப்லெக்ஸ் ஷீட்டில், படத்தில் காட்டியுள்ளபடி மடித்து வெட்டிக்கொள்ளவும். இதேபோல பச்சை நிற டியூப்லெக்ஸ் ஷீட்டில் இலை வடிவத்தை வெட்டிக்கொள்ளவும். (இங்கு செய்யவிருக்கும் பூவுக்கு ஏற்றதுபோல இதழ்களை வெட்டியிருக்கிறோம். எவ் வளவு பெரிய, நெருக்கமான இதழ் களைக் கொண்ட பூ வேண்டுமோ அதற் கேற்ற எண்ணிக்கையில் இதழ் மற்றும் இலைகளை வெட்டிக்கொள்ளலாம்.)

படம் 2: பூவின் நடுவில் இருக்கும் போலன்கள் (மகரந்தம்), மஞ்சள், சிவப்பு, வெள்ளை எனப் பல நிறங்களில் கிடைக்கின்றன. செய்யப்போகும் பூவின் நிறத்துக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். இங்கே மஞ்சள் பூ என்பதால், சிவப்பு போலன்களைத் தேர்வு செய்திருக்கிறோம். தேவையான அளவு போலன்களை எடுத்து, ஸ்டெம் கம்பியின் ஒரு முனை மீது வைத்து, படத்தில் காட்டியுள்ளபடி நூலால் சுற்றிக்கொள்ளவும்.

படம் 3, 3a: போலன்களின் முக்கால் உயரத்துக்கு, மஞ்சள் நிற டிபூப்லெக்ஸ் ஷீட் வைத்துச் சுற்றவும். இப்போது ஷீட்டின் கீழ்ப்பகுதியை நூலால் சுற்றி முடிச்சிட, மகரந்த மொட்டு போன்ற வடிவம் கிடைக்கும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்!

படம் 4: செய்து வைத்துள்ள மஞ்சள் இதழ்களை, ஒவ்வொன்றாக போலன்களின் அடிப்பகுதியில் ஃபெவிக்கால் கொண்டு வரிசையாக ஒட்டவும்.

படம் 5: இதழ்களின் அடியில் நூலால் சுற்றி முடிச்சிட்டு, அதிலிருந்து ஸ்டெம் கம்பி முழுக்க பிரவுன்  கலர் டேப்பை ஃபெவிக்கால் தடவிச் சுற்றவும்.

படம் 6: இதழுக்கு கீழே, ஸ்டெம் கம்பியின் நடுப்பகுதியில்், செய்துவைத்துள்ள இலை வடிவத்தை ஒட்டவும்.

படம் 7: இறுதியில் பூவின் இதழ்களில் படத்தில் காட்டியுள்ளபடி பின்புறமாக அழுத்தம்கொடுத்தால், மலர்ந்த பூ போன்ற அழகிய தோற்றத்தைத் தரும்.

``இப்போது வாடாத டியூப்லெக்ஸ் மலர் தயார். இதை சிறிய டிசைனர் ஜார் அல்லது டிசைனர் பூச்சட்டிக்குள் வைத்தால், கண்களுக்கு விருந்தாகும். வேலைப்பாட்டைப் பொறுத்து, ஒரு பூவின் விலையை 100 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை நிர்ணயிக்கலாம்!’’ என்று உற்சாகமூட்டுகிறார் விக்டோரியா

- கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...

வே.கிருஷ்ணவேணி  படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism