Published:Updated:

42 கைகொடுக்கும் கிராஃப்ட்!

42 கைகொடுக்கும் கிராஃப்ட்!

42 கைகொடுக்கும் கிராஃப்ட்!

42 கைகொடுக்கும் கிராஃப்ட்!

Published:Updated:
42  கைகொடுக்கும் கிராஃப்ட்!

டாப் மோஸ்ட் அழகில்... தாய் க்ளே பூக்கள்!

42  கைகொடுக்கும் கிராஃப்ட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘விளையாட்டா கத்துக்கிட்ட இந்த கிராஃப்ட்தான் இன்னிக்கு மாசம் நாற்பதாயிரம் சம்பாதிக்கற ஒரு மினி தொழிலதிபரா என்னை மாத்தியிருக்கு!’’ - ஸ்வீட் ஸ்மைலுடன் ஆரம்பித்த நிஷாந்தினி, க்வில்லிங், டெரக்கோட்டா, ஆரி எம்ப்ராய்டரி, வாக்ஸ் ஃபுட், மினியேச்சர் ஃபுட் என கைவினைப் பொருட்களில் வருமானம் அள்ளி வருகிறார். சென்னை, வேளச்சேரியில் உள்ள ‘நிஷா ஆர்ட் அண்ட் கிராஃப்ட்ஸ்’-ல் வகுப்புகள் எடுத்து வரும் இவர், இங்கு நமக்குக் கற்றுத் தருவது... தாய் க்ளே பூக்கள்!

தேவையானவை:

42  கைகொடுக்கும் கிராஃப்ட்!

தாய் க்ளே - 200 கிராம், பாஸ்தா மெஷின், கம்பிகள், பின் டூல், ஃபெவிக்கால், பாலித்தீன் பேப்பர், ஆயில் கலர் (பச்சை, பிரவுன், மெஜந்தா மற்றும் மஞ்சள்), வாட்டர் லில்லி கட்டர், வாட்டர் லில்லி வெய்னர் (கைவினைப் பொருட்கள் கடைகளில் கிடைக்கும்), பச்சை நிற ஃப்ளோரல் டேப்.

செய்முறை: முதலில் இலைகள் செய்வோம்...

படம் 1: தாய் க்ளேயில் பச்சை நிற ஆயில் கலர் கலந்து சேர்த்துப் பிசையவும். அதில் சிறிது எடுத்து உருண்டையாக உருட்டிக்கொள்ளவும்.  

படம் 2: பச்சை கலர் க்ளேயை பாலித்தீன் கவரில் வைத்து, பாஸ்தா மெஷினில் வைத்துத் தேய்க்கவும் (பாஸ்தா மெஷினுக்குப் பதில், க்ளேயை பாலித்தீன் கவரில் வைத்து சப்பாத்திபோல தேய்த்துக்கொள்ளலாம்).

படம் 3: தேய்த்த க்ளேயில் வாட்டர் லில்லி இலை கட்டரை வைத்து இலையின் வடிவத்துக்கு கட் செய்யவும் (சிறிதும் பெரிதுமாக நிறைய இலைகள் செய்துகொள்ளலாம்).

42  கைகொடுக்கும் கிராஃப்ட்!

படம் 4: கட் செய்த இலைகளை, வாட்டர் லில்லி வெய்னரில் வைத்து லேசாக அழுத்தவும்.

படம் 5: பின் டூலை (Pin Tool) பயன்படுத்தி இலையின் ஓரங்களில் வைத்து லேசாகத் தேய்க்கவும். இப்போது இலையானது வளைவு நெளிவுகளுடன் அழகாக மாறும்.

படம் 6: இலையில் கம்பியை கிரீன் கலர் க்ளேவால் ஒட்டிக்கொள்ளவும். பிறகு, க்ளேயுடன் பிரவுன் நிற ஆயில் கலர் கலந்து பிசைந்து, அதைக் கம்பியின் மீது சுற்றவும். இப்போது தண்டு தயார்.

மகரந்தம் செய்வோமா...

படம் 7: க்ளேயுடன் மஞ்சள் நிற ஆயில் கலர் கலந்து, அதை நீள் வட்ட வடிவில் சிறியதாகச் செய்து, கம்பியில் ஒட்டவும்.

படம் 8: இதே மஞ்சள் க்ளேயை சிறிது சிறிதாக எடுத்து கையில் வைத்து உருட்டி நிறைய பீஸ்கள் செய்துகொள்ளவும்.

படம் 9: இதை ஃபெவிக்கால் பயன்படுத்தி, செய்து வைத்துள்ள நீள்வட்ட வடிவ க்ளே மீது இரண்டு அடுக்குகளாக ஒட்டவும்.

படம் 10: முதல் அடுக்கு குவிந்திருப்பது போலவும், வெளியே உள்ள அடுக்கு விரிந்திருப்பது போலவும் வைத்து, முனையில் பிரவுன் நிற கோட்டிங் கொடுத்தால்... மகரந்தம் பார்க்க அழகாக இருக்கும்.

42  கைகொடுக்கும் கிராஃப்ட்!

இதழ்கள் செய்யலாம் வாங்க...

படம் 11, 12: க்ளேயில் மெஜந்தா நிற ஆயில் கலர் கலந்து, இலைக்கு செய்தது போலவே பாஸ்தா மெஷினில் வைத்துத் தேய்க்கவும். இதை வாட்டர் லில்லி இதழ் கட்டரில் வைத்து சிறிதும் பெரிதுமாக இதழ்களை கட் செய்து கம்பியில் செருகிவிடவும்.

படம் 13: இதழ்களை மகரந்தத்தின் மீது வைத்து செட் செய்து, தண்டுப் பகுதியை ஃபுளோரல் டேப் போட்டு சுற்றிவிடவும். (பெரிய பூக்கள் செய்வதாக இருந்தால், இதே போல் இதழ்களை மூன்று அடுக்குகளாக வைத்து, ஒவ்வொரு அடுக்குக்கும் டேப் வைத்துச் சுற்றவும்).

படம் 14: இறுதியாகத் தண்டின் மீது பிரவுன் கலர் க்ளேயைச் சுற்றி ஒட்டிவிட்டால்... உங்கள் அழகான வாட்டர் லில்லி சிரிக்கும்.

’’வாவ் சொல்ல வைக்கும் இந்த தாய் க்ளே வாட்டர் லில்லி ரியல் பிளஸ் ரிச் லுக்குடன் இருப்பதால், அட்ராக்டிவ் கிஃப்ட் பொருளாகி பார்த்தவுடன் வாங்க வைக்கும். நிறைய பூக்கள் செய்து பொக்கே ஆக்கினால், 1,500-ல் இருந்து 1,800 ரூபாய் வரை விலை போகும். தாய் க்ளேயில் வாட்டர் லில்லி போன்றே ரோஸ், டூலிப்ஸ் என பல பூக்கள் செய்யலாம்.  வீட்டின் அழகு, வருமானம்... இரண்டுக்குமே ஏற்றவை இந்தப் பூக்கள்!’’ என்று அக்கறையுடன் ஊக்குவிக்கிறார் நிஷா!

- கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...

தி.கௌதீஸ்

படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism