Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்!

ஸ்மாக்கிங் பில்லோ... ஸ்மார்ட் பிசினஸ்!

கைகொடுக்கும் கிராஃப்ட்!

ஸ்மாக்கிங் பில்லோ... ஸ்மார்ட் பிசினஸ்!

Published:Updated:
கைகொடுக்கும் கிராஃப்ட்!

சாட்டின் துணியில் எளிமையாக ஸ்மாக்கிங் பில்லோ செய்யக் கற்றுத்தருகிறார், சென்னை, அண்ணாசாலை, 'ஹாபி அகாடமி’யின் உரிமையாளர் லதா தணிகாசலம்!

தேவையான பொருட்கள்:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாட்டின் துணி  அரை மீட்டர், ஊசி, நூல், இன்ச் டேப், கத்தரிக்கோல், பஞ்சு, மார்க்கிங் சாக் அல்லது பென்சில்.

கைகொடுக்கும் கிராஃப்ட்!

செய்முறை:

படம் 1: 22 செ.மீ. நீள, அகலத்தில் சாட்டின் துணியை சதுர வடிவத்தில் கத்தரித்து எடுத்துக்கொள்ளவும். (சதுர வடிவம் சரியாக இருந்தால்தான் பாக்ஸ் போன்ற அமைப்பு கிடைக்கும்... கவனம்).

படம் 2, 2கி: நான்கு புறமும், வெளியிலிருந்து உட்புறமாக ஐந்து இன்ச் இடைவெளி விட்டு உட்பக்கம் குறித்துக்கொள்ளவும். இப்போது நடுவில் 12 இன்ச் அகலம், 9 இன்ச் நீளம் என்ற அளவில் குறித்து, அதைக் கட்டமாக்கவும்.

படம் 3: 12 இன்ச் அகலத்தை, மூன்று 4 இன்ச்சுகளாகப் பிரித்து, அனைத்திலும் பென்சிலால் 4 என்று குறிக்கவும்.

படம் 4: 9 இன்ச் நீளத்தை, மூன்று 3 இன்ச்சுகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் பென்சிலால் 3 என்று குறிக்கவும். படத்தில் காட்டியுள்ளதுபோல குறித்த அளவுகளைக் கட்டங்களாக வரைந்துகொள்ளவும்.

படம் 5: நான்கு மூலையிலிருக்கும் கட்டங்களிலும் X போடவும்.

படம் 6, 6கி: ஒரு X ன் நான்கு முனையையும் தனித்தனியாக ஒவ்வொன்றாக நூலால் கோத்து, இறுதியில் நூலை இழுத்தால் பூ போன்ற வடிவம் கிடைக்கும். அதை முடிச்சிட்டு லாக் செய்யவும்.

படம் 7: இதேபோல, நான்கு மூலையிலிருக்கும் X களையும் தனித்தனியாகச் செய்துகொள்ளவும்.

படம் 8: படத்தில் உள்ள அமைப்பு வந்திருக்க வேண்டும். இந்த அமைப்பில் முதலில் X ன் பாயின்ட் 1, பாயின்ட் 2, பாயின்ட் 3, பாயின்ட் 4 அனைத்தும் இணைந்தது போல இருக்கும்.

படம் 9: இப்போது இந்த வடிவம் கிடைத்தால் சரியாக செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

படம் 10: இப்போது நடுவில் இருக்கும் பகுதியை இணைத்து நூலைக்கொண்டு கோத்து முடிச்சிட்டு லாக் செய்யவும். அதாவது இது நாம் ஏற்கெனவே குறித்த அகல அளவான 12 இன்ச் பகுதி.

படம் 11: அடுத்ததாக, 9 இன்ச் பகுதியினை முன்னே சொன்னபடி ஊசியால் கோத்து முடிச்சிட்டு லாக் செய்யவும்.  

கைகொடுக்கும் கிராஃப்ட்!

படம் 12: கோத்து முடித்த பகுதி படத்தில் காட்டியுள்ளபடி இருக்கும்.

படம் 13: படத்தில் கையால் சுட்டிக்காட்டியிருப்பதுபோல நான்கு புறத்திலும் இது போன்ற அமைப்பு வந்திருக்க வேண்டும்.

படம் 14: படத்தில் காட்டியுள்ளபடி, கிளாத்தின் ஒரு மடிப்புக்கு மேல் அடுத்த மடிப்பை வைத்துக்கொள்ளவும்.

படம் 15: பின்பு, இங்கே காட்டியுள்ளபடி ஓரமாக குண்டூசியை வைத்து பின் செய்யவும். இதே போல, நான்கு புறங்களிலும் துணியை மடக்கி குண்டூசியினால் பின் செய்துகொள்ளவும்.

படம் 16: இப்போது இந்த சாட்டின் கிளாத் மெஷினில் வைத்துத் தைக்கத் தயாராக இருக்கிறது.

படம் 17: அதை அப்படியே திருப்பினால், இங்கே காட்டியுள்ளது போன்ற அழகிய வடிவம் கிடைத்துவிடும்.

படம் 18: தலையணைக்குள் வைக்கக்கூடிய காட்டனை தயார் செய்வதற்கு முன்பு, இப்போது தயாராக உள்ள இந்த சாட்டின் வொர்க்கின் அளவை வைத்து மற்றொரு பிளெய்ன் சாட்டின் துணியை கட் செய்து, டிசைன் செய்யப்பட்ட சாட்டின் துணி மற்றும் பிளெய்ன் சாட்டின் துணியின் மூன்று பக்கங்களை மட்டும் இணைத்து தையல் மிஷினில் தையல் விட்டுக்கொள்ளவும்.

படம் 19: திறந்திருக்கும் பகுதியில் காட்டனை உள்ளே நுழைத்து நிரப்பவும்.

படம் 20: எக்ஸ்ட்ரா துணி வெளியில் தெரியாத அளவுக்கு உட்பக்கம் தள்ளி ஊசி, நூலால் தைத்துக் கொள்ளவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்!

அழகிய ஸ்கொயர் சாட்டின் தலையணை தயார்!

"50க்கும் மேற்பட்ட சாட்டின் தலையணை டிசைன்களைச் செய்யலாம். குறைந்தபட்சம் 15 டிசைன்கள் கற்றுக்கொண்டால், கிரியேட்டிவிட்டியால் ரவுண்ட், சிலிண்டர், ஸ்கொயர் என அதையே 30 டிசைனாக மாற்றலாம். ஒரு பில்லோ செய்ய 50 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால், பில்லோவை 250  300 ரூபாய் வரை விற்கலாம். நல்ல லாபம்தானே?!''  புன்னகையுடன் கேட்கிறார் லதா.

கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...

வே.கிருஷ்ணவேணி படங்கள்: எம். உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism