Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 48

டிசைனர் நெக்லஸுக்கு இருக்கு... டிமாண்ட்!சு.சூர்யா கோமதி, படங்கள்: எம்.உசேன்

பிரீமியம் ஸ்டோரி

‘‘சின்ன வயசுல இருந்தே கிராஃப்ட் ஆர்வம். கல்லூரி படிக்கும்போது நிறைய கிராஃப்ட் வகைகளை முறையா கத்துக்கிட்டு என்னை நானே மெருகேத்திக்கிட்டேன். இன்னிக்கு நிறைய பேருக்கு ஹேண்ட்வொர்க்ஸ் கத்துக்கொடுத்த கிராஃப்ட் டீச்சர் நான். பொதுவா, பொழுதுபோக்கைவிட வருமானத்துக்கு கைகொடுக்கும் கிராஃப்ட் வேலைகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுத்துக் கத்துக் கொடுப்பேன். அதில் ஒன்றுதான்... டிசைனர் நெக்லஸ்!’’ எனும் சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த பவித்ரா, இங்கு செய்யக் கற்றுத் தருவதும் டிசைனர் நெக்லஸே!

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 48

தேவையான பொருட்கள்:
 
ஸ்கேல், கியர் ஒயர் - 2 மீட்டர், கியர் லாக் - 2, பேக் செயின் - ஒன்று, ரோஸ் கலர் குந்தன் மணி - ஒன்று, வளையம் - 2, ஹெட்பின் - ஒன்று, நெக்லஸ் செட் - (40 சிங்கிள் ஸ்டோன், ஒரு டாலர் கொண்ட நெக்லஸ் பாக்ஸ் - 180 ரூபாய். ஃபேன்ஸி ஸ்டோர்களில் கிடைக்கும்), கட்டர், பிளேயர்.


செய்முறை:

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 48

படம் 1: இரண்டு மீட்டர் கியர் ஒயரை ஸ்கேலில் சுற்றி இரண்டாக மடித்துக்கொள்ளவும்.

படம் 2: சிங்கிள் ஸ்டோன் உள்ள J போன்ற வளைவுப் பகுதி நெக்லஸின் உள்பக்கம் வருமாறு வைத்து, விரும்பும் வடிவில் முதலில் நெக்லஸின் மாடலை செய்து பார்க்கவும். இது ஸ்டோனை கியர் ஒயரில் சரியாக கோக்க உதவியாக இருக்கும்.

படம் 3: மடித்து வைத்துள்ள கியர் ஒயரில், பேக் செயினை கோக்கும் வகையில் வளையம் உள்ள சிங்கிள் வொயிட் ஸ்டோனை முதலில் கோக்கவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 48

படம் 4: ஸ்டோன்களின் பின்புறத்தில் மேலும் கீழுமாக இரு துளைகள் இருக்கும். மடிக்கப்பட்டிருக்கும் கியர் ஒயரை மேல் துளையில் ஒன்று, கீழ் துளையில் ஒன்று எனச் செலுத்தவும்.

படம் 5: பிறகு J வடிவ சிங்கிள் ஸ்டோனை படத்தில் காட்டியுள்ளது போல் அடுத்தடுத்து வைத்து கோக்கவும்.

படம் 6: இந்த ஸ்டோன்களில் 20 ஸ்டோன்களை வலதுபுறம் கோத்து முடித்ததும், இரு துளை உடைய பெரிய ஸ்டோன் வைத்த டாலரைக் கோக்கவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 48

படம் 7: இப்போது மீதமுள்ள 20 ஸ்டோன்களையும் டாலருக்கு அடுத்து வைத்துக் கோத்து முடிக்கவும்.

படம் 8: இறுதியாக பேக் செயின் கோக்கும் வகையில் வளையம்கொண்ட சிங்கிள் வொயிட் ஸ்டோனை கோத்துவிடவும்.

படம் 9: அதில் கியர்லாக்கை கோத்து கட்டர் உதவியுடன் நன்கு டைட் செய்து மீதம் உள்ள ஒயரை கட் செய்துவிடவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 48

படம் 10: சிங்கிள் ஸ்டோனில் பேக் செயின் மாட்ட கொடுத்துள்ள துளையில் வளையம் கொண்டு பேக் செயினை கோத்து நன்கு அழுத்திவிடவும்

படம் 11: சிங்கிள் ரோல் குந்தன் மணியின் உள்ளே ஹெட்பின்னை மடித்து விட்டு, டாலரின் கீழ் உள்ள வளையத்தில் மாட்டிவிடவும். இப்போது கண்ணைக் கவரும் ஃபேன்ஸி நெக்லஸ் ரெடி.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 48

``இந்த நெக்லஸ் செய்ய குறைந்தது 200 ரூபாய் செலவாகும். டிசைனைப் பொறுத்து 500 ரூபாய் வரை விலை வைக்க முடியும். ஆர்டர் எடுத்துச் செய்யும்போது கழுத்தின் அளவைப் பொறுத்து ஸ்டோன்களை அதிகரிப்பது, குறைப்பது, ஆடைக்கு ஏற்ற நிறங்கள்னு செய்துகொடுத்தா, கஸ்டமர்கள் ரெகுலர் கஸ்டமர்கள் ஆகிடுவாங்க. கிராண்டா வேணும்னு நினைக் கிறவங்களுக்கு கோல்டன் பீட்ஸ் பயன்படுத்துறது, சிம்பிளா வேணும்னு கேட்கிறவங்களுக்கு சிங்கிள் ஸ்டோன் களை பயன்படுத்துறதுனு கைவேலையில் கற்பனைத் திறனைச் சேர்த்தா... வருமானம் வளம்தான்!’’ என்கிறார் பவித்ரா.

- கிராஃப்ட் கிளாஸ் தொடரும்..

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு