Published:Updated:

வீடியோ லேடியோ

வீடியோ லேடியோ

கூகுளைவிட, 'யூடியூப்'தான் இப்போ உலகின் நம்பர் ஒன் சர்ச் இன்ஜின்! யூடியூபில் எக்கச்சக்க ‘லேடீஸ் ஸ்பெஷல்’ சேனல்கள் இருக்கின்றன. அவற்றின் ஷார்ட் அண்ட் ஸ்வீட் பிளே இங்கே..!

வீடியோ லேடியோ

கிளிப்கோ (Clipko)

‘ஏன் இவ்வளவு லேட்?’, ‘எதுக்கு இந்த டிரெஸ் போட்ட?’, ‘போன்ல யார்கிட்ட பேசிட்டு இருக்க?’ - இப்படி ஒரு பெண் அன்றாடம் எதிர்கொள்ளும் கேள்விகள் அன்லிமிடெட். மாறாக, ஒரு பெண் எல்லா விஷயங்களிலும் கேள்வி கேட்டால்? இந்த ஜாலி கற்பனைக்கு ஹோலி வண்ணம் கொடுத்திருக்கிறார் ‘இண்டியன் கேர்ள்’ என்று அழைக்கப்படும் சிரிஷ்டி குக்ரேஜா! ‘மேகில நச்சு இருக்குனு கண்டுபிடிக்க எதுக்கு இவ்ளோ வருஷம் ஆனது?', ‘நம்ம நாடு மதச்சார்பற்ற நாடா?’ - இப்படியெல்லாம் அந்தப் பெண்  கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் செம ஷார்ப்!

மாடர்ன் பெண்களுக்கு சமுதாய அக்கறை இல்லைனு யாருப்பா சொன்னா?

வீடியோ லேடியோ

சரண்யா’ஸ் கிராஃப்ட்ஸ் (Saranya's crafts)

சரண்யா இதுவரை அப்லோட் செய்திருக்கும் ஒவ்வொரு வீடியோ வையும் ஆவரேஜாக 1 லட்சம் பேர் பார்க்கிறார்கள். 2011-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனலுக்கு இதுவரை 6 ஆயிரம் சந்தாதாரர்கள். உலகமே மறுசுழற்சி எனப்படும் ரீசைக்ளிங் பயன்பாட்டு முறைக்கு மாறிவரும் வேளையில் இவரது பிரத்யேக ‘ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட்’ வொர்க்குகள் அசத்தல் ரகம். வேஸ்ட் பொருட்களை கலைப்பொருட்கள் ஆக்கிவிடுகிறார். அப்புறம் என்ன... குப்பைக்கு `குட்பை' சொல்லிட்டு ஆர்ட்டுக்கு வெல்கம் சொல்ல, யூ ஜஸ்ட் ஃபாலோ சரண்யா!

வீடியோ லேடியோ

தமிழ் விருந்து (Thamil virundhu)

எவ்வளவு `மிஸ்/ மிஸஸ் கூல்' பெண்ணையும் கடுப்படிக்கச் செய்யும் ஒற்றைக் கேள்வி... ‘சாப்பாடு ஏன் இவ்ளோ லேட்?'. ஒவ்வொரு பெண்ணையும் விடாது கருப்பாய் துரத்தும் கேள்வி... ‘இன்னிக்கு என்ன சமைக்கிறது?’! ரெண்டுக்கும் பதில் சொல்லுது இந்த டேஸ்ட்டி டிரெண்டி சேனல்! இந்திய உணவுகளானாலும் சரி, மேற்கத்திய உணவுகளானாலும் சரி... ‘தமிழ் விருந்து’ செம கைடு. தமிழில் சமையலைப் பற்றிய 360 டிகிரி பார்வை இது. கேர்ள்ஸ், கய்ஸ், ஜென்டில்மென், லேடீஸ் யாரும் பார்க்கலாம்...சமைக்கலாம்... ருசிக்கலாம்!

வீடியோ லேடியோ

உமன் இன் தி வேர்ல்ட் (women in the world)

பெண்கள் தனித்தனி தீவுகளாக பிரிந்து கிடக்கும் வரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து கொண்டேதான் இருக்கும். ‘உமன் இன் தி வேர்ல்ட்’ சேனல் உலகப் பெண்களை ஒன்றிணைக்கிறது!

டீனா பிரவுன் என்ற பல்துறை கலைஞரால் உருவாக்கப்பட்ட இந்த சேனல், உலகெங்கிலும் உள்ள பெண்களின் குரலை மேடை ஏற்று கிறது. உளவியலில் தொடங்கி, ‘இந் தியாவின் மகள்’ ஆவணப் படம் தடை செய்யப்பட்டது வரை ஒன் அண்ட் ஒன்லி பெண்கள் பிரச்னை களை விவாதிக்கிறது. ‘உங்கள் மனைவியின் பெயரை உங்கள் பெயருக்குப் பின் சேர்ப்பீர்களா?’ என ஆண்களிடம் கேட்பது, `ஐ.எஸ்.ஐ.எஸ்' குறிவைத்திருக்கும் பெண்ணான வியான் டகீல் பேட்டி என பெண்கள் மிஸ் பண்ணவே கூடாத சேனல் இது!

- லோ.சியாம் சுந்தர்

அடுத்த கட்டுரைக்கு