புரொஃபைல்!

ஐயாம் தர்ஷினி. திருச்சி, ஜமால் முகமது காலேஜ்ல ஃபேஷன் டெக்னாலஜி இறுதி ஆண்டு மாணவி. பார்ட்டைமா, ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட், கிராஃப்ட், பியூட்டிஷியன், ஹெர்பல் பியூட்டி புராடெக்ட்ஸ் தயாரிப்புனு பல வேலைகள் பார்த்து, மாசம் 30,000 வரை சம்பாதிக்கிற பலே பொண்ணு!

எப்படி இதெல்லாம்?!

காலேஜ் விட்டு வந்ததும், டி.வி, ஃபேஸ்புக், வாட்ஸ்அப்னு துளியும் நேரத்தை வேஸ்ட் செய்யத் தெரியாது. ஆரி வொர்க், குந்தன் வொர்க், மெஷின் எம்ப்ராய்டரி, ஹேண்ட் எம்ப்ராய்டரி, சாரி பெயின்ட்டிங், களிமண் (டெரகோட்டா) ஜுவல்ஸ், க்வில்லிங் ஜுவல்ஸ், டால் மேக்கிங், கிளாஸ் பெயின்ட்டிங், நிப் பெயின்ட்டிங், கிரீட்டிங் கார்டு டிசைனிங்னு கிராஃப்ட்டில் கரைஞ்சிடுவேன்!

லிஸ்ட் முடிஞ்சிருச்சா?

இன்னும் இருக்கே! நான் ஒரு பியூட்டிஷியனும்கூட. முகூர்த்த சீஸனில் தர்ஷினி ரொம்ப பிஸி. அப்புறம், ஹோம்மேடு பியூட்டி புராடக்ட்களைத் தயாரிக்கிறேன். பாசிப்பயறு, கடலைப்பருப்பு, வெள்ளரி விதையைக் காயவெச்சு அரைச்சு செஞ்ச ஃபேஸ்பேக் பவுடர், ஹென்னா மிக்ஸ், நேச்சுரல் ஸ்கிரப்னு நான் தயாரிக்கிற பொருட்களுக்கு காலேஜ்ல ஃப்ரெண்ட்ஸ், புரொபசர்ஸ், அக்கம்பக்கம்னு எல்லோரும் ரெகுலர் கஸ்டமர்ஸ். தவிர, மெழுகுவத்தி தயாரிப்பும் செய்றேன். அப்புறம்... திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள சில கல்லூரிகள், கடைகள், நரிக்குறவர் பெண்களுக்கு கிராஃப்ட் கிளாசஸ் எடுக்கிறேன்!

டைம் மேனேஜ்மென்ட்?

கேள்வியிலேயே பதில் இருக்கே... டைம் மேனேஜ்மென்ட்தான்!

வருமானம்?

ஆர்டர்களைப் பொறுத்தது. பொதுவா மாசம் 30,000 ரூபாய்! என்ன ஆச்சர்யப்படுறீங்க... நான் ஒரு குட்டித் தொழிலதிபருங்க. நீங்களும் ஆகலாமே!

சந்தோஷம்?

என் வருமானத்தில் என்னோட காலேஜ் ஃபீஸ் மட்டுமில்லாம, என கல்லூரியில் படிக்கிற பொருளாதாரத்துல பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பொண்ணுக்கும் நான் ஃபீஸ் கட்டிட்டு வர்றேன். என்னோட ஃப்ரெண்ட்ஸுக்கு, ‘நீங்களும் கத்துக்கோங்கப்பா!’னு எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை கற்றுத் தர்றேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு!

பியூட்டிஃபுல் தர்ஷினி!

ரா.நிரஞ்சனா படங்கள்: தே.தீட்ஷித்