ஓவியங்கள்: சேகர்

வாசகிகள் பக்கம்

ஒரே பிளக்... நிறைய ஷாக்!

தன் வீட்டிலிருக்கும் மிக்ஸி, வாட்டர் ப்யூரிஃபையர், வெந்நீர் தயாரிக்கும் இமர்ஷன் ராட் என அனைத்துக்கும் ஒரே பிளக் பாயின்ட்டைத்தான் பயன்படுத்துவாள் என் தோழி. ஒரு நாள் ஏதோ நினைவில், வாட்டர் ப்யூரிஃபையர் பிளக் என நினைத்து, வெந்நீர் போடும் இமர்ஷன் ராடின் பிளக்கை சுவிட்ச் பாயின்ட்டில் செருகிவிட்டு, வேறு வேலையில் மூழ்கிவிட்டாள். சிறிது நேரம் கழித்து மீண்டும் சமையலறைக்குச் சென்றவள்... சூட்டுக்கோல் போல் பழுத்துக் கிடந்த இமர்ஷன் ராடைப் பார்த்து அதிர்ந்திருக்கிறாள். மிக அருகில் கேஸ் ஸ்டவ் வேறு. 'ஒருவேளை அந்த சூடு, ஸ்டவ் வரைக்கும் பரவி, ஏடாகூடமாக வேறு ஏதாவது ஆகியிருந்தால்...' என்று பதறியவள், சுதாரிப்புடன் மெயின் ஸ்விட்ச்சை ஆஃப் செய்துவிட்டு, இமர்ஷன் ராடை நீக்கியிருக்கிறாள்.

எலெக்ட்ரிக் பொருட்களின் ஆபத்தை உணர்ந்து, எந்தச் சூழ்நிலையிலும் அலட்சியம் இல்லாமல் அலர்ட்டாக இருப்பது முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

- சியாமளா ராஜகோபால், சிட்லபாக்கம்

மிரள வைத்த 'மிஸ்டுகால்’!

துக்க வீடு ஒன்றில் இருந்ததால், என் செல்போனுக்கு வந்த அழைப்புகளை சரியாகக் கவனிக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து மொபைலை எடுத்துப் பார்த்தபோது... ஒரே நம்பரிலிருந்து நான்கு 'மிஸ்டுகால்’கள். புது நம்பராக இருந்ததால்... அவசரமாக யாரும் அழைத்திருப்பார்களோ என்று பதற்றத்துடன் அந்த நம்பரை டயல் செய்தேன். எதிர்முனையில் பேசியவர் ஏதோ பெயரைச் சொல்லி கேட்க, 'ராங் நம்பர்' என்று தெரிந்தது. என்றாலும், அவர், கட் செய்யாமல், என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்க, நானும் பதற்றத்தில் பெயர், ஊர் என அனைத்தையும் ஒப்பித்துவிட்டேன். அதற்குப் பிறகுதான் அவஸ்தையே! தினமும் அந்த நம்பரிலிருந்து நேரம் கெட்ட நேரங்களில் போனில் பேசி தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டான் அந்த நபர். விஷயத்தை என் கணவரிடம் சொல்ல, அந்த நம்பருக்கு போன் செய்து அவர் கண்டித்த பின்புதான் விட்டது தொல்லை.

'மிஸ்டுகால்’களை மீண்டும் அழைக்கும்போது, நிதானத்துடன் பேசுவதும், தேவையற்ற தகவல்களை தராமல் இருப்பதும் இதுபோல ஆபத்துக்கு வாசல் கால் வைக்காமல் காக்கும் என்பதை இதன் மூலம் உணர்ந்து கொண்டேன்!

- மெர்லின், சேலம்

நம்பர் ப்ளீஸ்!

என் அம்மா, அலுவலக வேலை காரணமாக குடும்பத்தை விட்டு, தனியாக வசிக்கிறார். சமீபத்தில் ஊருக்கு வந்துவிட்டு, வேலை பார்க்கும் ஊருக்கு இரவு பயணமாகச் சென்றார். எப்போதும் ஊருக்குப் போய் சேர்ந்ததும் உடனே போன் செய்து, தகவலை சொல்லிவிடுவார். ஆனால் இம்முறை மதியம் ஆன பின்பும் போன் வரவில்லை. அவருடைய நம்பருக்கு போன் செய்தால்... நோ ரெஸ்பான்ஸ். மீண்டும் மீண்டும் போன் செய்து அலுத்துப் போனது. 'எங்காவது ஆக்ஸிடன்ட்... உடம்புக்கு ஏதாவது..?' என்றெல்லாம் மனம் பதைபதைத்தது. அவருடைய அலுவலகத்துக்கோ... பக்கத்து வீட்டுக்காரர்களுக்கோ போன் செய்யலாம் என்றால்... எந்த நம்பரும் தெரியவில்லை. அரண்டுபோன நாங்கள், ஒரு வழியாக அந்த ஊரில் குடியிருக்கும் நண்பர் ஒருவரைப் பிடித்து, அம்மாவின் அலுவலகம் சென்று பார்த்து வரச் சொன்னோம். அவர் போய் சொன்னதும்தான், தான் தங்கியிருக்கும் வீட்டிலேயே போனை வைத்துவிட்டு வந்த விஷயம் என் அம்மாவுக்கு தெரிந்திருக்கிறது.

வெளியூரில் தனியாக தங்கியிருப்பவர்கள்... பக்கத்து வீடு, அலுவலக நண்பர்கள் என்று சிலருடைய போன் நம்பரை வீட்டில் கொடுத்து வைத்திருப்பது, எப்போதும் கை கொடுக்கும், மறக்காதீர்கள்!

- தென்றல், திருச்சி

குறட்டை... கொலை!

எழுபது வயதான என் அம்மா, குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். நாங்களோ சுவாரஸ்யமாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் அம்மாவைக் கவனித்த அக்கா பையன், ''பாட்டி... உன் தொந்தரவு (குறட்டை) தாங்க முடியல'' என்றவாறு, ஷோ கேஸ்-ல் இருந்த பேண்ட் எய்ட்-ஐ எடுத்து, அம்மாவின் மூக்கில் வைத்து அழுத்திவிட்டான். ''ஐயோ... திருடன்... திருடன்... என்னைக் கொல்லப் பார்க்கிறான்!'' என்று அம்மா அலற, நாங்கள் ஓடி வந்து பார்த்து, பையனை விலக்கிவிட்டு, அம்மா வுக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினோம். குறட்டைக்காகப் பயன்படுத்தப் படும் 'நோஸ் ஸ்ட்ரிப்' என நினைத்து பேண்ட் எய்ட்-ஐ அம்மாவின் மூக்கில் வைத்து அழுத்தியிருக்கிறான். அந்த சமயத்தில் என் அம்மா, கெட்ட கனவில் இருக்க... களேபரமாகிவிட்டது.

மருந்து, மாத்திரை மற்றும் அதுதொடர்பான சாமான்களை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைப்பதுடன், டி.வி. பிரியர்கள் ஸ்கிரீனுடன் ஒன்றிக் கிடக்காமல், வீட்டில் உள்ள வாண்டுகள் மீதும் ஒரு கண் வைப்பது முக்கியம் என்பதை உணர்ந்தோம்!

- சாந்தி, சென்னை-17